04-15-2004, 10:51 PM
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் ஒருநாள் வெல்லும்
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் ஒருநாள் வெல்லும்" - இந்த ஆன்றோர் நெறி தென் தமிழீழத்தில் ஒருதடவை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்திற்கே பெரும் புள்ளியாய் வந்த கருணாவின் ஆட்டம் 40 நாள்களில் ஒடுக்கப்பட்டிருக்கிறது. தன்னைக் கவ்விய சூதை இந்த 40 நாள்களில் வென்றிருக்கிறது தர்மம்; வரலாற்றுத் துரோகத்துக்கு எதிரான தர்மயுத்தம் பெரிய எதிர்ப்பேதுமின்றி சிலநாள்களிலேயே வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.
இந்த 40 நாள்களும் கருணா போட்ட வாய்ப்பந்தலை - வாய்வீச்சுப் பிரபலாபத்தைக் கேட்டவர்கள்இ இப்போது கருணாவும் அவரது கும்பலும் புறமுதுகிட்டு ஓடித் தப்பியதைப் பார்த்து வாயடைத்துப்போயிருக்கின்றார்கள். தென்தமிழீழத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து ஆரம்பம் முதலே புலிகளின் தலைமை குழப்பமோஇ பதற்றமோ காட்டாமல் தெளிவான - நிதானமான - உறுதியான - போக்கை வெளிப்படுத்தியது. வெறும் வாய்ச்சவடால் விடாமல்இ "இது கருணா என்ற தனி மனிதனின் பிரச்சினை. அதற்குரிய வகையில் அது அணுகப்படும்" - என்ற திட்டவட்டமான தகவலை வெளிப்படுத்தியதோடு அமைதி பேணியது. ஆனால்இ தென்னிலங்கை ஊடகங்களும்இ இந்திய செய்தி நிறுவனங்களும்இ இந்திய சார்புடைய பிற செய்தி அமைப்புக்களும்தான் ஒன்றுமில்லாத கருணாவை ஊதிப்பெருப்பித்து பெரும் இராணுவ வித்தகராகவும்இ வலிமைமிக்க சக்தியாகவும் வெளிப்படுத்தி நின்றன. கருணாவும் தன்பாட்டுக்கு இந்த ஊடகங்களைப் பயன்படுத்தி தன்மானத் தலைவன் பிரபாகரனுக்கு நிகராக - ஏன்இ சில சமயங்களில் அவரைவிடப் பெரிய தலைவராக - வெளியுலகிற்கு அம்பலப்படுத்த முயன்றார்.
ஈழத் தமிழர்கள் நடத்திய பல வரலாற்றுச் சமர்கள் தன்னொருவனால் மட்டுமே சாத்தியமாயிற்று என்றும் இல்லையேல் அவை தோல்வியில் முடிந்திருக்கும் என்றும்இ ஏன் தலைவர் பிரபாகரன்கூட தன்னால்தான் காப்பாற்றப்பட்டு உயிர் வாழ்கிறார் என்றும்கூட நீட்டி முழங்கினார் கருணா. வன்னியில் உள்ள புலிகளின் தலைமைஇ இந்த யுத்தநிறுத்த காலத்தில் அரசபடையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைத் தாண்டித் தனது எல்லைக்குள் வந்து எதுவும் செய்துவிடாது என்ற நம்பிக்கையில்தான் இப்படி எல்லாம் முழங்கினார் கருணா. இப்படி எல்லாம் வரலாற்றுத் துரோகம் புரிந்தார் அவர்.
ஆனால்இ நிஜத்தில் நிலைமையோ வேறாகவிருந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைத் தாண்டி வந்து புலிகளின் படைகள் மட்டு.இ அம்பாறை மாவட்டங்களுக்குள் திடீரென வந்து விஸ்வரூபம் எடுத்து நின்றபோது கருணா கும்பல் நிலை குலைந்து போனது. தனது தாயகம் என்று பிரதேசவாதம் பேசிய இடத்தை விட்டே அது ஓட்டம் பிடித்தது. அப்போதுதான் "வெறும் மண் குதிரை"யைப் பார்த்து ஆஹாஇ ஓஹோ என்று புளுகித்தள்ளிய தென்னிலங்கை மற்றும் இந்தியசார்பு ஊடகங்களுக்கு உண்மை புரிந்தது. மாவீரனாகத் தாம் போற்றிப் புகழ்ந்த கருணாஇ நின்று யுத்தம் புரியக்கூடத் திராணியோஇ தைரியமோ இல்லாமல் ஓட்டம் பிடித்தது கண்டு அவை வாய் பிளந்து நிற்கின்றன. ஒரு வீரன் எந்த நெருக்கடி வந்தாலும் தனது ஆயுதத்தைக் கைவிடமாட்டான். அல்லது ஆயுதத்தைக் கேவலப்படுத்தவோ அல்லது அழிக்கவோ முற்படமாட்டான். ஆனால்இ கருணா தன்னிடமிருந்த ஆயுதங்களில் கணிசமான ஒரு தொகுதியைத் தீவைத்து எரித்து அழித்துவிட்டுச் சென்றார் என வெளியான செய்திகள் கருணாவின் கேடுகெட்ட தரத்தை வெளிப்படுத்தப் போதுமானது.
இந்த யுத்தநிறுத்த காலத்திலும் பெரும் இரத்தக்களறி ஏதும் இல்லாமல் கருணாவின் கொடூரப் போக்கிலிருந்து மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டப் பிரதேசங்களை விடுவிக்கும் தனது படைநகர்வை கனகச்சிதமாகச் செய்ததன்மூலம் தனது இராணுவ வல்லமையைப் புலிகளின் தலைமை மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கின்றது. உண்மையை உலகுக்கு எடுத்தியம்ப முயன்ற கொழும்புப் பத்திரிகை நிறுவனங்களை கருணா கும்பல் தனது அடாவடித்தனங்களினால் நெருக்குதலுக்குள்ளாக்கிஇ அந்தப் பத்திரிகைகளைத் தென்தமிழீழத்துக்கு வரவிடாது தடுத்தது. என்றாலும் அப்பத்திரிகைகள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து சற்றும் விலகாமல் உண்மையை உலகிற்கு உரைக்கும் - உணர்த்தும் - தமது பணியை விடாது புரிந்தன. அவற்றின் நிலைப்பாடு சரி என்பதும் இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி: உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>