04-14-2004, 08:38 AM
நன்றி நண்பர் இளங்கோ மற்றும் மோகன் அண்ணா
களத்தில் ஏற்பட்ட மலர்ச்சி பற்றிய எனது பார்வையைத் தருகின்றேன் இது ஏனைய உறுப்பினர்களுக்கும் புதிதாக வருபவர்களுக்கும் எவ்வாறு ஏற்புடையது எனப் பாருங்கள்
களத்தினைப் பார்வையிடுபவர்கள் இருவகையினர்
1) உறுப்பினர்கள்
2) விருந்தினர் அல்லது வாசகர்கள்
இவ் இருவகையினருள்ளும் தமிழில் நன்கு புலமை உள்ளவர்களும் உள்ளனர் ஓரளவு புலமை உள்ளவர்களும் உள்ளனர்
எனவே செய்யப்படும் மாற்றங்கள் இவ்விருவகையினரையும் கருத்தில் கொண்டே செய்யப்படல் வேண்டும் இல்லாவிடில் அதன் பயனை எட்டமுடியாது போய்விடும்
எனவே இலகு தமிழ் அல்லது ஓரளவு பாவனையில் உள்ள மொழிநடை அவசியம்
களத்தில் உறுப்பினர் ஆக உள்ள ஒருவர் தனது மொழியைத் தெரிவு செய்யமுடியும் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யலாம்
ஆனால் விருந்தினர் முன்னே இருப்பது ஒரே ஒரு தெரிவு தமிழ் மட்டுமே எனவே அவர்களும் இதன் மூலம் பயன் பெறுவதற்கு கையாளப்படும் மொழிப்பிரயோகம் இலகுவானதாக இருத்தல் வேண்டும்
இந்த வகையில் களத்தில் புதிதாக உள்நுழைபவர்களுக்கும் விளங்கும் வகையில் Register என்பது ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது இதனை உறுப்பினராகப் பதிவு செய்ய அல்லது களத்தில் இணைய என்று மாற்றலாம் ஆயினும் புதிதாக வருபவர்களுக்கு விளங்கும் வகையில் அதனை ஆங்கிலத்தில் தருவதே நல்லது
அதே போன்று இணைப்பில் என்னும் தரவில் விருந்தினர்,மறைவிலுள்ளவர்கள் இருவரினது எண்ணிக்கை காண்பிக்கப்படுகின்ரது ஆனால் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை காணப்படவில்லை இது தொழினுட்பத் தவறு என நினைக்கின்றேன்
கீழேயுள்ள online now என்னும் தரவிற்கு இணைப்பிலுள்ள உறுப்பினர்கள் என மாற்றம் செய்யலாம்
வெகுவிரைவில் அனேகமான பதங்கள் தமிழுக்கு மாற்றப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையுடன் இதுவரை மாற்றப்பட்ட சொற்களிற்கு மாற்றீடுகளைத் தருகின்றேன்
படப்புத்தகம்- படங்கள்
சுயகுறிப்புகள்- சுயவிபரம்
மனை - முகப்பு
தொடுப்பு - இணைப்புகள்
நிர்வாகப்பக்கம் - நிர்வாகிகள்
அதே போன்று கருத்துக்களம் பற்றிய விபரங்கள் செய்தி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது இதனை அறிவிப்புகள் என மாற்றினால் நன்றாக இருக்கும் அதே மாதிரி அறிவிப்புகளுக்கு வரும் பதில்களை வியாக்கியானங்கள் என்று குறிப்பிடவேண்டியதில்லை கருத்துகள் என்பதே போதுமானது
இவற்றிற்குப் பழைய களத்தில் உபயோகிக்கப்பட்ட சொற்கள் பெரிதும் ஏற்புடையவை அவற்றையும் பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்
நன்றி

\" \"