04-15-2004, 02:27 PM
<span style='color:red'>விசுவமடு துயிலும் இல்லத்தில் நீலனின் வித்துடல் விதைப்பு
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் நீலனின் (சீனித்தம்பி சோமநாதன்-ஆரையம்பதி-3 மட்டு) வித்துடல் இன்று மாலை விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் பூரண இராணுவ மரியாதைகளுடன் புனித விதைகுழியில் விதைக்கப்படும்.
மட்டக்களப்பில் இருந்து எடுத்து வரப்படும் வித்துடல் இன்று காலை புதுக்குடியிருப்புக்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்தில் வித்துடல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்படும் இதனையடுத்து வித்துடல் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்படும்.
இதேவேளை கருணா குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட மேஐர் தமிழீழனின் (சதாசிவம் திருக்கேதீஸ்வரன் - மகிழவெட்டுவான், ஆயித்தமலை-மட்டு) வித்துடல் இன்று இலுப்பையடிச்சேனையில் மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்படும்.
மேலும் மட்டக்களப்பில் துரோகி கருணாவால் கடந்த 10 ஆம் திகதி கப்டன் மாவேந்தன் (திருநாவக்கரசு புவனேஸ்வரன், இறாலோடை காயங்கேணி-மட்டு), கப்டன் நம்பி (தர்மலிங்கம் பத்மநாதன், மாதவன் வீதி, கல்முனை -3 அம்பாறை), ஆதரவாளர் மோகன் (கருவங்கேணி-மட்டு) ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டமை தெரிந்ததே. </span>
நன்றி: ஈழநாதம் ; நன்றி புதினம்...!
--------------------
<span style='color:red'>கருணாவால் கொல்லப்பட்ட புலிகளின் உளவுப் பிரிவினர்
புலிகளின் தாக்குதலையடுத்து தப்பியோடிய கருணாவின் படையினர், புலிகளின் உளவுப் பிரிவினர் 5 பேரையும் பிரபாகரனின் ஆதரவாளர் ஒருவரையும் சுட்டுக் கொன்றுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட உளவுப் பிரிவின் துணைத் தலைவர் நீலன் சின்னதம்பி என்பவரை கருணா சுட்டுக் கொன்றுள்ளார்.
அதே போல தமிழ்ஈழன், மாவேந்தன், நம்பி, வர்ணகீதன் ஆகிய விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவினரையும், புலிகளின் ஆதரவாளரான மோகன் என்பரையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இவர்களை மீனகம் முகாமுக்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்த கருணா, பின்னர் நீலனை மட்டும் தனியே பிரித்து கைவிலங்கிட்டு சிறைப்படுத்தியுள்ளார். அவரைத் தாக்கி விசாரணை நடத்திய கருணா, கடைசியில் தப்பியோடும்போது மருதம் முகாமில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளார்.
அப் பகுதியை புலிகள் கைப்பற்றியபின் உள்ளே சோதனையிட்டபோது, கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் நீலன் இறந்து கிடந்தார்.
நீலனின் உடல் இன்று பொது மக்கள் பார்வைக்காக மட்டக்களப்பு பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தளபதிகள் உள்பட ஏராளமான பொது மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் வன்னி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு மாவீரர் சமாதியில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
அதே போல கொல்லப்பட்ட மற்ற 4 உளவுப் பிரிவினரின் உடல்களும் தண்டியடி மாவீரர் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டது.</span>
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>