04-14-2004, 12:25 AM
<span style='color:red'>18 அகவைக்குக் குறைந்த 168 போராளிகள் உட்பட 269 போராளிகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மட்டு-அம்பாறைப் பிரதேசம் கருணாவின் பிடியிலிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்பு அணியுடன் இணைந்துகொண்ட பல போராளிகள் அவர்களது விருப்பின் பேரில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதன் ஓரங்கமாக இன்று வாகரைப் பிரதேசத்தில் மீட்பு அணியுடன் இணைந்துகொண்ட 18 அகவைக்கு மேற்பட்ட 33 பெண் போராளிகளும் 68 ஆண் போராளிகளுமாக 101 போராளிகள் கதிரவெளிப் பாடசாலையில் வைத்து காலை 7 மணி தொடக்கம் அவர்களது பெற்றோரிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து காலை 10.00 மணியளவில் 18 அகவைக்கு உட்பட்ட 113 பெண் போராளிகளும் 55 ஆண் போராளிகளும் மட்டு-அம்பாறை UNICEF பிரதிநிதியூடாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 18 அகவைக்குக் குறைந்த 168 போராளிகளை அவர்களது பெற்றோர்கள் அழைத்துச் செல்வதற்கான ஒழுங்குகளை UNICEF மேற்கொண்டது.
இந்நிகழ்வில் மட்டு-அம்பாறைத் தளபதி ராம், மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன், அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் தியாகராஜா மற்றும் சமாதான செயலகத்தின் பிரதி இயக்குநர் பவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கு முன்னரும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>