04-18-2004, 03:15 AM
மரணித்த பிரதேசவாதம்: சிங்களத்திற்கான மீளமுடியாத தோல்வி
மட்டு-அம்பாறை மாவட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வலிந்ததொரு பிரதேசவாதத்திற்குள் சுமார் 39 நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. சமூக வாழ்வியலின் உச்ச உணர்வலையாக இருக்கும் தான் சார்ந்த சமூகம் குறித்த ஒட்டுதல், தனது இருப்பிற்கான போராட்டம் என்பவற்றின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையை தமிழர் தரப்பு கொண்டுள்ளதாகத் திணிக்கப்பட்ட கருத்தானது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையென்ற போதிலும், அதனை செயலாக்கம் பெறவைப்பதற்கான நெருக்குதலை கருணா இறுதி வரை கொடுத்து வந்தார். ஏனெனில், கருணா கிழக்கின் சக்தியாக தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையை சதியாளர்கள் அவருக்கு ஏற்படுத்தியிருந்தார்கள்.
குறிப்பாக, இந்த விவகாரத்தில் நேரடியாகவே சம்பந்தப்பட்ட ஒரு தரப்பாக மாறியிருந்த முப்படைத்தளபதி பலகல்லவும், ஐனாதிபதி அலுவலகமும் கருணாவை ஒரு தாக்கமிகு பாத்திரமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மறைமுகமாகச் செயற்படுத்தி வந்தனர். குறிப்பாக திராணியற்ற ஒரு படையைக் கொண்டுள்ள சிறீலங்கா, எதிராளியான தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்த முன்னின்ற அதேவேளை, தமிழர் தரப்புப் பிளவுபட்டால், தமிழர்களின் பேசும் பலம் குறைக்கப்படலாம் என்பதிலும், தமிழர்களின் ஒரே தலைமை விடுதலைப்புலிகள் தான் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடனும் ஒரு நீண்ட கால நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுத்தது.
இதனடிப்படையில் கருணாவிற்கான சகல ஆதரவுகளையும் வழங்கும் உத்தரவாதத்தை மேற்படி தரப்பு வழங்கியிருக்க வேண்டும். அதன் காரணமாக கருணா தனித்து இயங்குவதற்கான நடவடிக்கைகளாக நிதி மோசடி, வயதுகுறைந்த போராளிகளை தலைமைக்குத் தெரியாமல் இணைத்தல், தனது நம்பிக்கைக்குரியவர்களை பொறுப்புக்களில் நியமித்தல் போன்ற திட்டங்களை நிறைவேற்றி வந்தார். ஆனால் தலைமைப்பீடம் இவரது நடவடிக்கைகள் பற்றிய ஐயப்பாட்டினை உடனேயே வெளிப்படுத்தியதானது, 'சதிக்கான காலம் கனிய முதலே" தனது சதித் திட்டத்தை அறிவிப்பதற்கான சங்கடத்திற்குள் கருணாவைத் தள்ளியிருந்தது.
மறுபுறத்தே கருணாவின் இந்தத் திடிர் அறிவிப்பு சிறீலங்காவின் திட்டத்தை உருக்குலைப்பதாகவே இருந்தது. போர் ஒன்று மீண்டும் ஆரம்பமாகும் போது மட்டு-அம்பாறைப் பிளவு தொடர்பான தனது நிலைப்பாட்டை கருணா அறிவிப்பதற்கான தயாரிப்புக்களிலேயே சிறீலங்கா கருணாவை ஈடுபடுத்தி வந்தது. ஏனெனில் அவ்வாறானதொரு சூழ்நிலையில் இச்சதி அறிவிப்பு வெளியிடப்படும் போது, தமிழர் தரப்பு போரரங்கைச் சந்திக்க முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படுவதுடன், வட-கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற நிலைப்பாட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வர அது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும்.
எனவே 'முழுமை பெறாத சதியாக" இது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கருணா பாதுகாப்புப்படைகளுடனான ஒப்பந்தமொன்றிற்கான வரைவைப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பிய போது, அதனை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மையை பாதுகாப்பமைச்சு வெளிப்படுத்தியது. நோர்வே, ஐப்பான், கண்காணிப்புக் குழு ஆகியன இப்பிரச்சினையானது விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரச்சினை என்ற கருத்தை ஏற்றிருந்தமை பாதுகாப்பமைச்சகம் மேற்படி முடிவை நாட நிர்ப்பந்தித்திருக்கலாம். ஆனால் தொலைபேசி மூலம் பலகல்லவுடன் தொடர்ச்சியான தொடர்புப் பேணலை மேற்கொள்ளும் கருணாவிற்கோ சிறீலங்காவின் இந்த முடிவு ஒரு இழப்பாக இருந்தது.
ஏனெனில், பாதுகாப்பமைச்சின் இந்த நிலைப்பாடு கருணாவினால் சற்றுமே எதிர்பார்க்கப்படாத ஒன்று. கிழக்குப் பிராந்தியத்திற்கான தளபதிகள் அனைவரும் தலைமைப்பீடத்துடன் இணைந்து நின்ற போது, தனது நிலையைப் பேணுவதற்கான உச்சக்கட்ட ஆயுதமாக நம்பியிருந்த ஒரு ஒப்பந்தம் உயிர்பெறவில்லை என்பது கருணாவைத் தளம்ப வைத்தது. இதன் காரணமாக பிரதேசவாதத்தை முழுமூச்சுடன் உயிர்ப்பிக்கும் திட்டத்தில் அவர் பேராசிரியர்கள், மாணவர்கள், புத்திஐPவிகளைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்த முனைந்ததுடன், தனது பலம் குறித்த ஆயுத, ஆளணிகளை சர்வதேச ஊடகங்களிற்கு காட்சிப் பொருளாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டார்.
இவ்வாறானதொரு தளர்வு நிலையைக் கருணா அடைந்த போதும், சிங்களம் தனக்கான ஆயுத, நிதித் தேவைகளிற்கான பின்புலமாக நிற்கும் என்கிற நம்பிக்கையை அவர் இறுதிவரை கொண்டிருந்தார். சிங்களம் கூட தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினு}டாக படைகளையும், ஆயுதங்களையும் வாகரை நோக்கி நகர்த்த கருணாவிற்கு உதவியமை, வடபுல மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்துகூட வெளியேற்றப்படத் துணை நின்றமை, மட்டக்களப்பு நகரப்பகுதியில் ஆயுதபாணிகளாக செயற்பட அனுமதித்தமை போன்ற செயற்பாடுகளின் மூலம் இதனை நிரூபித்தன. இதற்கும் மேலாக முப்படைத் தளபதி இறுதிவரையும் கருணாவின் காப்பாளனாகவே தன்னைக் காட்டிவந்தார்.
மட்டு-அம்பாறை மீட்புப் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு ஓரிரு தினங்களிற்கு முன்னர், லயனல் பலகல்ல இந்தியச் செய்தி நிறுவனமொன்று வழங்கியிருந்த செவ்வியில், 'கருணாவின் கையாளுகை வித்தியாசமானது, அவர் கிழக்கில் வரியிறுப்புக்களை மேற்கொள்வதில்லை, அவர் கொலைகளைச் செய்வதில்லை, பலவந்தமாக ஆட்கடத்தல்களைச் செய்வதில்லை, அவர் மிகவும் உறுதியான ஆதரவுத் தளத்தை மக்கள் மத்தியில் கொண்டுள்ளார், கருணா தொடர்ந்து இவ்வாறிருந்தால் புலிகள் பலவீனப்பட்டுப் போவார்கள்" என்று தெரிவித்திருந்தார். இதுவே லயனல் பலகல்லவின் நேரடிப்பங்கிற்கான ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக, கருணா பற்றி அவர் செவ்வியில் தெரிவித்திருந்த கருத்துக்கள், ஒரு நாட்டின் முப்படைத் தளபதிக்கான இராஐதந்திரக் குணாம்சங்களை கொண்டிராத ஒருவராகவும், தான் சார்ந்திருந்த ஒரு விடயத்தினை, தனது எதிராளிகளிடையே தம்மால் அரங்கேற்றப்படும் ஒரு சதியை மறைப்பதற்குரிய இராணுவ இரகசியம் பேணும் தன்மையைக் கொண்டிராத ஒருவராகவுமே சிறீலங்காவின் முப்படைத் தளபதியை அடையாளப்படுத்தியது. இவ்வளவிற்கும் பலகல்ல சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினை 1984ல் ஆரம்பித்தவர் என்பதோடு, அதற்கான தலைவராக நீண்டகாலம் இருந்தவர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
1993ல் இடம்பெற்ற தவளைப் பாய்ச்சல் (பூநகரித் தாக்குதல்) நடவடிக்கை குறித்த புலனாய்வை சரியாக மேற்கொள்ளவில்லையென்று இராணுவ நீதிமன்றால் கண்டிக்கப்பட்டு பதவி மாற்றத்திற்கு உள்ளாகி, இராணுவ ஆட்டிலறிப் பிரிவுகளின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். எனினும் தனது நீண்டகாலப் பணியான புலனாய்வில் அக்கறை கொண்டதொருவராகவே அவர் இவ்வாறான சதி நடவடிக்கைகளில் நேரடியாகத் தன்னை ஈடுபடுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் கருணாவின் சதி முயற்சிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போது நேரடியாக உதவக்கூடியதொரு தரப்பாக சிறீலங்கா இராணுவம் இருப்பதற்கான சு10ழ்நிலைகளை இராஐதந்திரக் களநிலை அதற்கு வழங்கவில்லை.
ஆனால், கருணாவோ தனது தப்பியோடலைப் பற்றிய சிந்தனையின்றி, சிறீலங்கா இராணுவம் தனக்கு உதவும் என்ற நம்பிக்கையில் இறுதிவரை இருந்துள்ளார். எனவேதான் சடுதியானதொரு தப்பியோடலை மேற்கொள்ள அவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். அதன் போது புலனாய்வுதுறைப் போராளியான லெப். கேணல் நீலனை பேரம் பேசுபொருளாக அவர் கடத்த முனைந்து, அது சாத்தியமற்றதானதும் அவரைப் படுகொலை செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் நீலனைப் பற்றி சிங்களப் பத்திரிகையாளர் ஒருவருக்கு பிரஸ்தாபித்திருந்தார். கருணாவின் திட்டங்கள் அனைத்துமே பொய்த்த போதும் சிறீலங்கா அவரைக் காப்பாற்றுவதில் கை கொடுத்திருக்கிறது.
எனினும், கருணா தங்களிடம் இல்லை, ஆனால் அவர் அடைக்கலம் கோரினால் அதனை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக பலகல்ல முன்னெச்சரிக்கையாக அறிவித்திருந்தார். இதுவே தங்களின் பங்கு இந்தச் சதி முயற்சியில் இருக்கிறது என்பதை மறைப்பதற்காக அவர்கள் கருணாவையும்; அவரது நெருங்கிய சகாக்களையும் காப்பாற்ற வேண்டிய தேவையில் இருந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டியது. எனினும் கருணா தங்களிடம் இருக்கிறார் என்பதை சிங்களம் ஒத்துக் கொள்ளாதவரை, கருணாவினது இருப்பு மட்டும் கேள்விக்குரியதல்ல, சமாதானப் பேச்சுக்கான சாத்தியங்களும், தற்போதைய அரசின் சமாதான விருப்பும் கேள்விக்குரியனவே.
இந்தச் சதியில் சம்பந்தப்பட்டதன் மூலம் சிறீலங்கா, தமிழர் தரப்பின் நம்பிக்கையீனத்திற்கு மட்டுமுள்ளாகவில்லை. மாறாக தமிழர் தரப்பைப் பலப்படுத்தும் ஒரு மாறுபட்ட களத்தையமைத்துக் கொடுத்துள்ளது. இச் சதியையடுத்து தமது தளங்கள் முகாம்களை தமிழர் தாயகமெங்கும் மாற்றியமைக்கும் தேவையை தமிழர் தரப்புப் பெற்றுள்ளது. இதுவே ஆண்டாண்டாக சிறீலங்காவின் புலனாய்வுத்துறை தமிழர் தரப்பின் தளங்கள், முகாம்கள் தொடர்பாக சேகரித்த தகவல்களை ஒட்டுமொத்தமாகப் பயன்பாடற்றதாக மாற்றப் போகிறது. இதன்மூலம் தாங்கள் அரங்கேற்ற முயன்ற சதியானது தங்களையே ஒரு துன்பியலிற்குள் தள்ளும் நிலையை சிறீலங்கா அடைந்துள்ளது.
மறுபுறமாக இந்தச் சதி எதிர்ப்பு எப்படியிருந்தது என்பதனை ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையின் கொழும்பு நிருபரின் வார்த்தைகளிலேயே உள்வாங்கிக் கொள்வோம். 'பிரபாகரன் முன்னிருந்ததை விடப் பலம்பொருந்திய சக்தியாக இப்போது பரிணமித்திருக்கிறார். இந்நடவடிக்கை மூலம் ~தான் வெல்லப்பட முடியாதவர்| என்ற பதத்திற்கு மேலும் வலுச் சேர்த்துள்ள பிரபாகரன், குறைந்த இழப்புக்களோடு நடவடிக்கையை முடிவிற்கு கொண்டு வருவேன் என்பதைச் செயலிற் காட்டி, திட்டங்களை நேர்த்தியாகவும், செவ்வனேயும் செயற்படுத்தும் ஒருவராக மாத்திரமல்ல, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் ஒருவராவும் தமிழர்களிடையே அவர் திகழ்கிறார் என்று அந்த நிருபர் தெரிவித்துள்ளார். ஆம் இதுவே சிங்களத்தின் தோல்விக்கான சாட்சியமுமாகிறது.
Thanx: சுதர்மா - கனடா / TamilNatham

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>