04-14-2004, 04:08 PM
கருணா தப்பிப்பதற்கு சிறீலங்கா இராணுவமே உதவியதாக இந்தியப் பத்திரிகை தெரிவித்துள்ளது
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 14 ஏப்பிரல் 2004, 20:55 ஈழம் ஸ
பிரிந்து செயற்பட முனைந்த கருணா, அவருக்கு மிகவும் தேவையான எட்டுப் பேருடன் திடிரென தப்பிச் செல்ல முடிந்ததற்கு சிறீலங்கா இராணுவத்தின் உதவியே காரணம் என்று தங்களுக்கு நம்பகமாகத் தெரியவந்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் என்னும் இந்திய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கருணாவும் அவரது நெருங்கிய சகாக்களும் தப்பியோடி, காட்டிற்குள் ஒழிந்திருப்பதாகவும், கொழும்பில் இருப்பதாகவும், வெளிநாடு சென்றுவிட்டதாகவும் பலவிதமான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறீலங்கா இராணுவத்தினர், கருணா குழுவினரைக் காப்பாற்றி சிறீலங்காவிற்குள் ஒரு இரகசிய இடத்தில் ஒழித்து வைத்திருப்பதாக தங்களுக்கு நம்பகமாகத் தெரியவந்துள்ளதாகவே இப்பத்திரிகையின் கொழும்பு நிருபர் பி.கே.பாலச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருணா தனது கட்டுப்பாட்டிற்குள் கீழ் மட்டக்களப்பின் சில பகுதிகளை வைத்திருந்தபோது, போராளிகள் எவரையும் எந்தப் பத்திரிகையையோ வானொலியையோ பார்க்க கேட்க அனுமதிக்கவில்லை என்றும், ஒரு திறந்த சிறைச்சாலையில் வைத்திருப்பது போன்றே போராளிகளை வைத்திருந்தமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கருணாவின் முகாமில் அவருக்குக் கீழே கட்டாயத்தின் பேரிலேயே போராளிகள் செயற்பட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது என்று குறிப்பிடும் இந்த நிருபர், அதற்கு ஆதாரமாக, இந்தப் போராளிகள் யாரும் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பார்க்கவோ வைத்திருக்கவோ கூடாது என்று கடுமையான தடை உத்தரவு போடப்பட்டிருந்த போதிலும், போராளிகள் இரகசியமாக தலைவரின் சிறிய படங்களை வைத்திருந்ததுடன், தினமும் காலையில், தலைவர் படத்தின் மீது வழமையாகச் செய்வது போன்று சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னரே தங்களது தினசரிக் காரியங்களில் ஈடுபட்டிருப்பதை விடுவிக்கப்பட்ட பல போராளிகள் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
தலைவர் பிரபாகரனைப் பற்றி தினமும் கருணா அவதூறான பல செய்திகளையும் தகவல்களையும் தெரிவித்து வந்த போதிலும், போராளிகள் எவரும் அதை நம்பவில்லை என்பதையும் விடுவிக்கப்பட்ட போராளிகள் உறுதிசெய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1980ம் ஆண்டிலிருந்து யாருக்கெதிராக கொடிய யுத்தத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரோ, இறுதியாக அதே எதிரிகளிடம் மண்டியிட்டு சரணடைந்து பாதுகாப்புத் தேடியுள்ள கருணா, ஈழத்திமிழினத்திற்கு அவமானம் தேடித் தந்துள்ளார் என்று குறிப்பிடும் இப்பத்திரிகை, கருணாவின் கட்டுப்பாட்டில் கிழக்கிலங்கையின் சில பகுதிகள் இருந்துள்ள 38 நாட்களும் ஈழத் தமிழரின் வீரவரலாற்றில் கறை படிந்த காலப்பகுதி என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
Source: Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>