04-13-2004, 11:34 AM
இலங்கை ராணுவத்திடம் அடைக்கலம் கோரும் கருணா
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்து மட்டக்களப்பில் இருந்து வெளியேறி வடமேற்கு காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ள கருணா, தனக்கு அடைக்கலம் தருமாறு இலங்கை ராணுவத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், இதை ராணுவம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. அதே நேரத்தில் கருணா கோரிக்கை வைத்தால் கிழக்குப் பகுதியில் இருந்து தப்பிச் செல்ல (ண்ச்ஞூஞு ணீச்ண்ண்ச்ஞ்ஞு) மனிதாபிமானரீதியில் அவருக்கு உதவி செய்வோம் என இலங்கை அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கிடையே மட்டக்களப்போடு, அம்பாறை மாவட்டமும் கருணாவின் படைகளிடம் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.
இப்போது சிறிய அளவிலான தனது ஆதரவாளர்கள், பாதுகாவலர்களுடன் கருணா காட்டுப் பகுதியில் தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் புலிகளின் படை ஈடுபட்டுள்ளது.
முன்னதாக கருணாவை ஹெலிகாப்டர் மூலம் இலங்கை ராணுவம் காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டதாக செய்திகள் வந்தன. இதனை ராணுவத்துறைச் செயலாளர் சிரில் ஹெராத் முழுமையாக மறுத்தார். அதே நேரத்தில், கருணா கோரிக்கை வைத்தால் மனிதாபிமான அடிப்படையில் அவர் தப்பிச் செல்ல உதவுவோம் என்றார்.
இந் நிலையில் பொலநறுவ மாவட்டத்தில் உள்ள மின்னேரியா ராணுவ முகாமைத் தொடர்பு கொண்ட கருணா தனக்கு அடைக்கலம் கோரியுள்ளதாக சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பியோடும் முன்பாக கருணாவின் படையினர் தங்கள் வசம் இருந்த கன ரக துப்பாக்கிகள், ஆர்ட்டிலரி துப்பாக்கிகள், மார்ட்டர் லாஞ்சர்கள் ஆகியவற்றை நொறுக்கிப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்த ஆயுதங்கள் புலிகளுக்கு உதவக் கூடாது என்ற எண்ணத்தில் கருணா இந்த உத்தரவை இட்டதாகத் தெரிகிறது.
மீனகம் முகாமை கருணாவின் படைகள் விட்டுச் சென்றதையடுத்து அங்கிருந்த ஜெனரேட்டர்கள், மின் சாதனப் பொருட்களை பொது மக்கள் புகுந்து அள்ளிச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. இந் நிலையில் கருணா தரப்பில் மிக பலத்த உயிர்ச் சேதமும் ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இந் நிலையில் கருணாவின் படையில் இருந்த 100 சிறார்களை புலிகள் இயக்கம் இன்று விடுவிக்க இருப்பதாக யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
Thanx: Thats Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>