04-18-2004, 09:43 AM
கருணாவின் இருப்பிடம் குறித்து தொடர்ந்து ஊகங்கள்3 பேர் மட்டுமே உடனிருப்பதாகத் தெரிவிப்பு
மட்டக்களப்பிலிருந்து தப்பிச் சென்ற கருணாவுடன் தற்போது மூýவர் மட்டுமே இருப்பதாகவும், ஏனையவர்களை அவர் கைகழுவி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாவும், அவருடன் சுமார் 15 பேரும் தொப்பிக்கல காட்டிýலிருந்து வாகனங்கள் மூýலம் மின்னேரியா இரானுவ முகாமுக்குச் சென்றே அங்கிருந்து இவர்கள் தரை வழியாக கொழும்புக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை மின்னேரியா இரானுவ முகாமிலிருந்து படையினரின் பலத்த பாதுகாப்புடன், கிழக்கு மாகாணத்தின் முக்கிய அரசியல்வாதியொருவரே கொழும்புக்கு கூýட்டிýச் சென்றுள்ளார்.
கருணாவுடன் கொழும்புக்கு வந்து பின்னர் கைவிடப்பட்ட நிலையில் தற்போது மட்டக்களப்புக்குச் சென்றுள்ள போராளி ஒருவரே இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது கருணா அவரது பேச்சாளர் வரதன், கருணாவின் மகளிர் படையணித் தளபதி நிலாவினி, மகளிர் படையணியைச் சேர்ந்த தீந்தமிழ் ஆகியோரே ஒன்றாகத் தலைமறைவாகியுள்ளனர்.
மின்னேரியா இரானுவ முகாமுக்கு வந்த மேற்படிý அரசியல்வாதி (தற்போது எம்.பி.) கருணாவையும் அவரது சகாக்களையும், படையினரின் ப10ரண பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கூýறப்படுகிறது.
கருணாவுடன் தற்போது தலைமறைவாகியுள்ள மேற்படிý மூýவரும் ஒரு வாகனத்தில் சென்ற அதேநேரம் ஏனைய, பத்திற்கும் மேற்பட்டோர் வேறு வாகனங்களில் கொழும்புக்குச் சென்றுள்ளனர்.
கருணா பின்னர் தங்களுடன் எதுவிதத் தொடர்பையும் மேற்கொள்ளவில்லை என்றும் தங்களை அழைத்து வந்த படையினர் பின்னர் ஹோட்டலொன்றில் தங்களை தங்க வைத்துவிட்டுச் சென்ற போதும் பின்னர் தங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை எனவும் அந்தப் போராளி தெரிவித்தார்.
தாங்கள் கருணாவுடனும், ஏனையோருடனும் தொடர்புகளை மேற்கொள்ள முயன்றபோதிலும் பின்னர் அது சாத்தியப்படாது போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹோட்டலில் துரை, விசு, ஜிம்ஹெலித் தாத்தா, ராபர்ட், திருமால், நிஸாம், சுதா உட்பட பத்துப் பேர் தங்கியிருந்தபோதும் கருணாவோ அல்லது படையினரோ இவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை.
கருணாவால் தாங்கள் கைவிடப்பட்டதை உணர்ந்த இவர்கள் தற்போது புலிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்துள்ளனர்.
இதேவேளை, கருணாவின், மூýத்த சகோதரனும் வாகரைப் பகுதிக்குப் பொறுப்பாகவுமிருந்த ரெஜி, முதல் நாள் சண்டையில் தப்பிச் சென்றதாகவும் எனினும், அவருக்கு என்ன நடந்தது? அவர் எங்கிருக்கிறார் என்பது பற்றி எதுவும் தெரியவரவில்லை.
முதல் நாள் சமரில் கண்ணிவெடிýத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூýறப்பட்ட பிள்ளையான் சிறு காயங்களுடன் தப்பி தற்போது இரானுவ முகாமொன்றில் தங்கியிருப்பதாகவும் கூýறப்படுகிறது.
இதேநேரம், கருணாவும் ஏனைய மூýவரும் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றித் தொடர்ந்தும் ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>