04-13-2004, 02:05 PM
தொப்பிக்கல காட்டுப்பகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ளது
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்பிரல் 2004, 20:34 ஈழம் ஸ
மட்டக்களப்பிலுள்ள தொப்பிக்கல காட்டுப்பிரதேசம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதை லண்டன் ஐ.பி.சி. தமிழ் வானொலி உறுதிசெய்துள்ளது.
மட்டக்களப்பின் கிரான், வடமுனை வீதிகளின் அடர்ந்த காட்டுப்பகுதியான தொப்பிக்கல பிரதேசத்தில், கருணா அணியினர் பதுங்கியிருப்பதாக முன்னைய செய்திகள் தெரிவித்த போதிலும், அப்பகுதி விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இப்போது வந்துள்ளதாகவும், அதிவிசேட தேடுதல் அணியினர் மேற்கொண்ட கடுமையான தேடுதல் நடவடிக்கையின் பின்னர், கருணா அணியைச் சேர்ந்த யாரும் அப்பகுதியில் காணப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மீளவும் விடுதலைப் புலிகளிடம் திரும்பிய போராளிகளில் 269 போராளிகள் எதுவித நிபந்தனையுமின்றி, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில், 15 வயதுக்குக் குறைந்த 33 ஆண்களும் 113 பெண்களும், யூனிசெஃப் நிறுவனப் பிரதிநிதிகளுடாக பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டார்கள். வாகரையிலுள்ள கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் கலந்துகொண்டார் என்று தெரியவருகிறது.
பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும், அவர்களது பெற்றோர்களுடன் அவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்ல முழுமையான அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Source: Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>