04-16-2004, 02:47 PM
<span style='color:red'>கருணா தரப்பிலிருந்த 'ஜிம்கெலி\" தாத்தா உட்பட சில பொறுப்பாளர்கள் மீண்டும் புலிகளுடன் இணைய விருப்பம்.
கருணா குழுவிலிருந்த 'ஜிம்கெலி" தாத்தா உட்பட சில பொறுப்பாளர்கள் மீண்டும் விடுதலைப்புலிகளுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக புலிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்ற போது இவர்கள் கருணாவினால் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பை விட்டு கருணா தப்பிச் சென்ற நிலையில், தற்போது கருணா குழுவில் இருந்த பலர் மீண்டும் புலிகளுடன் இணைந்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாகவே நேற்று முன்தினம் புதன்கிழமை கருணா குழுவில் முக்கிய இடம் வகித்த விசு புலிகளுடன் இணைந்து கொண்டதாகச் செய்திகள் தெரிவித்த நிலையில், கருணா குழுவின் முக்கிய இராணுவப் பொறுப்பாளராகவிருந்த 'ஜிம்கெலி" தாத்தாவும் புலிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தற்போது இவர் மட்டக்களப்பின் ஏதோவொரு பகுதியிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரை வன்னிக்கு வருமாறு புலிகளின் தலைமைப்பீடம் அழைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. </span>
நன்றி புதினம்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>