04-18-2004, 09:21 AM
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒரு அரசியல் இயக்கத்தை முதன் முதலில் முன்னெடுத்த ஒரு கட்சியின் மூலவர்களுள் ஒருவர் என்பதை ஏற்பதில் எவருக்கும் தயக்கம் வேண்டியதில்லை. எனினும், நடைமுறை அரசியலில் மலையக மக்கள் பற்றியோ முஸ்லிம்கள் பற்றியோ தென்னிலங்கையில் குடி யேறிய பல்வேறு தமிழ் பேசும் மக்கள் பற்றியோ கூடத் தமிழ்த் தேசியவாதத் தலைமை எதற்குமே தெளிவான ஒரு பார்வை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி 1948 இல் தோற்றுவிக்கப்பட்ட போதும், 1956 வரை மட்டக்களப்பில் அதன் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தும் சூ ழ்நிலை ஏற்படவில்லை. 1948 இல் மலையக மக்களது குடியுரிமை பறிக்கப்பட்ட போதும், 1956 வரை அதைப் பறிக்க உதவி செய்த தமிழ்க் காங்கிரஸ் தலைமை வடக்கில் மக்களால் நிராகரிக்கப்படவில்லை. இலங்கை முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களுக்கு சேர் பொன்னம்பலம் இராமநாதன் கடந்த எண்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு துரோகியாகவே தெரிந்துள்ளார். முஸ்லிம்கள் தமிழ் பேசுவதால் மட்டும் எல்லாத் தமிழருக்கும் பொதுவாக உருவாக்கக் கூ டிய ஒரு கோரிக்கையை அவர்கள் சார்பிலும் முன்வைக்க இயலாது என்ற எளிய உண்மை என்றுமே தமிழ்த் தேசியத் தலைமைகளுக்கு உறைத்ததில்லை. இவ்விடயத்தில் தமிழரசுக் கட்சியை விடத் தமிழ்க் காங்கிரஸ் தனது யாழ்ப்பாண வேளாள மேலாதிக்க அரசியல் காரணமாக யதார்த்தமான ஒரு பார்வையைக் கொண்டி ருந்தது.
தமிழ் மக்களிடையே ஒற்றுமையைக் குலைப்பதற்கான முயற்சிகளில் தமிழ்க் காங்கிரஸ் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டிலும் நியாயம் உண்டு. சமர்;டி க் கோரிக்கை, தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற கருத்துக்களை வன்மையாக எதிர்த்த வரலாறு தமிழ்க் காங்கிரஸினுடையது. வட்ட மேசை மாநாடு என்று ஜி.ஜி.பொன்னம்பலம் பேசியபோது வட்ட மேசையா சதுர மேசையா என்றெல்லாம் கிண்டல் செய்து அவரை ஓரங்கட்ட முயன்ற பெருமை தமிழரசுக் கட்சியினது. எனவே, தமிழ்க் கட்சிகள் என்பன தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்த விரும்புகின்றன என்பதை தான் என்றுமே நம்பியதில்லை. தமிழ் மக்களைத் தம் ஏகபோக ஆதிக்கத்தினுள் வைத்திருக்க ஒவ்வொரு கட்சியும் முயன்றுள்ள அளவுக்கு அவர்களை ஒற்றுமைப்படுத்த என்றுமே முயன்றதில்லை. இப்பத்திரிகையில் முன்பு குறிப்பிட்டது போல தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது சாதி, வர்க்கம் என்ற ஆதிக்க முரண்பாடுகளை மீறி இயலுமானதல்ல. முதலில் சமூக ஒடுக்குமுறைகள் பற்றிய நேர்மையான அறஞ்சார்ந்த ஒரு நிலைப்பாட்டை ஒரு தலைமை மேற்கொள்ளாத வரை, அதனால் ஒரு தேசிய இனத்தையோ ஒரு நாட்டையோ ஒற்றுமைப்படுத்த இயலாது.
சாதி பேதங்களை தமிழரசுக் கட்சித் தலைமை களைந்ததாகப் பேசப்பட்டது. அதே தலைமை தான் 1960 களில் சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சியிற் சாதி வெறியர்கள் தரப்பில் நின்றது. இன்னமும் தீண்டாமையும் சாதிப் பாகுபாடும் வடக்கில் பல இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்றனவென்றால், கால் நூற்றாண்டு கால விடுதலைப் போராட்டம் சாதித்தது என்ன?.
நாம் முதலில் பாசாங்குகளை விட்டொழிக்க வேண்டும். நாம் எமது கண்களை மூ டிக் கொள்வதால் பிரச்சினைகள் இல்லாது போய் விட மாட்டா. உண்மை நிலை ஏதென்றால் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியதாக எந்தத் தலைமையும் பெருமை பேச முடியாது. தமிழர்களை ஒற்றுமைப்படுத்திய பெருமை உண்மையில் சிங்களப் பேரினவாதிகளுக்கேயுரியது. எனினும், மிகப் பெரிய பேரினவாதியான டி.எஸ்.சேனநாயக்க தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட குடி யேற்றத்தின் மூலம் தமிழரைச் சிறுபான்மையினராக்க முயற்சி எடுத்த போதோ, அது தெட்டத் தெளிவான விளைவுகளை ஏற்படுத்திய போதோ, மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்த போதோ தமிழர்களால் ஏன் ஒற்றுமைப்பட இயலாது போனது? எந்தத் தமிழ்த் தலைமையும் இவை பற்றிப் பேசிய அளவுக்கு நடைமுறையில் சமூ கத்தை விழிப்ப10ட்டத் தவறிவிட்டது ஏன்? 1956 இல் சிங்கள மொழிச் சட்டம் வந்தபோது தமிழுக்கு ஆபத்து என்ற கோர்த்தை முன் வைத்து ஒருவிதமான தமிழர் ஒற்றுமை உருவானது. உண்மையில் தமிழ் பேசும் தேசிய இனங்களின் நலனுக்கு சிங்கள மொழிச் சட்டத்தை விடத் தமிழர் நடுவே வளர்த்துவரப்பட்டுள்ள ஆங்கில மோகமும் மேலை நாடுகள் பற்றிய மனோரீதியப் படிமங்களும் தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதியாகி வந்துள்ள பண்பாட்டுச் சீரழிவு அம்சங்களும் கூ டிய தீங்கு செய்துள்ளன.
தமிழரின் ஒற்றுமை பற்றி 1956 இல் ஏற்பட்ட விழிப்பால் முஸ்லிம்களையும் தமிழரையும் ஒற்றுமைப்படுத்த இயலாது போனதற்கு என்ன காரணம்? தனியே முஸ்லிம் தலைவர்களை மட்டுமே பழி சொன்னால் சரியாகுமா? 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகத்தின் பின்பு ஏற்பட்ட சரிவைச் சரிக்கட்டி, நிமிர்த்த உதவியவை 1970 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தரப்படுத்தலும் 1972 ஆம் ஆண்டு வந்த அரசியல் யாப்புமே. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழத்துக்காக மக்கள் வாக்களித்ததாக நான் நம்பவில்லை. த.வி.கூட்டணியால் தமிழீழத்தை அல்ல ஒரு தந்திக் கம்பத்தைக் கூ ட போராடி வென்றுதர இயலாது என்பது பலரும் அறிந்ததே. தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சத்திற்கு எதிரான குரலாகவே 1977 தேர்தலில் மக்கள் பெருவாரியாகத் த.வி.கூ ட்டணிக்கு வாக்களித்தனர்.
அதன் பின்னர் உக்கிரமடைந்த ஒடுக்குமுறை இரானுவ அடக்குமுறையாகவும், போராகவும் மாறிய பின்பு, தமிழ் மக்களிடையே தேசிய இன அடிப்படையில் போராட்ட ஒற்றுமைக்கான வாய்ப்பு ஏற்பட்டது. வட-கிழக்கு முஸ்லிம்களையும் அணைத்துச் செல்லும் வாய்ப்பும் ஏற்பட்டது. அது எவ்வாறு சிதறடிக்கப்பட்டது என்பதைப் பற்றித் தமிழ் மக்கள் சுயவிமர்சனப் பாங்காகவும் ஆராய வேண்டும்.
இப்போது பேசப்படும் தமிழ் மக்களின் ஒற்றுமைப் பிரகடனம் எதுவுமே தேர்தலில் ஆசனங்களைத் தக்க வைப்பதற்கான தந்திரமே அல்லாமல் வேறல்ல. மட்டக்களப்பில் தேர்தலில் வெல்ல கருணா சொற்படி, கேட்கக் கூடி யவர்கள் இருக்கலாம் என்றால், நாளை வட-கிழக்கின் இன்னொரு பகுதியில் இதுபோல ஒரு பிளவும் போட்டித் தலைமையும் உருவானால், அதற்கு உடன்பட்டுப் போகக் கூ டிய தலைவர்களைத் தான் நாம் கொண்டி ருக்கிறோம். இன்று, பாராளுமன்றத் தலைமை என்பது பதவிக்காக வால் பிடிப்பது என்றாகி விட்டது. இது இப்போது மக்களுக்குத் தெளிவாகி விட்டது. மட்டக்களப்புப் பிரதேசவாதம் பெரிதாக எழுவதற்கு அடிப்படையில் ஒரு நியாயமுமே அற்ற ஒரு சூழ்நிலையில் அது கிளறிவிடப்படக் கூடும் என்றால், தமிழ்த் தேசியவாதம் ஆற்ற வேண்டிய சமூ க அரசியல் பணிகள் இன்னமும் நிறையவுள்ளன.
இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்கள் தமது இருப்பை முற்றாகவே தம் வசமாக்க இயலும் என்றால், தவறான போக்குகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்க இயலும் என்றால், ஒரு சிலரால் ஒரு விடுதலை இயக்கத்தை எளிதாகப் பிளவுபடுத்த இயலாது போய்விடும்., இதிலுள்ள பலவீனத்தைத் தான் தமிழ் மக்களின் விடுதலையை எதிர்ப்போர் பயன்படுத்துகின்றனர்.
கருணாவின் கடந்த காலம் பற்றிய விமர்சனங்கள் பயனற்றவை. அவை அவரைவிட அவர் மீது குற்றஞ்சுமத்துவோரது தகைமை பற்றியும் வினாக்களை எழுப்பக் கூ டும். முக்கியமானது ஏதெனில், அவரது சமகால நடத்தை கருணாவுக்கும் கதிர்காமருக்கும் வேறுபாடு தெரியாத விதமாக அவரது போக்கு இப்போது அமைகிறது. அதை இயலுமாக்கியவர்கள் தாம் வேண்டியதைச் சாதித்து விட்டனர். கருணா போனாலும் அதன் பாதிப்பைத் தமிழ் மக்களின் போராட்டம் நீண்ட காலத்துக்கு அனுபவித்தே தீரும்.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>