04-13-2004, 08:39 AM
BBC Wrote:ஐ.பி.சி தமிழுக்கு கருணாவின் கட்டுப்பாட்டில் இயங்கிய தமிழ்அலை பத்திரிகையின் ஆசிரியர் வேணுகோபால் வழங்கிய நேர்காணல்
http://www.ibctamil.net/audio/vennu20040412.smil
நன்றி - ஐபிசி தமிழ்
மனசாட்சிக்கு விரோதமாகஇ கருணாவின் பணய கைதிகளாக தமிழலையை வெளியிட்டோம். - ஆசிரியர் வேணுகோபால் பேட்டி
கருணா தரப்பினரால் பணய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழலை பத்திரிகை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி தமிழலை பத்திரிகை வெளிவரும் என்று தமிழலை பத்திரிகை ஆசியர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழலை பத்திரிகை ஆசிரியர் வேணுகோபால் ஜ.பி.சிக்கு வழங்கிய பேட்டியின் தமிழ் எமுத்துருவாக்கம்.
Phழவழ : வுயஅடைநேவ யுசஉhiஎந
கருணா தரப்பினரைப் பற்றி பரப்பாக தகவல்கள் வெளியிட்டு வந்த தமிழலை பத்திரிகை இப்பொழுது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
இந்த பத்திரிகை நிறுத்தப்படவில்லை. நேற்று (12-04-2004) மட்டும் பத்திரிகை வெளிவரவில்லை. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொக்கட்டிச்சோலை பிரதேசம் வந்துள்ளதால் எமது பத்திரிகை வழமையாக - இங்கு ஊழியர்கள் தமது பணிகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இன்று காலை அதாவது சித்திரை புதுவருட தினத்தன்று தமிழலை பத்திரிகை தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தனது பணிகளை தொடர்ந்து செல்லும்.
ஆகவே நீங்கள் ஒரு பணய கைதிகளாக வைக்கப்பட்டீர்களா? எப்படி?
கருணா பிரச்சினையைத் தொடர்ந்து எங்களால் சுதந்திரமான கருத்துக்களை அல்லது உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எங்களது கருத்துக்களை மனம் திறந்து வெளிக்கொணர முடியாத ஒரு சூழ்நிலை அவர்களிடமிருந்து (கருணா) வரும் கருத்துக்களை மட்டுந்தான் பிரசுரிக்க வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டு அதனை வெளியிட்டுக்கொண்டிருந்தோம்.
ஒரு பத்திரிகையாளனின் குரல்வளை நசிக்கப்பட்டு கொண்டிருந்த போது உங்களது உணர்வு எப்படி இருந்தது ?
எனது உணர்வு மனசாட்சிக்கு விரோதமான ஒன்றாகவே இருந்தது. இருந்தாலும் அவர்களின் ஆயுத அச்சுறுத்தலுக்கு உள்ளான சூழ்நிலையில் உயிராபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் அதற்கு அடி பணிந்தோம்.
குறிப்பாக கருணா பற்றிய தகவல்களை உங்களது பத்திரிகை வெளியிடும் போது இதனை படிக்கின்ற மக்கள் உண்மையானதென்று என ஏற்றுக்கொண்டார்களா?
தனிப்பட்ட ஒரு குழுவைச் சார்ந்த கருத்துக்கள் மட்டுந்தான் வருகின்றன எனவும் நடுநிலை தன்மையைக் காணமுடியவில்லை எனவும் கூறினார்கள். ஆனால் அச் சூழ்நிலையில் எம்மால் நடுநிலையான தகவல்களை கூற முடியவில்லை.
குறிப்பாகஇ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற செய்தி பிரசுரிக்கப்பட்டது. வடக்குஇகிழக்கு இணைந்தது அல்ல தமிழீழம் கிழக்கு தனியாக வடக்கு தனியாக அதிலும் மட்டக்களப்பு தனியான ஒரு பிரதேசம் என்பதை சுட்டிக் காட்டி தகவல்கள் வெளியாகின. அவ்வாறு தகவல்களை நீங்கள் பிரசுரிக்கின்ற போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது.?
நிச்சயம் எங்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது.
இதைப் பற்றி அந்த செய்தியை பிரசுரிக்க வேண்டும் என்று கூறியவர்களிடம் நீங்கள் பேசக் கூடிய நிலை அன்று இருக்கவில்லையா?
அப்படி பேசியிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அணியினருடன் இவர்கள் ஆதரவானவர்கள் என்று வேறு கண்ணோட்டத்துடன் எங்களை நோக்கலாம் அந்த பயம் காரணமாக அந்த கருத்தை அவர்களிடம் தெரிவிக்கவில்லை.
குறிப்பாக தங்களுடைய பத்திரிகை காரியாலயத்தில் பணியாற்றயவர்கள் எல்லோருமே இப்படி ஒரு பணய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நிலையில்தான் அந்நேர பணியை மேற்கொண்டார்களா?
நிச்சயமாக அப்படியொரு சூழ்நிலையில்தான் வேலை செய்தார்கள்.
ஆகவேஇ இப்போது உங்களது மனநிலை எவ்வாறு இருக்கின்றது? இப்போது உங்களது இந்த மகிழ்ச்சியை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் உங்களுடைய பத்திரிகை குறிப்பாக இணையத்தளம் ஊடாக உலகெங்கும் வாழும் மக்கள் படித்திருக்கின்றார்கள். இப்போது நீங்கள் அளிக்கின்ற இந்த கருத்துக்கள் இணையத்தளமுடாகவும் மக்கள் அறிய கூடியதாக இருக்கும். ஆகவே உங்கள் மனநிலை பற்றி இப்போது அறிய தரவேண்டும் என்று மிக அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் ?
நிச்சயமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கும் அதிமேதகு தலைவர் எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உறுதுணையாக அவரின் போராட்டத்துக்கு கூர்மைப்படுத்துகின்ற சக்தியாக தமிழலை பத்திரிகை தொடர்ந்து தன் பணிகளை மேற்கொள்ளும். குறுகிய காலகட்டத்திற்குள் அந்த பத்திரிகையின் உணர்வுகள் வேறொரு கோணத்தில் சென்றிருந்தாலும் அதன் இலக்கு தமிழ் மக்களின் விடுதலைக்கான குரலாக ஓங்கி ஒலிக்கும் என மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
சூரியனுக்காக எழுத்துருவாக்கம் வல்லவை
மூலம் ஜ.பி.சி. லண்டன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

