04-14-2004, 01:46 PM
மீண்டும் ஒரு அக்கினிப் பாPட்சை
14.04.2004
வரலாறு எப்போதும், தான் சார்ந்திருக்கும் சமூகத் தைப் புடம்போட்டே வந்திருக்கிறது. அந்த ஒழுக்கில் எமது மண்ணும் அதன் விடுதலைப் போரும் மீண்டும் ஒருமுறை அக்கினிப் பரீட்சைக்கு ஆளாகிப் புதுத்தினவுடன் நிமிர்ந்து நிற் கின்றன. தலைவனின் பலம் மீண்டும் ஒரு தடவை நெத்திய டியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாற்பத்தொரு நாட்க ளும் கண்ணிலே எண்ணைவிட்டுக்கொண்டு கவனித்து ஊக ங்களையும் ஒப்பீடுகளையும் செய்துகொண்டிருந்தவர்களுக் கெல்லாம் ஒரே அதிர்ச்சி. தலைவரின் வெற்றியை எதிர்பார்த் திருந்தவர்கள்கூட இவ்வளவு கச்சிதமாக அது அமையும் என்று எதிர்வுகூறியிருக்கவில்லை. தமிழீழத் தேசியம் உடைக்கமுடியாத உருக்குக் கோட்டை என்பதை எல்லோ ரும் இத்தோடு ஐயமறப் புரிந்துகொண்டிருப்பார்கள்.
அதற்காக அக்காடா என்று இப்போதைக்கு நாங்கள் ஆறுதல்பட்டு நின்றாலும் எமது தேசிய வாழ்வின் நீடித்த நலன்பற்றிய கருத்துத்தெளிவை இப்போது நாங்கள் பெற் றுக்கொள்ளவேண்டியது அவசியம். இலங்கைத் தீவில் வாழும் தமிழ்பேசுவோர் எல்லாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் ஒன்று இருக்கிறது. அதுதான் எப்போதோ நிகழ்ந்து இப்போதுவரை தன் தடத்தைப் பதியவிட்டுக் கொண்டிருக்கும் தனிச்சிங்களச் சட்டம். இதுதான் பேரினக் கட்சிகள் மூலமாக வெளிப்பட்ட அவர்களின் உள்ளக்கி டக்கை. பேரினக் கட்சிகளின் கொள்கைகள் சகாயவிலையில் சந்தைக்குவரும் இந்த நாட்களில் அவற்றின் நிரந்தர முகத்தை நாங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறோம். சில்லறைக் கூச்சல் களுக்கும் எங்களிற் சிலர் செவிகொடுக்கத் தலைப்ப டுகிறோம். தடியை யார் து}க்கினாலும் இரண்டொருவர் பின்னால் போய்விடுகின்றோம். தரைத்தோற்ற ரீதியாகவோ இனப்பரம்பல் ரீதியா கவோ பார்க்கும்போது, கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் மக்க ளின் நீடித்த பாதுகாப்பும் தனித்துவமும் தமிழீழம் என்கின்ற தேசிய உறுதிப்பாட்டு நிலையால் மட்டுமே உத்தரவாதப்ப டுத்தப்பட முடியும். தொடர்ந்துவந்த பேரின அரசுக்கள் மேம்போக்காக வித்தியாசமான கொள்கைகளைக் கடைப்பி டித்;தாலும், சிறுபான்மையினர் பற்றிய கொள்கையில் மிகவும் கரிசனையாகவே இருந்துவந்திருக்கின்றன. அம்பாரை மாவட்ட எல்லை மட்டக்களப்பின் மேற்குப்புறத்தில் நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அது தெட்டத்தெளிவாகப் புரியும். நிருவாகரீதியான நுட்பமான எல்லைகளை வகுத்து தமிழ் வாக்குகளைச் பெரும்பான்மையாகவிடாது வைத் திருக்கவே எல்லாப் பேரின அரசுக்களும் விரும்பிவந் திருக்கின்றன. இவையெல்லாம் கவனத்திற்கு வருமுன்னர் ஏகப்பட்ட வேறு விடயங்கள் தாண்டப்படவேண்டும் என்பது வேறுவிடயம். இவ்வாறு எமக்கான நிரந்தரப் பிரச்சனைகள் வேறெ ங்கோ இருக்க, புத்திஜீவிகள் என்று இதுவரை எண்ணப்பட்ட சிலர்கூட அப்பாவித்தனமாகத் தாளம்போட்டுக்கொண்டு நின் றதுதான் அந்தக் கேலிக்கூத்தின் உச்சம். உலகத் தமிழ்ச் சமு தாயமே ஒன்றுபட்டு நிற்கும் ஒரு தருணத்தில் முதிர்ச்சியற்ற ஒரு தனிமனிதக் கோரிக்கைக்குச் செவிமடுக்குமுன் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துப்பார்க்க வேண்டாமா? இன்று மாவட்டக் கோரிக்கை நாளை வட்டாரக் கோரிக்கையாக மாறாது என்பது என்ன நிச்சயம்? இனமோ மதமோ பிரதேசமோ தனிக்கொள்கையோ இந்த உலகத்தில் உள்ள அதை;து வாதங்களைவிடவும் தேசியவாதமே மதிக்கத் தகுந்தது. நீடித்து நிலைப்பது. வலு வானது. அதன்வழியே நாம் அனைவரும் ஒன்றுபட்டு விழிப் புடன் செயற்படவேண்டிய காலம் இது.
Source: Tamil Alai

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>