04-17-2004, 10:38 PM
சகாக்களையும் கைவிட்டு கருணா மாயம்
கொழும்பில் தவித்த 8 பேர் புலிகளால் மீட்பு!
விடுதலைப் புலிகளின் மீட்பு அணிகளின் அதிரடித் தாக்குதல்களை அடுத்து மட்டக்களப்பிலிருந்து தப்பியோடிய கருணா, தன்னுடன் இருந்த எட்டுப் பேரையும் நட்டாற்றில் கைவிட்டுக் கம்பி நீட்டியுள்ளார்.
கொழும்பில் தனித்து விடப்பட்ட நிலையில் செய்வதறியாது தவித்து நின்ற அந்த எட்டுப் பேரையும் புலிகள் மீட்டு நேற்றுமுன்தினம் மாலை மட்டக்களப்புக்கு அழைத்து வந்தனர். கருணாவால் தளபதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த ஐpம்கெலி தாத்தா, திருமால், றொபேட், துரை ஆகியோரும் கருணாவின் மெய்ப்பாதுகாவலர்கள் நால்வருமே இவ்வாறு அநாதரவாகக் கைவிடப்பட்டனர்.
கருணா தப்பிச்சென்ற இடம் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. கருணாவைத் தமிழீழத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம் பித்த விடுதலைப் புலிகளின் படைய ணிகள் கஞ்சிகுடிச்சாறுப்பகுதியை மீட்டு தரவைப் பகுதி நோக்கி முன்னேறிய சமயம் கருணாவுடன் அவரது விசுவாசிகளான நிலாவினி, வரதன், காயா, ஐpம்கெலி தாத்தா, திருமால், றொபேட், துரை ஆகியோரும் தப்பி ஓடினர். இவர்களுடன் கருணாவின் நான்கு மெய்ப்பாதுகாவலர்களும் சென்றனர்.
இவர்கள் முதலில் மின்னேரியா இராணுவத்தளத்துக்கு சென்றனர். அங்கிருந்து கருணா, வரதன், நிலாவினி, காயா ஆகியோர் ஒருவாகனத்திலும் ஏனைய எட்டுப்பேரும் இன்னொரு வாகனத்திலும் ஏற்றப்பட்டு இராணுவத்தினரால் அழைத்துச்செல்லப்பட்டனர்.பிரஸ்தாப எண்மர் சென்ற வாகனம் கொழும்புக்குச் சென்றதாகவும் அங்கு தாங்கள் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தற்சமயம் தெரிவித்தனர்.
தாங்கள் சென்ற இடத்துக்குக் கருணா வரவில்லை என்றும் அவரிடம் தொடர்புகொள்ளத் தாங்கள் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தமக்கு என்ன நடக்குமோ என்று தெரியாது அச்சம் அடைந்த அவர்கள் மட்டக்களப்பில் உள்ள விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பில் இருந்து இரு வாக னங்கள் உடனடியாகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மட்டக்களப்புக்கு அழைத்துவரப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொழும்பில் அவர்கள் தங்கியிருந்த இடம் தொடர்பான விவரங்கள் நேற்றிரவுவரை தெரியவரவில்லை.
Source: Uthayan

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>