04-14-2004, 06:09 PM
Eelavan Wrote:போன்று இணைப்பில் என்னும் தரவில் விருந்தினர்,மறைவிலுள்ளவர்கள் இருவரினது எண்ணிக்கை காண்பிக்கப்படுகின்ரது ஆனால் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை காணப்படவில்லை இது தொழினுட்பத் தவறு என நினைக்கின்றேன்அது தொழில் நுட்பதவறு அல்ல Eelavan நீங்கள் வரும் போது மறைவிலேயே வந்துள்ளீர்கள். அப்போது வேறு எவருமில்லை அல்லது மற்றவர்களும் மறைவில் வந்திருக்க வேண்டும். அப்படியான சந்தர்ப்பத்தில்.
ஆங்கிலத்தில் வந்திருதால் Members: 0 என்று வந்திருக்கும்.
இங்கு 0 என்று வந்தாலும் ஒன்று, வராமல் இருந்தாலும் ஒன்று என்ற ரீதியில். அதனை நானே அகற்றினேன். அங்கு யாராவது ஒருவர் தன்னை மறைக்காது காண்பிப்பது போல் வந்திருந்தால் உறுப்பினர்: 1 என்றோ அல்லது எத்தனை பேர் நிற்கிறார்கள் என்றோ வரும்.
Eelavan Wrote:கீழேயுள்ள online now என்னும் தரவிற்கு இணைப்பிலுள்ள உறுப்பினர்கள் என மாற்றம் செய்யலாம்அது இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை மிகவிரைவில் மற்றத்திருத்தங்களுடன் இதனையும் திருத்தம் செய்கிறேன்.
ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டது மிகபெரிய வசனமாகவுள்ளது (சொல்) இலற்றை அங்கு எழுதும் போது இரன்டா அதை முறிக்கின்றது.
Eelavan Wrote:படப்புத்தகம்- படங்கள்படப்புத்தகம் என்பதை படத்திரட்டு அல்லது படங்கள் என்று போடுவது தான் நல்லது.
சுயகுறிப்புகள்- சுயவிபரம்
மனை - முகப்பு
தொடுப்பு - இணைப்புகள்
நிர்வாகப்பக்கம் - நிர்வாகிகள்
சுயகுறிப்புக்குள் சுயவிபரம் உள்ளது .(Profile )? அது இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை .
online இல் இருப்பதை இணைப்பில் என்று குறிப்பிடுவதால் link க்கும் இணைப்பு என்ற போட்டால் குழப்பம் வரும் என்பதாலேயே தொடுப்பு என்ற போட்டேன். இதே சொல்லே அனேகமாக பயன்படுத்தப்படுகிறது.
நிர்வாகப்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் நிர்வாகிகள் அல்ல.
இதற்கு நிர்வாகம் என்றே எழுத நினைத்தேன். ஆனால் இதை நிர்வகிப்பவருக்கு மட்டும் ஒரு பக்கம் உள்ளது. அதற்கு அந்தப்பெயரையிட்டேன்.
மனை, முற்றம், முகப்பு, இல்லம், இதில் எதனைப்பயன்படுத்துவதிலும் தவறுஇல்லை என்று நினைக்கிறேன்.
மற்றது நான் ஆங்கிலம் தெரியாமல் தான் இவ்வளவு வெப்சைட்டும் பார்க்கிறேன். புதிய ஆங்கில கலைச்சொற்களின் அர்த்தம் தெரியாத போதும் அதன் செயற்பாடுகளை வைத்து புரிந்து கொண்டிருக்கிறேன்.
அதே போல் தமிழும் எவருக்கும் சிக்கலைக்கொடுக்காது என்றே நம்புகிறேன்.
ஆனால் ஒரு இடத்தில் இணைப்பு என்றால் online என்றும் இன்னொருஇடத்தில் link என்றும் இருக்ககூடாது என்று விரும்புகிறேன்.
இவை தான் குழப்பத்தை ஏற்படுத்தும்.
இன்னும் சில குறிப்பிடவேண்டும் மீண்டும்..................

