04-17-2004, 12:18 AM
<span style='color:red'>மட்டு-அம்பாறை மாவட்டங்களில் அரசியல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிப்பு.
[size=9]ஐ.பி.சி தமிழ் சனிக்கிழமை, 17 ஏப்பிரல் 2004, </span>
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் உள்ள பிரதேசங்களுக்கான அரசியல்துறைப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகர அரசியல் பொறுப்பாளராக சேனாதிராசா, அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக குயிலின்பன், குடும்பிமலை கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக தவன், ஆண்டான்குள அரசியல்துறைப் பொறுப்பாளராக சலீம், பட்டிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக செல்வா, மாவடி முன்மாரி கோட்ட அரசியல்ப் பொறுப்பாளராக உதயராஐ; ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த, மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன், நேற்றுமுதல் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள் யாவும் இயங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஒன்றரை மாத காலமாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் கருணாவால் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் காரணமாக விடுதலைப் புலிகளின் அரசியல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>