Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சுதந்திரமும்.. யதார்த்தங்களும் பல கனவுகளும்...
#1
<img src='http://www.webulagam.com/women/life/images/2001_05/0531_freedom.jpg' border='0' alt='user posted image'>

[size=16]
பெண்களுக்கு சுதந்திரம்

"பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்!"

"பெண் சமத்துவத்தை நிலை நாட்டுவோம்!"

- என்று கோஷமிட்டு பெண் சமுதாயம் முன்னேற பாடுபட்ட பெண்கள் திடீர் என்று பாதை மாறி அவர்களை ஆண்களோடு ஒப்பிட தொடங்கினர். அங்கே தான் ஆரம்பித்தது பெண்களுக்கு பல கஷ்டங்கள்!

ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு காரியங்கள் செய்ய இயற்கை படைத்திருக்கின்றது. ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் என்பதை நிரூபிக்க நாம் ஏன் ஆண்களைப் போல் நடக்க வேண்டும்? பெண்களாக இருப்பதில் தவறு என்ன?

"நீ பெண் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்! ஒரு ஆண் அளவுக்கு திறமைசாலி!"

"இவ என் பெண்ணே இல்லை. என் பையன் மாதிரி அவ்வளவு உதவியா இருக்கா!"

இப்படிப்பட்ட வாக்கியங்களை நாம் தினமும் கேட்கிறோம். சொல்லவே வெட்கமா இருக்கு, இதை கேட்டு சந்தோஷம் வேற படறோம்!

முன்னே இருந்ததைவிட நம்ம நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. அலுவலகத்தில் வேலை செய்தாலும், வீட்டு வேலைகளை நாம தான் செய்ய வேண்டும்!

பத்மஜா வயது 29, குழந்தை பெற்றபின் வேலையை ராஜினாமா செய்தவர். "குழந்தையையும், வீட்டு வேலையையும் பார்க்கவே நேரம் பத்தல. இதுல வேலைக்கு எங்கே போக முடியும்? இவர் வீட்டிலே ஹெல்பா இருந்தாலும், மொத்த வேலை நான்தானே செய்யனும்."

ஆண்களுக்கு என்ன, ஜாலி தான்! பெண் பணமும் சம்பாதிக்கிறாள், வீட்டு வேலையும் செய்கிறாள். குழந்தைகளையும் சமாளிக்கிறாள், எதைத் தான் செய்யவில்லை!

பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சுஜாதாவுக்கு வயது 28, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

"எனக்கு ஆபீஸ்ல வேலை செய்ய ஆசை. ஆனால் குழந்தைங்களை ஸ்கூல்ல கொண்டு விட்டு திருப்பி கூட்டிட்டு வர ஆளில்லை. நான் அவங்க ஸ்கூல்ல டீச்சரா இருக்கிறதால இப்போ இந்த பிரச்னை இல்லை. குழந்தைகளுக்காக நாம இதுகூட செய்யலேன்னா எப்படி?" என்கிறார்.

பெண் விடுதலை போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் ஆண்களோ என்று கேட்கத் தோன்றுகிறது. நமக்கு இருக்கும் தலைவலி போதாது என்று அவர்களுடைய தொல்லைகளில் பாதியை வாங்கிக் கொண்டோம்!

எவ்வளவுதான் செய்தாலும், இன்னும் பெண்களை சமமாக நடத்த மறுக்கிறார்கள் ஆண்கள். ஷீரின் வயது 26, கம்ப்யூட்டர் என்ஜினியர். "எனக்கு மாசத்துக்கு ரூ 30,000 சம்பளம். ஆனா நான் இந்த மாசம் வேலையை ரிசைன் பண்ணுறேன். காரணம் அவருக்கு சம்பளம் ரூ 22,000, அதனாலே அவருக்கு காம்ப்ளெக்ஸ் வந்துடுச்சு! வீண் சண்டையை அவாய்ட் செய்யத்தான் இந்த ரெஸிக்னேஷன். சமுதாய கட்டுப்பாடு பெண்களைத்தான் அடங்க வைக்கிறது.

ஷீரின் கதையை படிக்கும் பலர், "அய்யோ ஒரு என்ஜினியரிங் சீட்டு வீணாப் போச்சே, முன்னேயே ஒரு பையனுக்கு விட்டு கொடுத்திருக்கலாம்!" என்று சொல்லலாம். ஆனால் "காரணமே இல்லாமல் நல்ல படிச்ச பெண்ணோட படிப்பு வீணாப் போச்சே!" என்று எத்தனைப் பேர் சொல்வார்கள்?

வெட்கப்படுவதும், சேலை கட்டுவதும், இன்னமும் பல மென்மையான உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருந்தவள் பெண். இப்போது பெண் பெண்ணாக இருக்கவே தயங்குகிறாள்!

ஆண்களுக்கு நிகராக உடை அணிந்து, அவர்களைப் போல் நடப்பதும், பேசுவதும் தான் பெண் முன்னேற்றமா? அப்படின்னா ஆண்களை சேலை உடுத்த சொல்லலாமே!

"பெண் சிசுக் கொலை எத்தனையோ குறைந்து விட்டதே!" என்று பலர் சொல்லலாம். குறைந்து விட்டது தான் இதற்கு காரணம். பெண் முன்னேற்றம் இல்லை. கருவிலேயே பெண் என்று கண்டுபிடித்து அதை கொன்று விடுவது தான்!

24 வயது வைஷாலியும் இதைத்தான் செய்தார். காரணம் அவர் முதல் குழந்தையும் பெண் என்பதால் தான் என்கிறார். "எங்க மாமியார் வீட்டிலே அடுத்த குழந்தை பையனா இருக்கனும் அப்படின்னு ஆசைப்பட்டாங்க".

<b>விரும்பியோ, விரும்பாமலோ பெண்கள் இன்றும் ஆண்களின் நிழலில் வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை!</b>
<img src='http://www.webulagam.com/women/life/images/2001_05/0531_freedom1.jpg' border='0' alt='user posted image'>


இவை தம் விடுதலை சுதந்திரம் பற்றி சாதாரண பெண்களின் உணர்வுகள்....!

நன்றி வெப்புலகம் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பெண்களும் சுதந்திரமு - by kuruvikal - 04-13-2004, 10:42 AM
[No subject] - by Eelavan - 04-14-2004, 08:43 AM
[No subject] - by Mathan - 04-14-2004, 04:51 PM
[No subject] - by Eelavan - 04-15-2004, 05:34 PM
[No subject] - by kuruvikal - 04-20-2004, 11:33 AM
[No subject] - by Mathan - 04-20-2004, 12:08 PM
[No subject] - by kuruvikal - 04-20-2004, 12:41 PM
[No subject] - by kuruvikal - 04-20-2004, 04:59 PM
[No subject] - by இளைஞன் - 04-20-2004, 10:14 PM
[No subject] - by Mathan - 04-21-2004, 01:34 AM
[No subject] - by AJeevan - 04-21-2004, 08:31 AM
[No subject] - by AJeevan - 04-21-2004, 11:48 AM
[No subject] - by kuruvikal - 04-21-2004, 05:38 PM
[No subject] - by sOliyAn - 04-21-2004, 11:05 PM
[No subject] - by இளைஞன் - 04-21-2004, 11:08 PM
[No subject] - by kuruvikal - 04-22-2004, 12:12 AM
[No subject] - by vanathi - 04-24-2004, 09:51 PM
[No subject] - by AJeevan - 04-26-2004, 09:07 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 01:42 PM
[No subject] - by shanthy - 05-25-2004, 11:47 PM
[No subject] - by kuruvikal - 05-26-2004, 12:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)