04-18-2004, 09:36 AM
தகர்ந்து போன கருணாவின் திட்டங்கள்!
<b>பாரிய உயிர்ச் சேதமின்றி புலிகள் வகுத்த தாக்குதல் திட்டம்</b>
கருணா எங்கே போய்விட்டார்? இதுதான் இன்று அனைவராலும் எழுப்பப்படும் கேள்வியாகும். மட்டக்களப்பில் இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளை தன்பிடிýயில் வைத்திருந்த கருணா, சுமார் நாற்பது நாள் புரட்சியின் பின் மட்டக்களப்பை விட்டுத் தப்பியோடிý விட்டார். அவரும் அவரது சகாக்கள் சிலரும் தற்போது கொழும்பிலிருப்பதாக சில தகவல்கள் கூýறும் அதேநேரம், கருணா வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்று விட்டதாகவும் கூýறப்படுகிறது.
புலிகளுக்கெதிரான தனது புரட்சி இவ்வளவு நாட்களுக்குள் முடிýவுக்கு வந்து விடுமென அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் மட்டக்களப்பில் தனது கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இடையிலான புவியியல் அமைப்பு தனக்குச் சாதகமாயிருப்பதையுணர்ந்தே கருணா இந்தப் புரட்சியில் ஈடுபட்டார்.
ஆனாலும், கருணாவோ அல்லது அவரைத் தூண்டிýய சக்திகளோ அல்லது இலங்கைப் படையினரோ எதிர்பார்த்திராத வகையில் விடுதலைப்புலிகள் இதற்கு முற்றுப் புள்ளி வைத்து மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளை மிக விரைவாகவும் இரத்தக் களரியின்றியும் தங்கள் கட்டுப்பாட்டிýனுள் கொண்டு வந்து விட்டனர்.
வட பகுதியைப் போலன்றி கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட புவியியல் நிலைமையும் அங்கு நிலை கொண்டிýருந்த படையினரின் ஆதரவும், புலிகளால் தன்னை சுலபமாக நெருங்க முடிýயாதென்ற மாயத் தோற்றத்தை கருணாவுக்கு ஏற்படுத்தியிருந்தன. தற்போது அமுலிலுள்ள போர்நிறுத்தமும், பாரிய படையணி நகர்வொன்றை தரை வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ கிழக்கில், புலிகளால் மேற்கொள்ள முடிýயாதென்ற கருணாவின் நினைப்பு பொய்த்து விட்டது.
திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பிரிக்கும் குறுகிய தரைப்பரப்பு வெருகல் பகுதியிலுள்ளது. இந்தக் குறுகிய தரைவழியும் வெருகல் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிராகப் புரட்சி செய்ததும் இந்த வெருகல் ஆற்றுக்கு தெற்கே, தனது படையணிகளை நிலை கொள்ள வைத்த கருணா, வெருகல் பகுதிக்கு தெற்கே சில கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் கதிரவெளியிலுள்ள தனது கடற்புலித் தளத்தின் மூýலம் கடற் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தினார்.
புலிகளுக்கிடையே ஏற்பட்ட இந்தப் பிரச்சினையை மிகவும் சாதகமாகப் பயன்படுத்தி புலிகளை அழிக்க அல்லது பெருமளவில் பயன்படுத்தத் திட்டமிட்ட இலங்கைப் படையினர், கருணாவுக்கு சார்பாகச் செயற்படத் தொடங்கினர். புலிகளின் ஒவ்வொரு அசைவுகள் குறித்தும் தங்கள் புலனாய்வுப் பிரிவுகள் மூýலம் கண்காணித்த படையினர் அவை பற்றியெல்லாம் கருணா தரப்புக்கும் தெரியப்படுத்தினர்.
புலிகளைப் போன்று படை பலத்திலோ, புலனாய்வுத்துறையிலோ அல்லது போரிடும் ஆற்றலிலோ கருணா குழுவினர் வல்லமை படைத்திருக்கவில்லை. அதைவிட தாங்கள் தமிழர்களுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் துரோகமிழைப்பதை பல போராளிகள் உணர்ந்து கொண்டதால் அவர்கள் மனோ ரீதியில் வலுவிழந்து போய்விட்டனர். இதனால், அவர்களால் எதுவுமே செய்ய முடிýயாது போய்விட்டது.
புலிகளுக்கெதிராக கருணா செய்த புரட்சிக்கு மக்கள் ஆதரவும் கிட்டாத அதேநேரம், அவரை விட்டு விலகிச் செல்லும் போராளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும், மட்டக்களப்பு-அம்பாறையில் நிலை கொண்டிýருந்த போராளிகள் அனைவரும் தன்னுடன் இருப்பதாகவும் தனது கட்டளைகளுக்குப் பணிந்து செல்வார்களென்றும், புலிகளுக்கெதிராகப் போரொன்று வந்தால் அதில் அவர்கள் குதிப்பார்களென்றும் கருணா பெரிதும் நம்பியிருந்தார்.
இதைவிட மட்டக்களப்பின் புவியியல் நிலைமை காரணமாக, புலிகளால் வன்னியிலிருந்து பெரும் படையணியையோ அல்லது ஆட்லறிகள், பாரிய மோட்டார்கள் போன்ற கனரக ஆயுதங்களையோ தரைவழியாக அல்லது கடல் வழியாக மட்டக்களப்பிற்குள் நகர்த்த முடிýயாதெனவும் கருணா நம்பியிருந்தார். புலிகளுக்கெதிரான புரட்சியைச் செய்த அதேநேரம், மட்டக்களப்பிற்குள் புலிகள் நுழையக் கூýடிýய வெருகல் தரை வழியையும், தனது படையணியைக் கொண்டு மூýடிý விட்டார். கடல் வழியால் புலிகள் நுழைவதாயின் திருகோணமலை கடற்படையினரின் கண்களில் மண் தூவி விட்டுத்தான் மட்டக்களப்பின் குறிப்பிட்ட சில பகுதிக்குள் தரையிறங்க வேண்டிýய நிலை புலிகளுக்கு ஏற்படுமெனவும் எனினும் அது சாத்தியப்படாததொன்றெனவும் கருணா கருதினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை வெருகல் முதல் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதியே இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதியிலுள்ளது. அதிலும் கதிரவெளிப் பகுதியில் தனது கடற்புலித் தளமிருப்பதால் பாரிய படையணியுடனும் கனரக ஆயுதங்களுடனும் இந்தப் பகுதிகளுக்குள் புலிகள் தரையிறங்குவதும் சாத்தியமில்லை எனக் கருணா கருதினார்.
இதைவிட, வெருகல் பகுதியில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தினால் அதனை ஆட்லறிகள் மற்றும் பாரிய மோட்டார்கள் மூýலம் கடுமையான பதிலடிýத் தாக்குதலைத் தொடுப்பதற்கு வசதியான வெருகல் ஆற்றின் வட பகுதியை இலக்கு வைத்து கதிரவெளிப் பகுதியில் ஆட்லறி மற்றும் மோட்டார் தளங்களும் அமைக்கப்பட்டிýருந்தன.
ஆனாலும், இந்தப் பீரங்கிப் படையணியின் திறமை குறித்து சந்தேகமே ஏற்பட்டிýருந்தது. வட பகுதிப் போர்முனை போன்று கிழக்கில் மரபுவழிச் சமர்கள் பெருமளவில் நடைபெறாததால் இந்தப் படையணிகளின் செயற்பாடும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்தது.
இதேநேரம், தாக்குதலொன்றை புலிகளே தொடுக்க வேண்டிýயிருந்ததால் மட்டக்களப்பின் புவியியல் தோற்றத்திற்கமைய தற்காப்பு மற்றும் முறியடிýப்புச் சமருக்கான திட்டங்களை வகுத்தால் மட்டும் போதுமானதென்ற நிலையே கருணாவிற்கிருந்தது.
புலிகளுடனான புரட்சிக்குப் பின் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் சிங்கள, ஆங்கில ஊடகங்களுக்கும் கருணா பல பேட்டிýகளை வழங்கியிருந்தார். அந்தப் பேட்டிýகளிலெல்லாம் தன்னைப் பற்றி அவர் புகழ்ந்து தள்ளியதுடன் தானொரு ஜாம்பவானென்றும் தானில்லாவிட்டால் புலிகளால் மரபுவழிச் சமரை நடத்த முடிýயாதென்றும் முறியடிýப்புச் சமரைக் கூýட நடத்த முடிýயாதென்றும் கூýறியிருந்தார்.
அந்தளவிற்கு, தான் மரபு வழிச் சமரிலும் முறியடிýப்புச் சமரிலும் ஜாம்பவானென்ற தலைக்கனம் அவருக்கிருந்தது.
மட்டக்களப்பு புவியியல் நிலைமை, போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருத்தல், திருகோணமலையில் நிலை கொண்டிýருக்கும் கடற்படையினரின் பலம், மட்டக்களப்பிலுள்ள படையினரின் உதவியெனத் தனக்கு இந்தச் சமரில் சாதகமான நிலையே அனைத்து வழிகளிலுமிருப்பதாக கருணா கருதினார்.
புலிகளால் தனக்கெதிராகத் தாக்குதலைத் தொடுக்க முடிýயாதளவிற்கு இவ்வளவு காரணிகள் இருக்கையில், தனது பாதுகாப்பு பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் புலிகளால் தன்னை எதுவுமே செய்ய முடிýயாதளவிற்கு அவர்களைப் பொறியில் சிக்க வைத்து விட்டதாகவும் கருணா எண்ணிக் கொண்டிýருந்தார்.
பாரிய உயிர்ச் சேதமின்றி கருணாவைத் தனிமைப்படுத்தும் தாக்குதலை ஆரம்பிக்கும் அதேநேரம், இந்தத் தாக்குதலானது, கருணா வசமுள்ள போராளிகளை, அவர்களுக்கு எதுவித சேதமுமில்லாது மீட்கும் தாக்குதலாகவும் அமையவேண்டுமென்பதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தீவிரம் காட்டிýனார்.
புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றதும் உடனடிýயாகத் தாக்குதலை நடத்த பிரபாகரன் விரும்பவில்லை. கருணாவை தனிமைப்படுத்தும் அதேநேரம், கிழக்கு மக்களும் போராளிகளும் உண்மை நிலையை அறிய நன்கு கால அவகாசம் வழங்கியதுடன், கருணாவின் பின்னணியில் நிற்பவர்கள் யார் என்பதை முழு உலகுக்கும் அம்பலப்படுத்த வேண்டுமெனவும் பிரபாகரன் விரும்பினார்.
கருணாவை ஆதரிக்கவும், அவரைக் காப்பாற்றவும், அவரைப் பெரும் சக்தியாகக் காட்டவும் தென்பகுதி சிங்கள, ஆங்கில ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் போட்டிý போட்டன. கருணாவுக்கு தோள் கொடுக்கப் படையினரும் முன்வந்தனர். அவர்களுடன் கருணாவும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியிருந்ததால், கருணாவுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தால் அதில் இரானுவத்தினரும் ஏதோவொரு விதத்தில் தலையிட முற்படுவரெனப் புலிகள் உணர்ந்து கொண்டனர்.
இந்தத் தாக்குதல் நடவடிýக்கை ஒரு சில தினங்களுக்குள் முடிýந்து விட வேண்டுமென்றும், அது இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பரவிச் செல்லக் கூýடாதென்றும் இல்லையேல் கருணாவுக்கு வெளி உதவிகள் பெருமளவில் கிடைக்க வாய்ப்பிருப்பதையும் புலிகள் புரிந்து கொண்டனர். ஆனாலும், கருணா தப்பிச் செல்ல வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் கருணா தரப்பிலிருந்த போராளிகள் உண்மை நிலையை உணர்ந்து கொண்டனர். இதற்காக புலிகள் உளவியல் யுத்தமொன்றையும் நடத்தியிருந்தனர். இது முழு அளவில் வெற்றியுமளித்திருந்தது.
கடந்த காலங்களில் நடைபெற்ற பல சமர்கள் மற்றும் யுத்தங்களின் போது கருணா சாதாரணமாக தலைவர் பிரபாகரனின் திட்டங்களை களமுனைத் தளபதிகளுக்கு ஒப்படைக்கும் அல்லது ஒப்புவிக்கும் ஒரு தூதுவராகவே செயற்பட்டுள்ளார்.
பிரபாகரனின் மதி நுட்பத்தையோ, தாக்குதல் விய10கங்களையோ அல்லது முறியடிýப்புச் சமருக்கான உத்திகளையோ கருணா பெரிதும் அறிந்திருக்கவில்லை. பிரபாகரன் வகுத்த திட்டங்களை ஏனைய தளபதிகளிடம் ஒப்புவிப்பதில் சிறந்து விளங்கியதால் பல போர்களில் அவர் பற்றி முன்னிலைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்தன.
இதனால், தன்னைப் பற்றி அதீத கற்பனை கொண்ட கருணா, மட்டக்களப்பிலிருந்த போராளிகளின் மனோ நிலை பற்றி அறிந்திருக்கவில்லை. வெருகல் ஆற்றைத் தாண்டிýய புலிகள் கருணாவின் பகுதிக்குள் நுழைந்த போது தான் கருணா உண்மை நிலையை அறிந்து கொண்டார். அங்கிருந்த போராளிகள் எவருமே தன்னுடனில்லை என்பதும் புரிந்த போது எல்லாமே முடிýவுக்கு வந்து விட்டன.
புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட போராளிகள் எல்லோரும், புலிகளுடன் இணையத் தொடங்கவே, முன்னேறி வந்த புலிகளுடன் மோதுவதற்கு கருணா தரப்பில் போராளிகள் எவருமே இருக்கவில்லை. இதனால் களமுனைக்கு மேலும் போராளிகளை அனுப்ப முடிýயாத நிலையேற்பட்டது.
களமுனை சென்ற போராளிகளெல்லோரும் புலிகளுடன் இணைவது உடனடிýயாகவே பேராபத்துக்களை ஏற்படுத்துமென்பதால், வாகரைப் பகுதி நோக்கி புலிகள் முன்னேறவே கருணாவின் முக்கிய சகாக்கள் அங்கிருந்து பின் வாங்கினர்.
நிலைமையெல்லாம் தலைகீழாகிவிடவே கொழும்பு- மட்டக்களப்பு (ஏ11) வீதியை ஊடறுத்து புலிகளின் படையணிகள் வீதிக்கு தெற்கே வருவதற்குள் இருப்பிடங்களைக் காலி செய்து விட்டு தப்பி விட வேண்டிýய அவசர நிலை கருணாவுக்கு ஏற்பட்டது. இதற்காக அவருக்குத் துணைபுரிய படையினரும் முன் வந்தனர்.
முன்னேறும் புலிகள் கொக்கட்டிýச்சோலை, கரடிýயனாறு, தொப்பிக்கல பகுதிக்குள் பெருமெடுப்பில் நுழைய வேண்டுமானால், இந்த வீதியை (ஏ11) கடந்தேயாக வேண்டும். ஆனால், இந்த வீதியில் குவிக்கப்பட்ட படையினர் அடிýக்கு ஒருவர் என வீதியின் இரு மருங்கிலும் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
'ஏ 11" வீதியில் படையினரின் இந்த அரணமைப்பு தங்களுக்குப் போதிய அவகாசத்தை வழங்குமென கருணா நினைத்திருந்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை இரவு புலிகளின் அணிகள் கொக்கட்டிýச்சோலை, கரடிýயனாறு மற்றும் தொப்பிக்கல பகுதிக்குள் ஊடுருவி விடவே கருணா திகைத்துப் போனார். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், புலிகளிடம் தான் சிக்கி விடலாமென்பதை உணர்ந்த அவர், பதில் தாக்குதல் திட்டங்களைக் கைவிட்டு விட்டு தப்பியோடத் தொடங்கினார். மிகவும் வேண்டப்பட்ட சிலருடனேயே தப்பினார்.
அதற்கு முன் தான் தடுத்து வைத்திருந்த முக்கிய போராளிகள் பலரை சுட்டுக் கொன்றதுடன் கனரக ஆயுதங்கள் மற்றும் பெருமளவு வாகனங்களையும் முக்கிய ஆவணங்கள் பலவற்றையும் தீயிட்டுக் கொளுத்தினார். அதன் பின், நெருங்கிய சகாக்கள் சிலருடன் மாவடிýவேம்பு இரானுவ முகாமுக்கு வந்து அங்கிருந்து படையினரின் பலத்த பாதுகாப்புடன் பொலநறுவைக்குச் சென்று தம்புள்ள ஊடாக கொழும்புக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளுடனிருக்கும் போது அவருக்கு கிடைத்த பாராட்டுகளும், கௌரவமும் அவரை தன்னிலை மறக்கச் செய்துவிட்டது. சர்வதேசச் செய்தியாளர்கள் முன்னிலையில் பிரபாகரன் தோன்றிய போது அவருக்கு அருகில் அன்ரன் பாலசிங்கமும் கருணாவுமே அமர்ந்திருந்தனர்.
இவ்வாறு கருணாவிற்கு உள்@ýரில் பிரபாகரனால் மிகப் பெரும் மதிப்பும், கௌரவமும் அளிக்கப்பட்டு ஒரு பிரதேசமே அவரிடம் ஒப்படைக்கப்பட்டிýருந்த நிலையில், இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவில் கருணாவிற்கு இடமளிக்கப்பட்டது. இது கருணாவை முற்று முழுதாக நிலை தடுமாற வைத்தபோது, அவருக்கு சில தீய சக்திகளின் தொடர்புகள் கிடைக்கவே தன்னை ஒரு தலைவனாகப் பிரகடனப்படுத்தி மேற்கொண்ட, சதிப்புரட்சி தோல்வியில் முடிýவடையவே, வீரமும் களத்தே போட்டு வெறுங்கையுடன் தப்பியோடிý விட்டார்.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>