04-14-2004, 02:55 PM
<span style='color:red'>இயக்கச் சொத்துக்களைத் தவறாகக் கையாள வேண்டாம்
பிரிவினைக் குழுவினர் விட்டோடியதைத் தொடர்ந்து இயக்கத்தின் சொத்துக்கள் விசமிகளால் களவாடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சில சம்பவங்களில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள்கூடக் களவாடப் பட்டிருப்பதாகவும் பிழையான இடங்களுக்குக் கைமாறியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இயக்கத்தின் உடைமைகள் என்பவை தமிழர்களின் உடமைகளே என்பதை எல்லோரும் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். எமது இயக்கத்தின் சொத்துக்கள் வெறுமனே பணத்தை மாத்திரம் கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல. எவரும் விலைமதித்துவிட முடியாத இரத்தமும் வியர்வையும் சிந்தியே அவை பெறப்பட்டன. எங்கள் உடைமைகளில் எங்கள் மாவீரரின் கனவுகள் உள்ளன. அவர்களைப் பெற்றவர்களின் கண்ணீர் உள்ளது. இதைத் தயவுசெய்து புரிந்துகொண்டு இயக்கத்தின் உடமைகளில் எதையாவது எங்காவது காண்பவர்கள் தாமதியாது அவற்றைக் கரடியனாற்றில் உள்ள நிரு வாகசேவைச் செயலகத்திலோ அல்லது கொக்கட்டிச்சோலையிலுள்ள மாவட்டச் செயலகத்திலோ கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும் என்று மட்டக்களப்பு அம்பாறையின் படைத்துறைப் புலனாய்வினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இயக்கச் சொத்துக்களைக் கையகப்படுத்துவதோ வைத்திருப்பதோ பயன்படுத்துவதோ விற்பதோ அல்லது கைமாற்றுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.</span>
14-04-2004
நன்றி தமிழலை..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>