Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மழலைகளும்...சினிமாவும்...பெற்றோரும்...குறைபாடு யாருடையது..?!
#1
[Image: thiru.bmp]

"..... மக்களுக்கு பிடித்திருக்க வேண்டுமென்பதற்காக, மக்களுக்குப் பிடித்தமானவையென்று வர்ணிக்கப்படுகின்ற கீழ்த்தரமான காரியங்களை மனங் கூசாமல் நாம் செய்ய முடியுமா? எல்லோரும் அணிகிறார்கள் என்று எல்லோருக்குமே தெரியும் என்பதற்காக கோவணத்துண்டுகளை 'கோலிங் பெல்லுக்கு' அருகே யாரும் கொழுவுவதில்லையே!..... "
தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில் அண்மையில் சின்னஞ் சிறுசுகளுக்கான வாராந்த நிகழ்ச்சியொன்றை தற்செயலாகப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.

நிகழ்ச்சியை நடத்தும் சிறுமியுடன் தொலைபேசி மூலமாக சின்னஞ் சிறுசுகள் தொடர்பு கொண்டு உரையாடி தங்கள்; கல்வி மற்றும் பொழுது போக்குகள் எனப் பலவாறான விடயங்களையெல்லாம் பற்றி சுவாராஸ்யமாகப் பேசியதைக் கேட்கவும் பார்க்கவும் மனதுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறுவர்கள் எழுதியனுப்பிய கடிதங்களையெல்லாம் வாசித்துக் காட்டிய அச் சிறுமி அவர்கள் வரைந்து அனுப்பிய ஓவியங்களையெல்லாம் காண்பித்தார்.

இடையில் இரு மழலைகள் மிகவும் விரசமான தென்னிந்திய சினிமாப் பாடல் ஒன்று பின்னணியில் ஒலிக்க நடனமாடிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. அந்தப் பாடல் 'காதல்..." என்று தான் ஆரம்பிக்கிறது. ஆனால், அப்பாடலுக்கு ஆடிய சிறுவனுக்கும் சிறுமிக்கும் 5 வயது கூட ஆகாது என்று நினைக்கிறேன்.

சினிமாவில் காதலன், காதலி டூயட் பாடுவது போன்றே அந்த நிகழ்ச்சி.

இதுமட்டுமல்ல. வேறு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே 'மன்மதராசா...மன்மதராசா...', சின்னவீடு பிடிக்குமா.....பெரியவீடு..பிடிக்குமா' போன்ற மிகவும் விரசம் ததும்பும் பாடல்களுக்கும் கூட மழலைகளை ஆட வைத்து ரசிக்கின்றார்கள். அந்த மழலைகளுக்கு மன்மதராசாவையும் யாரென்று தெரியாது.

சின்ன வீடு பெரிய வீடு என்றால் என்ன சமாச்சாரம் என்றும் புரியாது. என்ன விளங்குதோ இல்லையோ ஆடிக் குதிக்கின்றார்கள். பெற்றோர்களும் அதைப் பார்த்து குதூகலித்துப் போகிறார்கள்.

அன்றொருநாள், இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் காலை 7 மணிக்கும் நண்பகல் 12.45 மணிக்கும் இடையில் 'மன்மதராசா...' பாடல் ஜந்து தடவைகள் வேறுவேறு நிகழ்ச்சிகளில் ஒலிப்பரப்பானதாக நண்பர் ஒருவர் கூறி வேதனைப்பட்டார். அவரும் ஜந்து தடவைகளும் அந்த மன்மதராசாவைக் கேட்டுத்தான் இருக்க வேண்டும். அல்லது சரியாக எப்படி ஜந்து தடவைகள் என்று கணக்குச் சொல்ல முடியும்.?

இந்தப் பாடல்கள் எல்லாம் போதாதென்று, மன்மதராசாவின் மெட்டிலேயே 'போடு போடு....' பாடலும் தாய்த் தமிழகத்தில் இருந்து எம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. 'பொத்து....பொத்து...' என்றும் ஒரு பாடல். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இந்த அநியாயத்தை.

மன்மதராசா பாடல் ஜனரஞ்சகமாகி விட்டதால் அடிக்கடி போட வேண்டியிருக்கிறது என்று தனியார் ஒலிபரப்புச் சேவையொன்றின் அதிகாரியொருவர் சொன்னார். இத்தகைய விரசமான பாடல்கள் என்றால் ஜனரஞ்சகமானவையாகி விட்டனவா? அல்லது ஜனரஞ்சகமானவையாக்கப்பட்டு விட்டனவா?

மக்களுக்கு பிடித்திருக்க வேண்டுமென்பதற்காக, மக்களுக்குப் பிடித்தமானவையென்று வர்ணிக்கப்படுகின்ற கீழ்த்தரமான காரியங்களை மனங் கூசாமல் நாம் செய்ய முடியுமா? எல்லோரும் அணிகிறார்கள் என்று எல்லோருக்குமே தெரியும் என்பதற்காக கோவணத்துண்டுகளை 'கோலிங் பெல்லுக்கு' அருகே யாரும் கொழுவுவதில்லையே!

புதிய மனிதனை உருவாக்க புதிய ரசனையையும் உருவாக்க வேண்டும். இது எடுத்த எடுப்பில் செய்யப்படக்கூடியதுமல்ல: படிப்படியாகச் செய்யப்பட வேண்டும்.

ஆனால் நமது தொலைக்காட்சி சேவைகளும் வானொலிகளும் ஊடகங்களும் என்ன செய்கின்றன. மழலைகளையெல்லாம் மன்மதராசாக்களாக்குகின்றன.

ஏற்கனவே சமுதாயத்தில் பல பண்புச் சீரழிவுகள். இதற்கிடையே மழலைகளும் மன்மதராசாக்களாகி விட்டால் நாம் எங்கே போய் முடியப் போகின்றோம்.

அண்ணாவியார்.

sooriyan.com.....!

-------------------------------

<span style='font-size:21pt;line-height:100%'>உந்த மன்மதராசாவில பாடல் வரிகளில் விரசம் இருக்கோ இல்லையோ.....பொழுதுபோக்கிற்குப் பாக்கக்கூடிய சினிமா டான்ஸ் இருக்கு....!

ஆனா கொழும்பு வீதிகளிலும் பஸ்ராண்டுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அவற்றிற்கு அருகிலும்...பஸ்ஸுகளிலும்...மேற்கில பெரும்பாலான இடங்களிலும்...மன்மதராசாக்களினதும் மன்மதராணிகளினதும் நிஜ ஆட்டங்களை சிறுவர்கள் \"Live\" ஆக காண்கின்றனரே அதை யார் தடுப்பதோ....???! இது மன்மதராசாவுக்கு ஒத்தூதவதற்கல்ல....இதோட அதையும் கவனிச்சா நல்லம் எண்டு சொல்ல வாறம்...!</span> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மழலைகளும்...சினிமாவும் - by kuruvikal - 04-14-2004, 03:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)