04-14-2004, 12:03 AM
<span style='color:red'>தப்பியோடிய கருணா படுகொலை செய்த போராளிகளின் விபரம்
கருணா தப்பியோடிய போது படுகொலை செய்த போராளிகளின் விபரத்தை விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்ட போராளிகளில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொறுப்பாளரான லெப். கேணல். நீலனும் அடங்குகிறார்.
12.04.2004 அன்று துரோகி கருணாவால் லெப்.கேணல் நீலன் (சின்னத்தம்பி) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் 01.03.2004 அன்றிலிருந்து கருணாவால் தடுத்துவைக்கப்ட்டிருந்த லெப்.கேணல் நீலன் அவர்களை துரோகி கருணா தப்பி ஓடும்வேளை கருணாவின் மருதம் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சுடப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமையான பணிகளில் ஈடுபட்டிருந்த புலனாய்வுத்துறைப் போராளிகள் பிரத்தியேகமான சந்திப்புக்கென 01.03.04 அன்று மீனகம் முகாமிற்கு கருணாவிடம் அழைக்கப்பட்டிருந்தனர்.
மீனகம் முகாமிற்கு கருணாவால் அழைக்கப்பட்ட மேற்படி போராளிகள் நேரடியாக விசாரிக்கப்பட்டிருந்ததுடன் நீலன் அவர்கள் 01.03.04 அன்றிலிருந்தே சக போராளிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர் விலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
12.04.04 அன்று காலை துரோகி கருணா தப்பி ஓடுவதற்கு முன்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நீலன் அவர்களை தான் தங்கியிருந்த மருதம் முகாமிற்கு கொண்டு வரும்படி கூறியுள்ளார். அங்கு அவரைச் சுட்டு விட்டே துரோகி தப்பியோடியுள்ளான்.
அதன் பின்னர் 13.04.04 அன்று மருதம் முகாமில் தேடுதலை மேற்கொண்ட போது நீலன் அவர்களின் வித்துடல் கண்கள் துணியினால் கட்டப்பட்ட நிலையிலும் கைகள் விலங்கிடப்பட்ட நிலையிலும் கண்டு எடுக்கப்பட்டது.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் துரோகி கருணா குழுவினரால் துரோகத்தனமாக கொல்லப்பட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய போராளிகளின் விபரம் பின்வருமாறு.
<b>மேஜர் தமிழீழன் தமிழ் </b>
வீரச்சாவு:-07.04.04
<b>கப்டன் மாவேந்தன் </b>
வீரச்சாவு:-10.04.04
இடம்:- களுவாங்;கேணி
<b>கப்டன்.நம்பி</b>
வீரச்சாவு:-10.04.04
இடம்:-வாகரை
<b>லெப். வர்ணகீதன் சபா</b>
வீரச்சாவு:-10.04.04
இடம்:-களுவாங்கேணி
இவர்களுடன் ஆதரவாளர் ஒருவரையும் கருணா சுட்டுக்கொன்றுள்ளார்
ஆதரவாளர்:- <b>மோகன்</b>
வீரச்சாவு:- 10.04.04
இடம்:- களுவன்கேணி
இவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர் என மேற்படி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</span>
நன்றி புதினம்...!
*****************************
<span style='font-size:21pt;line-height:100%'>தேசவிடுதலைக்காய் புறப்பட்டு கருணாவின் துரோகத் தீயில் வெந்து போன இலட்சிய வீரர்களே...உங்கள் உயிரும் உடலும் பிரியலாம் உங்கள் இலட்சியங்கள் நீவீர் நேசித்த மக்களோடு என்றும் வாழும்...! நீரும் வாழ்வீர்....இன்று கண்ணுறங்குங்கள் கண்மணிகளே....நாளைய விடியலில் தவப்புதல்வர்களாய் நீவீர் எழுவீர்.....!</span>
<img src='http://www.homeofheroes.com/hallofheroes/1st_floor/flag/roses.gif' border='0' alt='user posted image'>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>