04-13-2004, 11:28 AM
விடுதலை நெருப்போடு விளையாடுவோருக்கு கருணா விவகாரம் ஒரு படிப்பினை
13.04.2004
கடந்த 40 நாட்களாக ஊடகங்களின் கவனத்தை கவர்த்திருந்த கருணா விவகாரம் நேற்றோடு முடிவிற்கு வந்துள்ளது. தமிழ் தேதியத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்த அனைவருக்கும் இன்றைய புதுவருடம் மறக்க முடியாத ஒன்றாகவே அமைந்துள்ளது.
இவ்விவகாரம் ஊடகங்களின் கவனத்திற்கு வந்த நேரத்தில், எமது தேசியத் தலைவர் அவர்கள் இவ்விவகாரத்தை போராளிகளதும் மக்களதும் உயிரிழப்புகள் இன்றி முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறியபோது, அது சாத்தியமா என ஆச்சரியப்பட்ட எம் பிரதேசத்தைச் சேர்ந்த அனைவரும் இன்று மகிழ்ச்சி கலந்த நிம்மதியுடன் உலாவருகின்றனர். தமது பிரதேசத்தின் மீது படிந்த பிரதேசவாதக் கறை மறைந்து போனதில் மக்கள் மகிழ்வடைந்து போயிருப்பதையும் இன்று மட்டக்களப்பு எங்கும் காணக்கூடியதாக உள்ளது.
கருணா விவகாரம் ஒரு முடிவிற்கு வந்து, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மீண்டும் மட்டு அம்பாறை மாவட்டம் வந்தமை அனைத்து தரப்பு மக்களையும் மிகுந்த மகி;ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களும் தமது மகிழ்ச்சியை மின்னஞ்சல்கள் மூலம் எமக்கு பெருமளவில் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
கருணா விவகாரம் முடிந்து நிலமைகள் வழமைக்குத் திரும்புகின்ற போதும்கூட மட்டக்களப்பில் அது ஏற்படுத்திய வடுக்கள் மாற இன்னும் காலங்கள் தேவைப்படலாம். கடந்த 40 நாட்களில் கருணா ஏற்படுத்தி வைத்துள்ள பாதிப்புகள் அத்தகையவை. பலம் பொருந்திய நிலையிலிருந்த அரசியல், இராணுவ, நிர்வாகக் கட்டமைப்புகளை எல்லாம் கருணா குழுவினரால் மிகவும் சீரழிக்கப்பட்டுள்ளன. விடுதலைக்காக ஒன்றுபட்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தின்மீது தேவையற்ற ஒரு பிரதேசவாத சிந்தனை கருணா குழுவால் திணிக்கப்பட்டுள்ளது. பழைய நிலைக்கு அவற்றை மீளக் கட்டியமைக்கும் சவால் நிறைந்த பணியை விடுதலைப் புலிகள் நிச்சயம் விரைவாகச் செய்து முடிப்பார்கள் என நம்பலாம்.
எனினும் தீமையிலும் நன்மையைப் போல, கருணா விவகாரம் உலகெங்கும் பரந்து நிற்கும் தமிழ் தேசியத்தை மீண்டும் ஒருதடவை தட்டியெழுப்பிப் பலப்படுத்தியுள்ளது. தமிழ் தேசியம் எத்துணை பலம் வாய்ந்தது என்பதை இவ்விவகாரத்தில் தமிழ் மக்கள் காட்டிய பேரெழுச்சியையும் ஒற்றுமை உணர்வையும் வைத்தே மதிப்பிட முடியும். தவிர, விடுதலைக்கான இந்தப் போராட்டத்தில் நண்பர்களையும் எதிரிகளையும் சரிவர இனம் காணவும் பரந்துதுபட்ட தமிழ் ஊடகங்கள் இந்த விவகாரத்தில் காட்டிய நேர்மையான அணுகுமுறையையும் நாம் கவனத்திற் கொள்ள உதவியது. எல்லாவற்றிக்கும் மேலாக வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டில் விடுதலைப் புலிகள் கொண்டுள்ள விட்டுக் கொடுப்பற்ற உறுதியை சர்வதேசத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட இது உதவியுள்ளது.
கருணா பற்றிய இருப்புகள் இன்றும் தெளிவாகாத நிலையில், அவர் மட்டக்களப்பை விட்டு இன்னும் சிலருடன் தப்பிச் சென்றிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தமிழ் தேசியத்திற்கு துரோகம் செய்ய முனையும் ஒருவனிற்கு வரலாற்றில் என்ன முடிவோ, அது கருணா விவகாரத்திலும் மீண்டும் ஒருமுறை நீரூபணமாயிருக்கிறது. தமிழ் தேசியத்தின் கொழுந்து விட்டெரியும் ஆன்மாவோடும், விடுதலைப் பெரு நெருப்போடும் விளையாட நினைக்கின்ற அனைத்து தரப்பினர்க்கும் கருணா விவகாரம் ஒரு நல்ல படிப்பினை.
நன்றி - தமிழ் அலை

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>