04-14-2004, 02:15 PM
கனவு மெய்ப்பட வேண்டும்
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/kanavu02.jpg' border='0' alt='user posted image'>
''மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து அழகிகள் மீட்கப்பட்டனர். -சென்னை வருகை!'' எந்த காலத்திலோ செய்தித்தாள்களில் வந்த, இந்த ஒரு வரியின் பின்புலத்தில் இருக்கிற ரத்தத்தையும், வலியையும், சோகத்தையும், அது விட்டுவிட்டுப் போன சொந்தங்களையும் நிஜமாக்கி, நெஞ்சில் தைத்திருக்கிறார் ஜானகி விஸ்வநாதன். 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு போராடும் பெண்ணினத்திலிருந்து வந்திருக்கும் 100 சதவீத ஐ.எஸ்.ஐ இயக்குனர்!
எங்கேயோ உலக வரைபடத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய தேசத்தில் திரையிட்டு, மொழி புரியாத கனவான்களுக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஒரு கூட்டிற்குள்ளேயே பறிமாறிக் கொள்ளும் பழக்க வழக்கத்தை மாற்றி, தமிழ்நாட்டு திரையரங்குகளிலும் படத்தை திரையிட்டிருக்கிறார்கள். வாழ்க! வெல்க!
மங்களாபுரம் கிராமத்தில் வசிக்கும் டாக்டர் மோகனசுந்தரத்திற்கு மத்திய அரசின் உயரிய விருதான மகசேசே விருது கிடைக்கிறது. அவரை ஆங்கில பத்திரிகையன்றின் சார்பாக பேட்டியெடுக்க வருகிறாள் நந்திதா. யார் இந்த நந்திதா? கருவிலிருக்கும்போதே தந்தையை பிரிந்தவள். அந்த தந்தைதான் விருது பெற்ற மோகனசுந்தரம். தன் கனமான கோடரி கோபத்தை மோகனசுந்தரத்தின் மீது வெளிப்படுத்துகிறார் நந்திதா. ஆனால் அதைவிட கனமாக இருக்கிறது உண்மை! அது மனசை பிளந்து மௌனத்தை அலற வைக்கிற பிளாஷ்பேக்!
தேவதாசிகளின் மென்சோகத்தை இவ்வளவு அற்புதமாக யாரும் சொல்லியிருக்க முடியாது. மகனை கொஞ்சக்கூட முடியாமல் தன் அறைக்குள் ஜமீன்தாரை அனுமதித்து கதவை தாளிடும் தாய். வெளியே, ஏக்கத்தோடு காத்திருக்கும் பிஞ்சு மகன். நெஞ்சடைக்க வைக்கிறார்கள் பல காட்சிகளில்.
பல வருடங்களுக்குப்பின் பிரிந்துபோன தன் மகனை டாக்டராக பார்க்கும் அவள், தனக்காக தன் குடும்பத்தையே விட்டு விட்டு வந்துவிட்ட அவனிடம் திரும்ப திரும்ப குடும்பத்தோடு இணைய வற்புறுத்துகிறாள். அவனோ, சாக்கடையில் உழலும் தம் சமூகத்தை கரையேற்ற உழைக்கிறான். அந்த ஊரே அவனை போற்றுகிறது. ஆனால் அந்த மகா மனிதனை மக்கள் போற்றுகிற அளவிற்கு மகள் போற்றினாளா? கனத்த சோகத்தை ஏற்படுத்துகிறது முடிவு.
தாசியாக நடித்திருக்கிறார் ரம்யாகிருஷ்ணன். இனி நிம்மதியாக அவர் சினிமாவிலிருந்து விலகிக் கொள்ளலாம். இதைவிட மனசில் நிற்கிற வேடத்தை யார் தரப்போகிறார்கள் அவருக்கு? சொந்தக்குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அற்புதம்! வெளியே வந்தபின்னும் காதுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறது அந்த தாழம்பூவே வாடா....
திரையை விட்டு நம்மை வெளியே வர விடாமல் செய்திருக்கிற பெருமை இன்னும் சிலருக்கு. முக்கியமாக மோகனசுந்தரமாக நடித்திருக்கும் அஸிம்சர்மா. உமா ரியாஸ். சிறுவன் அரவிந்த் பாபு ஆகியோர்.
கால ஓட்டத்தில் அந்த அழகான கிராமமும், அரண்மனை வீடும் சிதிலமாகி போய், கலாச்சார குப்பையாக கிடப்பதை காட்டுகிறார்கள். ஊர் எல்லையில் நின்று கொண்டு இளைஞர்கள் விபச்சாரத்திற்கு ஆள் பிடிக்கிற அவலத்தை பார்க்கும்போதே நீர் திரள்கிறது கண்களில்!
இசை மகேஷ். கேன்சர் அரித்த வயலின். இந்த படத்தின் பாடல்களால் வாழ்ந்து கொண்டிருப்பார் பல யுகங்களுக்கு.
ராஜ்குமாரின் ஒளிப்பதிவு ஒன்றுதான் திருஷ்டி! பல காட்சிகளில் போதுமான ஒளியில்லை!
நல்ல சினிமா என்ற கனவுகள் மெய்ப்பட, ஜானகிவிஸ்வநாதன்கள் வரவேண்டும். வரவேற்போம்... இரத்தின கம்பளம் விரித்து!
நன்றி - ஆர்.எஸ்.அந்தணன் / தமிழ் சினிமா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>