04-16-2004, 05:08 PM
கிழக்கு மக்களின் உணர்வலைகள்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 41 தினங்களாக இடம்பெற்று வந்த கருணாவின் தனிப்பட்ட நடவடிýக்கைகள் விடுதலைப்புலிகளின் தலைமையினால் முடிýவுக்குக் கொண்டுவரப்பட்டு அப்பகுதி மக்களும், பிரதேசமும் இயல்புக்கும், அமைதிக்கும் திரும்பியுள்ள நிலையில், விடுதலைப்புலிகளின் விரைவானதும், விவேகமானதுமான மீட்பு நடவடிýக்கை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும் மோதல்களும், உயிரிழப்புகளும் ஏற்படுமென மக்கள் அச்சமடைந்திருந்த வேளையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கூýறியது போல், எந்தவித இரத்தக் களறியுமின்றிக் கருணாவின் நடவடிýக்கைகள் முடிýவுக்குக் கொண்டு வரப்பட்டதால் கிழக்கு மாகாண மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கருணாவைத் தமிழர் தாயகத்திலிருந்து அகற்றும் விடுதலைப்புலிகளின் நடவடிýக்கைக்கு ப10ரண ஆதரவை வழங்கிய கிழக்கு மாகாண மக்கள், தமது தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதை முழு உலகிற்கும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கருணாவின் தனிப்பட்ட முடிýவுகள், செயற்பாடுகள், விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிýக்கைகள் குறித்து கிழக்கு மாகாண மக்கள் சிலரின் உணர்வலைகளைப் பார்ப்போம்.
ஏ.டிý.கமலநாதன், பிராந்திய உத்தியோகத்தர், மட்டு. திறந்த பல்கலைக்கழகம்.
மட்டு. - அம்பாறை மாவட்டம் வே.பிரபாகரனின் நேரடிýக் கண்காணிப்பின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். கடந்த 41 நாளும், இம்மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு வீடும் மரண வீடுகள் போலவே காட்சியளித்தன. ஆனால், மீண்டும் சுபீட்சகரமான நிலை தோன்றியுள்ளதையிட்டு, மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
ஆர்.மரியதாஸ், நிர்வாக உத்தியோகத்தர், மட்டக்களப்பு மனித உரிமைகள் இல்லம்.
கடந்த 41 நாட்களும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மக்களுக்கு கரிநாளாகவே இருந்தது. கருணா என்ற தனி மனிதனால் முன்வைக்கப்பட்ட பிரதேசவாதத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இந்தக் காலப்பகுதியில் நீ யார் பக்கம்? நான் யார் பக்கம்? என்ற இரு பிரிவினை காணப்பட்டன. ஆனால், இப்போது, எல்லோரும் ஒரே பக்கமே என்ற நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இது ஒரு புறமிருக்க, தமிழ்த் தேசியப் பத்திரிகையான ' தினக்குரல்" பத்திரிகையைக் கருணா தரப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் விற்பனைக்குத் தடை செய்ததன் மூýலம் கருணாவின் அராஜகம் வெளியுலகத்திற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழினத்தின் குரலாகச் செயற்பட்டு வந்த 'தினக்குரலை"ப் பெறுவதற்காக நாம் பல மைல் தூரம் பயணம் செய்து பெற்றுக் கொண்டோம். இந்தக் காலப்பகுதியில் இப்பத்திரிகை ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்கு மனித உரிமைகள் இல்லத்தின் சார்பாகவும், இந்த நாட்டு பிரஜை என்ற வகையிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எம்.தேவராஜன் - பணிப்பாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.
வைத்தியசாலையிலிருந்தும் மட்டு. - அம்பாறை மாவட்டங்களிலிருந்தும் வட பகுதியைச் சேர்ந்தவர்களை கருணா தரப்பினர் வெளியேற்றியதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிýக்கின்றோம். மக்களின் மிக அத்தியாவசிய தேவையான வைத்திய சேவையை கருணா தரப்பினர் ஸ்தம்பிதமடையச் செய்தது எவராலும் ஏற்றுக் கொள்ள முடிýயாதவொன்று. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் இலாபம் அடைய முற்பட்டனர். இதற்கு விடுதலைப்புலிகளின் தலைமைப் பீடத்தினால் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதேசவாதத்தை 99 சத வீதமான வைத்தியர்கள் எதிர்த்தாலும் கூýட, ஒரு சதவீதமான வைத்தியர்கள் இதைச் சாதகமாகப் பயன்படுத்தி பல செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
கருணாவின் இந்தச் செயற்பாட்டிýனால் சாதாரண மக்களும், நோயாளிகளும் உள, உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.புண்ணியமூýர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட பதில் அரச அதிபர்.
வடபகுதி மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கருணா தரப்பினரால் வெளியேற்றப்பட்ட விடயத்தை நாம் வன்மையாகக் கண்டிýக்கின்றோம். இதேவேளை, வெளியேற்றப்பட்டவர்கள் இது குறித்து மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனக்கோ, பொலிஸாருக்கோ அறிவிக்காத காரணத்தினால் எந்தவித நிவாரணங்களையும் எம்மால் பெற்றுக் கொடுக்க முடிýயாது போய்விட்டது.
கருணா தரப்பினரால் இங்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளுக்கும் மாவட்டச் செயலாளர் என்ற வகையில் எனது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இங்கு இரு பிரிவினர் செயற்பட்டதால் யாருடைய கருத்தை ஏற்றுக் கொள்வது? எவ்வாறு செயற்படுவது? என்பது குறித்து மக்கள் மத்தியிலும், எம்மத்தியிலும் ஒரு வித தளம்பல் நிலை காணப்பட்டது. ஆனால், இன்று எல்லோரும் புலிகளின் தலைமையை ஏற்றுத் தமது ஆதரவை நிரூýபித்துள்ளனர்.
வேனுகோபால், ஆசிரியர், 'தமிழ் அலை".
கருணா தரப்பினர் நான் உட்பட அனைத்து ஊழியர்களையும் கைப்பொம்மைகளாகவே நடத்தினார்கள். இந்த நிலையில், தங்கள் தொடர்பான செய்திகளை மட்டுமே பிரசுரிக்க வேண்டும் எனவும், மாறாக, செயற்பட்டால் சுடப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்தினார்கள்.
தமிழீழத் தேசியத் தலைமையினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வகைப் போராட்டத்தையும், கூýர்மைப்படுத்தும் இலட்சியதாகம் நிரம்பிய "தமிழ் அலை' கடந்த 41 தினங்கள் தனது இருண்ட யுகத்தில் தமது சேவையை வழங்கியமை குறித்து வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், கருணா என்ற ஒரு தனி மனிதனின் பிரதேசவாத முற்றுகைக்குள்ளான 'தமிழ் அலை" தமது நிறைவான சேவையை வழங்காதது குறித்து, பிரதம ஆசிரியர் என்ற வகையில் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எஸ்.பாக்கியராஜா, பீடாதிபதி, மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரி.
நெருக்கடிýயான நிலையில், நாம் கடந்த 41 நாட்களையும் கடந்து வந்துள்ளோம். உண்மையில் கருணாவினால் முன்வைக்கப்பட்ட பிரதேசவாதத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரும் இரத்தக் களறி தவிர்க்கப்பட்டதற்கு முதலில் கடவுளுக்கும், அடுத்த படிýயாக எமது தேசியத் தலைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வணபிதா. சிறிதரன் சில்வெஸ்டர், இயக்குநர், கிழக்கு மனித மேம்பாட்டு நிறுவனம்.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, விடுதலைப்புலிகளின் தலைமைப் பதவிகளில் கிழக்கு மாகாணத்தவர்களுக்குரிய இடம் வழங்கப்படவில்லை போன்ற கருணா முன்வைத்த கருத்துக்களை விட, அவரின் நடைமுறைகள் மக்கள் மனதில் சந்தேகத்தையும், அதிருப்தியையும் தோற்றுவிப்பனவாக அமைந்து விட்டன. ஊடகங்களில் அவர் மேற்கொண்ட அதீத பிரசாரம், அரசாங்கத்துடனும், தமிழ் மக்களின் விரோதிகளுடனும் அவர் ஏற்படுத்திக் கொண்ட உறவு ஆகியவை மக்களிடையே கருணா மீதான சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது.
அத்துடன், தேர்தல் நேரத்தில் அவர் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியமை எவராலுமே ஏற்றுக் கொள்ளப்படாததாகி விட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து அவர் தன்னைத் தானே விலக்கிக் கொண்டமையை எவராலுமே ஜீரணிக்க முடிýயவில்லை.
எனினும், 72 மணித்தியாலங்களில் பொது மக்களுக்கோ, போராளிகளுக்கோ பாரிய இழப்பு எதுவுமின்றி கிழக்கை மீளக் கைப்பற்றியமை பாராட்டத்தக்கது.
நடைபெற்று முடிýந்த கறைபடிýந்த சம்பவத்தை மறந்து மீண்டும் முன்னேற்றப் பாதையில் அனைவரும் நடைபோட வேண்டும் என்றார்.
இந்திரகுமார் பிரசன்னா, செயலாளர், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ).
கருணா விவகாரம் ஒரு தனிநபர் பிரச்சினை. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க அவர் மேற்கொண்ட தந்திரமே பிரதேசவாதம்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளோ அன்றி அவர்களுக்கெதிரான எந்தவொரு அமைப்புமோ பிரதேசவாதம் பேசியதில்லை. தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கைத் துண்டாட நினைத்ததில்லை. ஆனால், அந்தக் கைங்கரியத்தைச் செய்ய முனைந்தவர் கருணாவே! அவரின் வரலாறு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஓர் கறைபடிýந்த அத்தியாயம்.
உண்மை பிடிýவாதமானது. அது என்றாவது ஜெயித்தே தீரும். அந்த வகையில் வீராப்புப் பேசிய கருணாவின் சுயரூýபம் சொற்ப நாட்களிலேயே வெளிப்பட்டு அவரின் ஆட்டம் முடிýவுக்குக் கொண்டு வரப்பட்டமை பாராட்டத்தக்கது. தனது சொந்த வாழ்வில் தன் பெற்றோருடன் கழித்ததை விட அதிக காலம் போராட்ட வாழ்விலேயே செலவிட்ட கருணா, தான் சம்பாதித்த பெருமைகளை சுயநலத்திற்காக இழந்து இன்று கேவலப்பட்டு நிற்பதைக் காண முடிýகின்றது. அவரின் பிரதேசவாத கோர்ம் தென்னிலங்கையிலுள்ள பேரினவாத சக்திகளின் அபிலாiர்களுக்கு ஆக்கமளிப்பதாக அமைந்தமை கவலைக்குரியது. அதேவேளை, 'மானத் தமிழன் ஒரு போதும் மாற்றான் காலில் மண்டிýயிடமாட்டான்" எனக் கூýறிவந்த அவர், இன்று அரச படைகளிடம் தஞ்சமடைந்து தனது ஈனத்தனத்தை வெளிக்காட்டிýயுள்ளார். அவரின் செயற்பாடுகள் அகில உலகிலும் விடுதலைப் புலிகள் கட்டிýயெழுப்பி வந்த பெருமைக்கு அபகீர்த்தியாக அமைந்துவிட்டன.
போராளி ஒருவன் தன் உயிரினும் மேலாக மதிப்பது தனது அமைப்பு, கொள்கை, ஆயுதம் என்பவற்றையே. தனது விடயத்தில் இது மூýன்றையும் தூக்கி வீசிய கருணா, தப்பியோடும் போது தம்மிடமிருந்த ஆயுதங்களையும் அழித்து விட்டுச் சென்றுள்ளார். இத்தகைய செயற்பாட்டை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடிýயாது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் தந்து தமிழ்நாட்டிýல் ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்ட பலர் சிறையில் வாடிýய வரலாறுகள் மத்தியில் தமிழர் தாயகத்திலேயே ஆயுதமேந்திப் போராடிýய ஒரு முன்னைநாள் போராளி போராட்ட வரலாற்றிற்கே கறையை ஏற்படுத்திச் சென்று விட்டார்.
பிரதேசவாதம் கிளப்பப்பட்டுள்ள இன்றைய நிலைமையில் மட்டக்களப்பு- அம்பாறை மக்கள் பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒரு தாய் மக்களாக 'புலிகளே தமிழர், தமிழரே புலிகள்" என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும், தேசியத் தலைமைக்கும் விசுவாசமாகச் செயற்பட வேண்டும்.
சமன் மாணிக்க ஆராச்சி, செய்தியாளர், லக்பிம - அம்பாறை.
கருணா மிகப் பலமான நிலையிலுள்ளார். அவர் பிரபாகரனின் எட்ட முடிýயாத இடத்தில் உள்ளார் என்றே உலகம் நம்பியிருந்தது. ஆனால், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இன்றி, ஒரு சில தினங்களில் கருணாவின் கீழிருந்த நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டிýன் கீழ் கொண்டு வந்தது மெச்சத்தக்கது.
பாரியதொரு யுத்தம் நிகழப் போகின்றது என சர்வதேசமே எண்ணிக் கொண்டிýருக்கையில், மிகவும் இலாவகமாக நடவடிýக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு தசாப்தகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு நொந்து போயிருந்த மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் மீண்டுமொரு சண்டை தம்மீது திணிக்கப்படுமோ, தாம் பாதிக்கப்படுவோமோ என மிகவும் அஞ்சியிருந்தனர். அத்தகைய நிலையொன்று ஏற்படாது கருணா விவகாரம் முடிýவுக்குக் கொண்டு வரப்பட்டமை மிகவும் பாராட்டத்தக்கது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர்.
ஒரு தேசிய இனத்துக்கு ஒரு தேசியத் தலைவரே இருக்க முடிýயும். ஈழத் தமிழருக்கு வே.பிரபாகரனே தலைவர். அந்த நிலை மீண்டும் கிழக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை மகிழ்ச்சி தரும் விடயம்.
அதேசமயம், எமது தேசியத் தலைமை இது போன்ற நிகழ்வொன்று எதிர்காலத்தில் மீள என்றுமே நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிýயது அவசியம்.
மட்டக்களப்பிலிருந்து வட பகுதி மக்களை வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மட்டக்களப்பு தமிழ் மக்கள் அனைவருக்குமே தலை குனிவை ஏற்படுத்திய ஒரு விடயம். இருப்பினும், இது ஒரு சிறு கும்பலாலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிýக்கையில் மட்டக்களப்பு மக்களுக்கு தொடர்பில்லை. அதேவேளை, அதனைத் தடுக்கவும் முடிýயாத நிலையிலேயே அவர்கள் இருந்தனர்.
மறுபுறம், பாரிய மோதலொன்று ஏற்பட்டு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படும் என அனைவரும் எதிபார்த்திருந்த வேளை, புத்திசாதுரியத்துடன், மிகக் குறைந்த உயிரிழப்புடன் கருணா விவகாரத்தை முடிýவுக்குக் கொண்டு வந்த பெருமை தேசியத் தலைவர் பிரபாகரனுக்கேயுரியது. இது அவரின் சாதுரியத்தை வெளிப்படுத்தும் மற்றுமொரு நிகழ்வாகவுள்ளது.
எஸ்.கே.தாஸ், வர்த்தகர்.
கருணா மேற்கொண்ட தீர்மானம், அவரின் செயற்பாடுகள், இறுதியாக அவர் மேற்கொண்ட நடவடிýக்கை ஆகியவை மட்டக்களப்பு மண்ணில் பிறந்த ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் அவமானமான விடயமாகும். அவர் போராட்டத்தை மட்டுமன்றி தான் பிறந்த மண்ணையும் கொச்சைப்படுத்தி விட்டார்.
அதேவேளை, விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை, இனிமேலும், இதுபோன்றதொரு துரோக நிகழ்வு என்றுமே தோன்றாதவாறு நடந்து கொள்ள வேண்டும்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>