04-16-2004, 04:53 PM
கலையும் கதிர்காமரின் கனவுகள்
சனாபதி சந்திரிகா பண்டரநாயக்க குமாரதுங்காவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரும்இ சந்திரிகா குமாரதுங்கா அமைக்கப்போகும் அமைச்சரவையில் முக்கிய அமைச்சுப் பொறுப்பை ஏற்கவுள்ளவருமான லக்ஸ்மன் கதிர்காமர் ஒரு அதிஸ்ரமற்றவர்.தன்னுடைய விசுவாசத்தை எப்படித்தான் காட்டினாலும் அவரையும் ஒரு எல்லைக்கு அப்பால் நகரவிடாது தடுப்பதில் சிங்கள பேரினவாதம் குறியாக இருப்பது தற்போது தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
என்றும் சிங்கள பேரினவாதம் தமிழ் இனத்திலிருந்து அந்த மக்களின் குரல் என்ற பெயரில் அவர்களுக்கு எதிரான சில கோடரிக் காம்புகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற கோதாவில் கருத்துச் சொல்ல மட்டுமே சில தமிழர்கள் தேவை.
மற்றும்படி இலங்கையின் அரசின் உயர்பீடங்களை அலங்கரிக்கும் அளவுக்கு அவர்களிற்கான வாய்ப்புக்களை வழங்க எந்தச் சிங்கள கட்சிகளும் தயாரில்லை என்பதே யதார்த்தம்.
இந்தப் பதின்மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளிவரமுன்னரே சந்திரிகாவின் தலைமையிலான ஜக்கிய சுதந்திர மக்கள் முன்னணியின் சார்பில் பிரதமராக லக்ஸ்மன் கதிர்காமர் நியமிக்கப்படலாம் என சனாதிபதி சந்திரிகாவின் தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆனால்இ தற்போது பிரதமாராக மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டு லக்ஸ்மன் கதிர்காமர் புறந்தள்ளப்பட்டுவிட்டார்.
லக்ஸ்மன் கதிர்காமர் பிரதமராக நியமிக்கப்படாததற்குக் கூறப்படும் நொண்டிச்சாட்டு அவர் நேரடியாக மக்களினால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தேசியப்பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் என்பதாகும்.
ஆனால் உண்மை அதுவாக இருக்க முடியாது இலங்கையின் நாடாளுமன்றதில் ஒரு தமிழர் பிரதமராக நியமிக்கப்பட்டுவிடலாம் என்ற காழ்ப்புணர்ச்சி மட்டுமே.
இதனை அந்த சட்டத்தரணி கதிர்காமருக்கும் புரியாமல் இருக்கப்போவதில்லை. ஆனால் அவரின் தொங்கிப்பிழைக்கும் எஜமான விசுவாசம் கண்டு கொள்ளப்போவதில்லை.
இதற்கு முதல் இலங்கையின் பொலஸ்மா அதிபராக இருந்த ஆனந்தராஜாவிற்கும் ஒரு தமிழர் என்ற வகையில்தான் பொலிஸ்மா அதிபராக இருப்பதற்கான பதவி நீடிப்பு வழங்கப்படாது ஒதுக்கப்பட்டார்.
இப்போது கதிர்காமர் வரலாற்றின் தமிழினத் துரோகிகளான இவர்களுக்கு அவர்கள் சார்ந்த இனம் வழங்கும் தண்டனைகளை விட அவர்கள் யாருக்கு விசுவாசமாக இருந்தார்களோ அவர்களே இவர்களுக்கு வழங்கிய தண்டனையாகும்.
கதிர்காமரின் கனவுகள் எத்தனை கலைந்து போயின முதலில் ஜக்கிய நாடுகள் சபைக்கான பொதுச் செயலாளர் பதவிஇ பின்னர் பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் செயலாளர் கனவுஇ இப்போது பிரதமர் கனவு.
போகிறபோக்கில் மிகவிரைவில் நாடாளுமன்றில் கதிர்காமர் வாய்விட்டே பாடக்கூடும் கனவே கலையாதே..... என்று..
நன்றி - வேழினி ஈழநாதம்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>