04-14-2004, 11:42 PM
<span style='color:red'>ஐ.ம.சு.மு.க்குள் எழுந்துள்ள முறுகல் நிலையையடுத்து, தேசிய அரசை அமைப்பது குறித்து ஐனாதிபதி ஆராய்வு
ஐ.ம.சு.முன்னணிக்குள் எழுந்துள்ள முறுகல் நிலையையடுத்து, அதைச் சீர்படுத்த ஓர் உயர்மட்டக் குழுவை நியமித்துள்ள ஐனாதிபதி சந்திரிகா, தற்செயலாக இந்த முயற்சிகள் பலனளிக்காத பட்சத்தில் தேசிய அரசை அமைப்பதற்கான வாய்ப்புக்களை ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதம மந்திரி மஹிந்த ராஐபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஓர் உயர்மட்டக் குழுவில் அநுரா பண்டாரநாயக்க உட்பட, டக்ளஸ் தேவானந்தா, பேரியல் அஸ்ரஃப் போன்றோருடன் இன்னும் சில முக்கிய உறுப்பினர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இவர்கள் தற்போதைய நெருக்கடி நிலையை ஜே.வி.பி.யின் தலைமையுடன் பலவித பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டு தீர்க்க முயற்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்த நெருக்கடிகளுக்கு விரைவில் ஒரு தீர்வு காணப்படாதவிடத்து, இன்னுமொரு தேர்தலைத் தவிர்க்குமுகமாக, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஐனாதிபதி சந்திரிகா ஆராய்ந்து வருவதாகப் பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. </span>
நன்றி புதினம்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>