04-16-2004, 12:30 PM
<span style='color:red'>கூட்டமைப்பு எம்.பிக்கள் 22 பேரும் 20 ஆம் திகதி புலிகளுடன் சந்திப்பு
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் இடம்பெறுவுள்ளது.
இச்சந்திப்பில் வடக்கு-கிழக்கில் இருந்து தெரிவான 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலம் தெரிவான மா.க.ஈழவேந்தன், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரும் பங்குபற்றுவர். கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகள், விடுதலைப் புலிகளும் கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் திட்டங்கள் ஆகியன தொடர்பாக இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்படவிருக்கின்றன.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டம் இன்று கொழும்பில் இடம்பெறவிருக்கின்றன. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கில் தங்கியிருந்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்றுக் கொழும்பு சென்றடைந்தனர்.
சபாநாயகர் தெரிவு மற்றும் தெற்கு அரசியல் நிலை தொடர்பாக இக்குழுக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவிருக்கின்றது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்றுக்கொழும்பை வந்தடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>