04-13-2004, 01:07 PM
phozhil Wrote:யாழ்வையை முற்றும் தமிழ்ப்படுத்தும் செயலை பெரிதும் வரவேற்கின்றேன் .மகிழ்ச்சியும்,நன்றியும் போற்றுதலும் உரித்தாகுக.
கீழ்க்காணும் பதங்களை பார்வைக்கு வைக்கின்றேன்,
அவை பொருளடக்கம்=forum index
முகப்பு=home
திரட்டு=album
அண்மைக்கருத்துகள்=recent topics
தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank
பதிக்க=register
புது(வேறு) கருத்து வரைய=new topic
மறுமொழி வரைய=post reply
கருத்துரை=comment
உங்கள் கருத்து கவனத்தில் எடுக்கிறேன் பொழில்
ஆனாலும் சில சிக்கல்கள் உள்ளன
தமிழ் எழுத்துக்களை image இல் எழுதுவது சுலபமானது அல்ல எனவே மிக சிறிய சொற்களாக தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
எனவே நீங்க குறிப்பிட்ட
மறுமொழி வரைய=post reply
புது(வேறு) கருத்து வரைய=new topic
மாற்றம் செய்யமுடியாது.
மற்றும் நீங்கள் குறிப்பிட்ட
அண்மைக்கருத்துகள்=recent topics க்கு சமீபவிடயங்கள் என்றும் முகப்பு=home க்கு மனை என்றும்
அவை பொருளடக்கம்=forum index க்கு களப்பிரிவுகள், பொருளடக்கம் என்றும்
எழுதியுள்ளேன். இங்கு நான் தனியே ஆங்கிலத்திற்கான மொழிபெயர்பாக எழுதவில்லை. மாறாக என்ன கருத்தை வெளிப்படுத்துகிறது என்பதை வைத்தே எழுதினேன். ஏனெனில் நான் dutch மொழியினை அடிப்படையாக வைத்தே எழுதினேன். இத்துடன் சிறிய சொற்களாகவும் எழுதவேண்டியுள்ளது.
மற்றும் நீங்கள் கூறிய இச்சொற்களை மிகவிரைவில் மாற்றுகிறேன்.
திரட்டு=album
தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank
Paranee Wrote:சில சொற்கள் அகராதி பார்க்கவேண்டி இருக்கின்றது அவற்றை இலகுதமிழில் போட்டுவிட்டால் இன்னும் அழகாக இருக்கும்.
நன்றி பரணி
அவற்றைக்குறிப்பிட்ால் கவனத்தில் எடுக்க உதவியாக இருக்கும்.
Eelavan Wrote:தமிழ் நடை இலகு படுத்தலில் களத்தின் அறிஞர்கள் நிச்சயம் உதவுவார்கள் என்னாலியன்ற உதவி செய்ய நானும் தயார்...
நிட்சயம் பலரின் உதவி தேவைப்படுகிறது Eelavan.
மொழிமாற்றம் செய்வதில் பெரியளவில் சிக்கல்கள் இருக்கவில்லை.
எப்படி மொழிமாற்றம் செய்வது என்பதிலேயே ஆரம்பத்தில் பிரச்சினை இருந்தது. ஏனெனில் unicode எழுத்துக்களை நேரடியாக மொழிபெயர்ப்பு கோப்புக்குள் புகுத்தமுடியாது அதனை இந்த forum க்கான script ஏற்றுக்கொள்ளாது. பல முயற்சிகளின் பின் இலக்ககோட் கள் மூலம் செய்யலாம் என்பதை அறிந்து கொண்டேன். ஆனாலும் அதற்கான converter கள் இல்லாததினால் phpbbforum ஐயே converter ஆக பயன்படுத்தினேன். அதற்குப்பிறகும் ஒரு சிக்கல் இருந்தது.
forum இல் எங்கெல்லாம் java script இருக்கிறதோ அங்கெல்லாம் decimal code ஐ unicode க்கு மாற்ற மறுத்தது. சில நாட்களாக மண்டையை போட்டு உடைத்தும் ஒன்றும் பிடிபடவில்லை.
யார் uft-8 பாவிக்கறார்கள் அவர்கள் எப்படி செய்திருக்கிறார்கள் என்று முயற்சித்தேன். தழிழருக்குள் எவரும் phpbb க்கு unicodeதமிழ் பாவிக்கவில்லை. சீன நாட்டவர்களும் வியட்னாமியரும் அதனை பயன்படுத்துவதை அறிந்தேன். அவர்களின் மொழிக்கோப்புக்கள் .php ஆகா இருந்ததினால். அதனை உருவி எடுப்பதிலும் சிக்கல் இருந்தது.
அவர்களிடம் நேரடியாகவே கேட்டேன். முதலில் தரமறுத்தனர்.பின் எனது link ஐ கொடுத்துவிடயத்தை புரிய வைத்தேன் ஆனாலும் எப்படி மாற்றம் செய்வது என்பதை மட்டும் சொன்னார். அவரும் அரைகுறை ஆங்கிலம் நானும் அதே நிலை. எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் தேடும் முயற்சியை நான் கைவிடவில்லை. வியட்னாம் அல்லது சீனாக்காரனின் கோப்பு ஒன்றை எடுத்தால் விடயம் புரியும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். ஒரு முறை வியட்னாம்காரரின் forumக்கு சென்றபோது அவர்கள் மொழி அவர்களின் template இல் இருந்தது. மொழிக்கோப்புக்களை ஒரு தளத்திலிருந்து உருவுவதே சிக்கல் ஆனால் templates கோப்புகளை இலகுவாக உருவிவிடலாம். அதனை எனது forum இல் போட்டபோது அவர்களில் மொழியை எனது forum இல் காணமுடிந்தது.
அவர்கள் எழுதியதற்கு பின் நானும் தமிழில் உன்றை எழுதினேன்.
என்ன ஆச்சரியம் இவ்வளவு காலமும் script ஐ யும் குழப்பிய தமிழ் இப்போது வியட்னாம் மொழியுடன் எதுவித குழப்பமும் இன்றி தெரிகிறது. அதன் பின் வியட்னாம் சொல்லை ஒவ்வொரு எழுத்தாக பின்பக்கமாக அழித்துவிட்டு ஒவ்வொரு முறையும் பரீட்சித்து பார்த்தேன். வியட்னாம் எழுத்துக்கமுழுவதையும் அழித்துவிட்டு பார்த்தபோது மீண்டும் குழப்ப தொடங்கியது.
பலமுயற்சிகளின் பின் ஒன்றை அறியமுடிந்தது
கீழேயுள்ள<!--c1-->CODE<!--ec1--><!--c2--><!--ec2--> இடுவதன் மூலம் javascript ம் unicodeதமிழை ஆதரிக்கும் என்று.
unicode பற்றி எதையும் நான் படிக்காததினால் இவ்வளவு சுற்று சுற்றவேண்டியதாகிவிட்டது. ஆனால் இப்போது தான் தெரிகிறது பல இலகு வழிகள் உண்டு என்று.
இந்த கோப்பை மொழிபெயர்ப்பதற்கு நேரடியாக இல்லாதவிடத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் சந்திரவதனாக்கா, மூனா , இளைஞன் போன்றவர்களே
நான் செய்ய வேண்டிய வேறு பல வேலைகளை இவர்கள் செய்து தந்ததினால். அந்த நேரத்தை இந்த மொழிபெயர்ப்புக்கு பயன்படுத்த கூடியதாக இருந்தது.
நான் lang_main கோப்பையும் வேறுசிலவற்றிலும் மட்டுமே மாற்றம் செய்தேன். ஆனாலும் இன்னும் பல கோப்புக்கள் மாற்றம் செய்யவேண்டும்.
நேரமுள்ளவர்களும் ஆர்வமுள்ளவர்களும் முயன்றால் அனைத்தையும் மாற்றமுடியும்.
Nick page இல் நான் கையே வைக்கவில்லை.
குருவிகள் அதனை செய்ய வந்ததையிட்டு மகிழ்ச்சி

