04-17-2004, 12:27 AM
<span style='color:red'>மட்டு-அம்பாறை மாவட்டங்களில் வரி அறவீடுகள் மறு அறிவித்தல் வரை இடம்பெற மாட்டாது: கௌசல்யன்
[size=9]ஐ.பி.சி தமிழ் சனிக்கிழமை, 17 ஏப்பிரல் 2004,</span>
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை வரி அறவீடுகள் இடம்பெறமாட்டாது என மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் அறிவித்துள்ளார்.
தமிழீழ தேசிய நிதிக் கொள்கைக்கு அமைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கௌசல்யன், வரி அறவீடு தொடர்பாக பின்னர் உத்தியோகபூர்வமாக வர்த்தகர்களுக்கு அறியத்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் வர்த்தகர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்தச் சந்திப்பில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட வர்த்தகர்களுடன், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்கள் இருந்த காலங்களில் பாரியளவிலான நிதி மோசடிகளில் கருணா ஈடுபட்டதாக விடுதலைப் புலிகள் முன்னர் குற்றஞ்சாட்டி இருந்தமையால், இது தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில் விடுதலைப் புலிகள் இந்த மாவட்டங்களில் நிதி அறவீடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறார்கள் என்றே தாம் கருதுவதாக மாவட்ட வர்த்தகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>