04-13-2004, 12:24 AM
<span style='color:red'>கருணாவின் பிரதேசவாதத்தில் குளிர்காய முயன்ற சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு பெரும் ஏமாற்றம்
கருணாவின் பிரச்சனைகளைப் பூதாகரப்படுத்தி, சர்வதேச மட்டத்தில் பிரதேசவாதத்தைத் தூண்டுவதற்கும், விடுதலைப் புலிகளுக்கெதிரான பிரச்சாரத்தை முடுக்கி விடுவதிலும் கடுகதியில் உழைத்த பல சர்வதேச ஊடகங்கள் பெரும் ஏமாற்றமடைந்திருப்பதாகத் தெரியவருகிறது.
மட்டக்களப்பு தமிழ்அலை உட்பட, ஐரோப்பா, கனடா, இந்தியா போன்ற நாடுகளில் இயங்கும் சில ஊடகங்கள், கருணாவின் பிரச்சனை குறித்து, உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டமை, பொய் வதந்திகளைக் கட்டவிழ்த்து விட்டமை, கருணா கிளப்பிய பிரதேசவாதத்திற்கு வக்காலத்து வாங்கியமை, மக்களைப் பீதிக்குள்ளாக்கியமை போன்றவை உட்பட, அவசியமற்ற தகவல்களை அநாமதேய ஊடகங்களை மேற்கோள் காட்டி தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில், திடிரென கருணா குழுவினர் பின்வாங்கியதுடன், கொழும்புக்குத் தப்பியோடிவிட்டனர்.
இந்நிலையில், இவ்வூடகங்கள் மிகப் பெரும் வெறுப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ளதுடன், இத்தகைய செயலில் ஈடுபட்ட ஊடகங்கள் சில, வேகமாகவே சுதாகரித்துக்கொண்டு மீண்டும் கருணாவுக்கு எதிரான செய்திகள் சிலவற்றைப் பிரசுரித்து, தங்களது பக்கச்சார்பு நிலையை மீண்டும் நியாயப்படுத்த முயல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நெருக்கடியான காலப்பகுதியில், நேர்மையுடன் செயற்பட்ட சில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்தில், தமிழ்த் தேசியத்தின் ஒட்டு மொத்த வெற்றிக்காக அனைத்து ஊடகங்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையை உணர்ந்து, இனிவரும் காலத்தில், ஓர் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்த் தேசியத்தின் ஒன்றுபட்ட இனவிடுதலையை நோக்கி அனைத்து ஊடகங்களும் செயற்பட வேண்டுமென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </span>
நன்றி புதினம் டொட் கொம்...!
+++++++++++++++++++
[size=18]யாழ் களத்திலும் சிலர் இதே கருணாவின் செய்திகளைக் கொண்டு தமிழ் தேசியத்தையும் தமிழர் தேசத்தையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழர் தேசிய அரசியல் இராணுவ போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளையும் கொச்சைப்படுத்த முயன்றனர்...இன்னும் சிலர் மேலே சொல்லப்பட்ட கருணாவின் செய்தி காவி குளிர்காய முற்பட்ட உள்ளூர், சர்வதேச ஊடகங்களின் செய்திகளை யாழ்களத்தில் இட்டு அவற்றிற்கு ஒத்தூத முற்பட்டதையும் இச்சமயத்தில் நினைவுபடுத்துவது எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் மாற்றுக்கருத்து...கருத்துச் சுதந்திரம்... என்ற போர்வையில் பொய்களும் சுயநலங்களும் துரோகத்தனங்களும் பிழைக்க யாழ்களம் விளங்கியோ விளங்காமலோ இடமளிக்காது இன்று போல் என்றும் தமிழ் மக்களின் தேவை கருதி ஆக்கபூர்வமாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்....!
இச்சமயத்தில் தமிழ் மக்களின் நலன் கருதியும், பல நம்பிக்கையான ஊடகங்கள் கூட செய்த பொய்ப் பிரச்சாரங்களால் தமிழ்மக்கள் காலம் காலமாய் காத்து வந்த நம்பிக்கைகளும் கனவுகளும் சிதைந்து விடாது காத்து நிற்கவும் எம்மைப்போல் மனதார உழைத்த அனைத்துக் கள உறவுகளுக்கும் நாமெல்லாம் தமிழீழ தேசத்தவர்கள் என்ற நிலையான உறவு நினைவுறுத்தி எமது பாராட்டுகளைப் பகிர்ந்து கொள்கின்றோம்...!
----குருவிகள்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>