04-14-2004, 02:48 PM
<span style='color:red'>கிழக்கு இலங்கையில் மீண்டும் நார்வே அமைதிக் குழு
கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு இலங்கைப் பகுதிகளில் இருந்து வெளியேறிய நார்வே அமைதிக் குழுவினர், இப்போது மீண்டும் அப் பகுதிகளில் தங்களது கண்காணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து தனித்து இயங்கப் போவதாக கருணா அறிவித்ததையடுத்து அந்தப் பகுதியில் இருந்த அமைதிக் குழுவினர் வெளியேறினர்.
இப்போது மட்டக்களப்பும் அப்பாறை மாவட்டமும் புலிகள் வசம் மீண்டும் வந்துவிட்டதையடுத்து நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழு மீண்டும் அப் பகுதிகளில் தனது செயல்பாட்டை ஆரம்பித்துள்ளது.
இந்தக் குழுவின் துணைத் தலைவரான ஹக்ருப் ஹாக்லேன்ட் இன்று இதனைத் தெரிவித்தார். இப் பகுதியில் மெதுவாக சகஜ நிலைமை திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை ராணுவத்துடனான புலிகளின் போர் நிறுத்த உடன்படிக்கையின் விதிகளை இந்தக் குழு அமலாக்கி வருகிறது. ஆனால், இப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட கருணா அமைதிக் குழுவினரின் செயல்பாட்டைத் தடுத்தார்.
தன்னுடன் இலங்கை ராணுவம் தனி உடன்பாடு செய்ய வேண்டும் என்றார். கருணாவுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பாத நார்வே குழுவினர் அப் பகுதியில் இருந்து வெளியேறினர்.
இந் நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இப் பகுதி வந்துவிட்டதால் நார்வே குழுவினர் மீண்டும் இங்கு வந்திறங்கியுள்ளனர். மட்டக்களப்பில் புலிகள் அமைத்துள்ள புதிய நிர்வாகத்துடன் அவர்கள் பேச்சுவார்த்தையையும் தொடங்கியுளளனர்.
இதற்கிடையே கருணாவைத் தேடும் புலிகளின் வேட்டை தீவிரமாகியுள்ளது. தனக்கு மிக நெருக்கமான 10 பேருடன் கருணாவை காட்டுப் பகுதியில் பார்த்ததாக சிலர் கூறியதையடுத்து அங்கு புலிகளின் படை தேடுதல் வேட்டை நடத்தியது. ஆனால், அவர் சிக்கவில்லை.
இந் நிலையில் கருணாவை இலங்கை ராணுவம் காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. </span>
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>