04-13-2004, 11:49 PM
<span style='color:red'>கருணா காட்டிற்குள் இல்லை, மட்டு-அம்பாறை படையணிகளின் ஆயுதங்கள் முற்றாக மீட்பு.
கருணா நேற்றைய தினம் தனது மீனக முகாமை விட்டுத் தப்பியோடிய போது அவர் எங்கு சென்றார் என்ற விடயம் குறித்த சந்தேகங்கள் எழுந்தன.
எனினும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதையடுத்து, குடும்பிமலை, தொப்பிகல சார்ந்த காட்டுப்பகுதியை இன்று சல்லடைபோட்டுத் தேடிய விடுதலைப்புலிகளின் அவர்கள் அக் காட்டுப்பகுதிக்குள் இருப்பதற்கான தடயங்கள் எதுவுமே இல்லை எனத் தெரிவித்தனர்.
கருணா இவ்வளவு விரைவாகத் தான் தப்பியோட வேண்டிய நிலை ஏற்படும் என்பதைக் கனவிலும் நினைக்கவில்லை என்றும் போராளிகள் மத்தியில் எழுந்த எதிர்ப்பலையும், போராளிகளின் அணிகள் தலைமைப்பீடத்துடன் துரிதமாக ஏற்படுத்திய தொடர்புகளுமே அவரை சடுதியாகத் தப்பியோட வேண்டிய நிலைக்குத் தள்ளியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மீனகம் முகாமில் இருந்த பொருட்கள் அரையும் குறையுமாக வாகனங்களில் ஏற்பட்ட நிலையிலேயே முகாமைக் கைவிட்டுத் தப்பியுள்ளனர். அத்தோடு செல்லும் போது அங்கிருந்த வாகனங்களில் பலவற்றைத் எரித்துமுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டப் படையணிகளிற்கான ஆயுதங்களில் ஒரு கனரக மோட்டாரையும், சில துப்பாக்கிகளையும் தவிர ஏனைய ஆயுதங்களனைத்தும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கருணாவும் அவரது நெருங்கிய ஆதரவாளர்களும் இரு வாகனங்களில் தப்பிச் சென்றதைத் தாம் கண்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி வாகனங்கள் நாலாம் முற்சந்தியை நோக்கிச் சென்றதாக பெண்டுகல்சேனை வாசிகள் தெரிவித்துள்ளனர்.
கருணாவின் அணிக்கான அரசியற்பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விசு, தலைமைப்பீட அணியுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் நாளை அல்லது நாளை மறுதினம் வந்து இணையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாவோடு, அவரது சகாக்களான தாத்தா (ஜிம்கெலி), றொபேர்ட், வரதன், குகனேஸ், ஜீவேந்திரன், நிலாவானி, துரை, நிசாம், இலங்கேஸ் மற்றும் கருணாவின் பாதுகாலவர்களான ஐந்துபேரே ஓடித் தப்பியுள்ளனர்.
இவர்கள் சிறீலங்கா இராணுவத்தால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக தாம் ஊகிப்பதாகவே நேற்றுத் தப்பிவந்த போராளிகள் தெரிவித்திருந்தனர். எனினும் இது தொடர்பான போக்கில் சிறீலங்கா தொடர்ந்து மௌனத்தை கடைப்பிடித்து வருகிறது. சிறீலங்கா இவர்களை அழைத்துச் சென்றது உண்மையாக இருந்தால், அது தற்போதைய சமாதான நிலையை குழப்புவதற்கான ஒரு செயற்பாடாகவே விடுதலைப்புலிகள் அதனை நோக்கலாம் என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, 1,700 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை எவ்வாறு இரத்தக்களறியின்றி உங்களால் இவ்வளவு விரைவாகக் கைப்பற்ற முடிந்தது என ஒரு பத்திரிகையாளர் மட்டு-அம்பாறை அரசியற் பொறுப்பாளர் கௌசல்யனிடம் கேட்ட போது, தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடலின் பிரகாரம் இந்த நடவடிக்கை இரத்தக்களரியற்றதாகவும், மனிதாபிமான முறையிலும் கையாளப்பட்டதாகவும் தெரிவித்த திரு. கௌசல்யன் அவர்கள்,
தாங்கள் வெருகல், கதிரவெளி, வாகரைப் பிரதேசங்களைச்சுற்றி வளைத்த போது சிறு எதிர்ப்பு ஏற்பட்ட போதிலும் தாங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று போராளிகள் தங்களிடம் வந்து சேர்ந்ததாகவும், அதேபோல் அம்பாறையில் ஒரு வித எதிர்ப்பும் இல்லாமல் போராளிகள் தங்களுடன் முழுமையாக இணைந்ததாகவும், கொக்கட்டிச்சோலை, கரடியணாறு உள்ளிட்ட படுவான்கரை பிரதேசத்திலும் போராளிகள் எதுவித எதிர்ப்புமில்லாம் இணைந்தாகவும் மட்டு-அம்பாறை அரசியற் பொறுப்பாளர் கௌசல்யன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கருணாவே தமிழீழ மண்ணை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் அவரோடு தற்போதுள்ள மற்றையவர்கள் எந்தவித பயமுமின்றி தமது வீடுகளிற்குத் திரும்பு தமது வாழ்க்கையில் ஈடுபடலாம் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>