04-12-2004, 11:51 PM
காலக்கண்ணாடியில் கருணா
12.04.2004
<b>மட்டக்களப்பு, அம்பாறையை மட்டுமல்ல - தமிழீழத்தை - ஏன் தமிழர் வாழும் முழு உலகத்தையுமே - அச்சத்திலும் ஆதங்கத்திலும் ஆழ்த்தி அலைக்கழித்த ஒரு மன உளைச்சல் இன்று எம்மைவிட்டு அகன்று விட்டது. இருட்டு விலகி வெளிச்சம் வந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. கருணாவின் முகத்திரை பகிரங்கமாகவே கிழிந்துபோயுள்ள இத்தருணத்தில் கருணா குறித்து எஞ்சியிருக்கும் சில மாயைகளும் அகற்றப்படவேண்டும். இதற்கான சில தடயங்களை ஒலிக்கீற்றுகளாக கருணாவின் கடந்தகாலத்தில் இருந்து மீட்டுவருகிறது இக்கட்டுரை.</b>
தன் மீதான நியாயமான குற்றச்சாட்டுகளை ஒரு தளபதிக்கேயுரிய நேர்மையுடனும் தீரத்துடனும் முகம்கொடுக்கத் திராணியற்ற நிலையில் உணர்ச்சிவசப்பட்டு, ஆத்திரமுற்று மேலும் மேலும் அடுக்கடுக்காகத் துரோகமிழைத்த கருணா இன்று தமிழீழத் தேசியத்தின் சக்திக்கு முகம் கொடுக்கமுடியாமல் தொப்பிகலை முகாமை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
கடந்த சில கிழமைகளாக எதிர்ப்போராட்ட சக்திகள் ஏற்கனவே போட்டுவைத்திருந்த கொழுகொம்புகளைப் பற்றிக் கொண்டது மட்டுமல்ல தனது கற்பனை போன போக்கில் எல்லாம் எதிர்ச்சக்திகளுக்குத் தீனிபோடும் முயற்சியிலும் கருணா இறங்கினார்.
அரசியல் அறிவோ, விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றிய ஆழமான பார்வையோ இல்லாதவர்கள் கூட அப்பட்டமாக விளங்கிக்கொள்ளக்கூடியவாறான சில பொய்களையெல்லாம் கருணா இயற்றலானார்.
ஏன்? ஈ.பி.டி.பி போன்ற கூலிப்படையினர் கூட ஏளனம் செய்யுமளவுக்குத் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் முயற்சிகளுக்கு முண்டுகொடுக்கலானார்.
ஆனால், அவரது முயற்சிகள் எடுபடவில்லை. தேசியத்தின் முன் அடிபட்டுப் போய்விட்டன.
ஏதோ இருபது வருடங்களாகத் தலைவரை நன்றாக அறிந்தவர் என்றும் அதனால் தலைவரின் சிந்தனையைத் தான் நன்கு அறிவேன் என்றும் பிரகடனப்படுத்துவதன் மூலம் தன்னைத் தானே எதிர்ச்சக்திகளுக்கு அவசியம் தேவையான ஒரு வேண்டுபொருளாக விளம்பரப்படுத்தினார்.
தற்காப்பு யுத்தம் என்றால் என்ன என்பதை அறிமுகப்படுத்தியது தனது வேலை என்பது போன்ற பாணியிலான கட்டுக்கதைகளை தொப்பிகலையில் இருந்து ஓடுவதற்குச் சிலநாட்களுக்கு முன்னர் பந்துல ஜெயசேகரா என்ற சிங்களப்பேரினவாத ஊடகவியலாளருக்குத் தெரிவித்திருந்தார் (பந்துலவைப் பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரையை நிழற்பதிப்பு வெளியிட்டிருக்கிறது).
இந்த மாயை பற்றிய சில உண்மைகளை நாம் தரிசிக்கவேண்டிய தேவையுள்ளது.
ஒரு போர் பல சமர்களைக் கொண்டது. ஒரு சமர் (டீயவவடந) பல சண்டைகளைக் (ஊடயளாநள்) கொண்டது.
ஒரு சமரின் அங்கங்களான தனித்தனியான சண்டைகளைத் தலைமை தாங்கி மூர்க்கமான முறையில் சண்டையிட்டு கொடுக்கப்பட்ட இலக்குகளைச் சென்றடையும் திறமை கைவரப்பெற்ற ஒரு கட்டளைத் தளபதியாக இயங்கும் திறன் கருணாவுக்கு இருந்தது. அது மட்டுமன்றி போரியலை நவீன மயப்படுத்துவது தொடர்பான ஆர்வமும் ஏனைய தளபதிகளைப் போலவே கருணாவுக்கும் இருந்தது.
ஏனைய தளபதிகளை விடவும் சில சிறப்பான சலுகைகள் கருணாவுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கிட்டியிருந்தன. பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டமையால் அளவுக்கு அதிகமாக ஊடகப் பிரசித்திபெற்ற தளபதியாக கருணா உருவெடுத்திருந்தார்.
கருணாவின் வாழ்வை துரோகத்திற்கு முன், துரோகத்திற்குப் பின் என்ற இரண்டு கட்டங்களில் வைத்து ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.
துரோகத்துக்கு முன் தான் பெற்றிருந்த பிரசித்தியைத் துரோகத்துக்குப் பின் கருணா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
துரோகத்துக்குப் பின்னான சமீபத்தைய நாட்களில் தன் இராணுவத் திறமைகள் பற்றிய சில மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை கருணா திட்டமிட்ட வகையில் ஆங்கில ஊடகங்களுக்கு வெளியிட்டுவந்துள்ளார்.
இராணுத் தந்திரோபாய உத்திகளை வகுத்துத், திட்டங்களைத் தீட்டி, வியூகங்களைத் தீர்மானித்துச் சமர்களுக்குத் தலைமை தாங்கும் வல்லமை கைவரப்பெற்ற ஒருவரையே இராணுவ உத்தியாளர் (ஆடைவையசல ளவசயவநபளைவ) என்ற வரைவிலக்கணத்துக்கு உட்படுத்தலாம்.
ஒரு சமரின் சண்டைகள் எவையெவை? அவற்றை எங்கெங்கு நிகழ்த்துவது? எவ்வாறு நிகழ்த்துவது? எப்போது நிகழ்த்துவது? எவ்வளவு விரைவாக நடாத்துவது போன்றவற்றைத் தீர்மானிக்கின்ற போர்த்தந்திரோபாய உத்திகளை வகுக்கும் திறமை பெற்ற ஒருவரே இராணுவ உத்தியாளர்.
இவ்வாறான ஒரு இராணுவ உத்தியாளராகத் தன்னைத் தானே விளம்பரப்படுத்த முயற்சித்தார்.
துரோகத்துக்கு முன், தனது வாயாலேயே தான் ஒரு உத்தியாளனா அல்லது ஒரு கட்டளைத் தளபதியா என்பதற்கான பதிலைக் கருணா மிகவும் அழுத்தம் திருத்தமாகவும் தெளிவாகவும் பலமுறை கூட்டங்களில் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இவற்றையெல்லாம் நாம் பதிவுசெய்துவைத்திருக்கவில்லை.
அண்மையில் தமிழ் அலை நிழற்பதிப்புக்கு சுவிற்சர்லாந்திலிருந்து சிவநாதன் என்ற அன்பர் 2002ம் ஆண்டின் இறுதியில் கருணா ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகளை ஒலிக்கீற்றுகளாக பதிவுசெய்து எமக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைத்திருந்தார்.
அவற்றை இங்கு வெளியிடுகிறோம்.
துரோகத்தின் பின், கருணா தன்னைப் பற்றித் தானே மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட்டுவந்தற்கு எதிர்மாறான ஆதாரங்களை துரோகத்துக்குப் பல மாதங்களுக்கு முன்னர் அவர் பேசிய பேச்சுக்களின் பகுதிகள் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன.
கேட்டுப் பாருங்கள்!
பேச்சு ஒன்று http://media.thamilalai.net/karuna_1.ram
பேச்சு இரண்டு http://media.thamilalai.net/karuna_3.ram
பேச்சு மூன்று http://media.thamilalai.net/karuna_4.ram
பேச்சு நான்கு http://media.thamilalai.net/karuna_5.ram
பெருந்திறமைவாய்ந்த தலைவரும், அர்ப்பணிப்புகள் நிறைந்த, தீரம் கொண்ட போராளிகளும் அணித்தலைவர்களும் இருந்த சூழலில் ஒரு திறமைவாய்ந்த கட்டளைத் தளபதியாக செயற்பட்டிருக்கும் வல்லமை கருணாவுக்கு இருந்ததென்பது உண்மைதான்.
ஆனால் துரோகத்தின் பின், இலட்சியத்தைக் கைவிட்டு, கூலிப்படையாகி, உதிரியாகி நின்று, உளநிலை உறுத்தல்களுடன், உறுதியற்ற ஒரு எதிரிப்படையில் கருணாவால் எதையுமே சாதித்துவிடமுடியாது.
எனவே கருணா என்ற முரளிதரன் துரோகத்தின் பின் ஒரு அற்ப பதராகி விட்டார்.
இனியும் அவர் குறித்த மிகைப்படுத்தப்பட்ட அச்சங்கள் எமக்குத் தேவையில்லை!
- இளந்தென்றல்
நன்றி - தமிழ் அலை

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>