04-16-2004, 02:49 PM
<span style='color:red'>அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஐனாதிபதி நடந்துகொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு
தமிழ் மக்கள் மத்தியில் தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டாது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஐனாதிபதி நடந்துகொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுத்ததன் மூலம் இது நிரூபணமாகியுள்ளது என்று கூட்டமைப்பின் இணைப்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கீழ் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களில் 18 பேர் கலந்துகொண்ட கூட்டமைப்பின் குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
தமிழ் மக்களுக்கான தன்னாட்சி நிருவாக சபை ஒன்றை உருவாக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளமை இந்தக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஐனாதிபதி அந்த ஆணையை புறக்கணித்து தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கியதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ள சபாநாயகர் தெரிவு ஐனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் நிர்ணய சபை ஆகிய விடயங்கள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், இவை தொடர்பாக எதிர்வரும் 20 ஆம் திகதி விடுதலைப் புலிகளுடன் பேசிய பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
ஐனாதிபதியின் இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்களை அவமதிப்பதாக அமைவதாகவும், சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படுமா என்ற சந்தேகத்தையும், கேள்வியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>