04-12-2004, 07:33 PM
Nஐ.வி.பி. - சுதந்திரக்கட்சிக்கிடையில் கடும் முறுகல் நிலை
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்பிரல் 2004, 1:45 ஈழம் ஸ
மஹிந்த ராஐபக்ஷவை பிரதம மந்திரியாக நியமித்தமை உட்பட, அமைச்சர் நியமனங்கள், அமைச்சுக்களின் பிரதான பணிகள் மாற்றியமைக்கப்பட்டமை போன்றன தொடர்பாக, Nஐ.வி.பி.க்கும் சந்திரிகாவின் அணிக்கும் இடையில் கடும் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
Nஐ.வி.பி.யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா, ஐனாதிபதி சந்திரிகாவுக்கு எழுதியுள்ள மிகவும் காரசாரமான கடிதத்தில், இவற்றை விபரமாகத் தெரிவித்திருக்கிறார்.
தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், லக்ஷ்மன் கதிர்காமரையே பிரதம மந்திரியாக நியமிக்கும்படி கேட்டபோது, ஐனாதிபதி சந்திரிகா அதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், ஒரு பௌத்த சிங்களவரை நியமிக்கும் தேவையிருந்திருந்தால் கூட, அநுரா பண்டாரநாயக்காவை அல்லது மைத்திரிபால சேனநாயக்காவை நியமித்திருந்தால், அது தமக்கு திருப்தியளித்திருக்கும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியாக நியமிக்கப்படக் கூடாது என்று மஹிந்த ராஐபக்ஷ விடயத்தில் தாம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருந்தும், சந்திரிகா தான்தோன்றித் தனமாக எடுத்துள்ள அந்த முடிவு, தமக்கு மிகவும் அதிருப்தி அளிப்பதாக உள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்:
சுதந்திரக் கட்சியின் சார்பில் 65 ஆசனங்களும், Nஐ.வி.பி. சார்பில் 40 ஆசனங்களும் பாராளுமன்ற அமைச்சரவையில் உள்ளன. தற்போது சுதந்திரக்கட்சிக்கு 31 அமைச்சுக்களும், 31 பிரதி அமைச்சுக்களும் வழங்கப்பட்டுள்ளன. Nஐ.வி.பி.க்கு 4 அமைச்சுக்களும் 4 பிரதி அமைச்சுக்களும் வழங்கப் பட்டுள்ளன. அமைச்சுக்கள் வழங்கப்பட்ட விகிதாசாரப் படி பார்க்கையில், இது மிகவும் முரண்பாடாக அமைந்துள்ளன. 65 ஆசனங்களுக்காக 62 பதவிகளும், 40 ஆசனங்களுக்காக வெறும் 8 பதவிகளும் வழங்கப்பட்டுள்ளமை மிகவும் நேர்மையற்ற பதவி வழங்கலை வெளிக்காட்டுகிறது. இது நாம் ஏற்கனவே பேசி ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளுக்கு மிகவும் முரணானது.
இது தவிர, தேர்தலுக்கு முன்னரே இணங்கியபடி, நான்கு அமைச்சுக்களை Nஐ.வி.பி. பெற்றிருந்தாலும், தரப்பட்ட நான்கு அமைச்சுக்களிலும், எம்மைக் கலந்தாலோசிக்காது, தந்திரமாக சில பணிகளை அவ்வமைச்சுக்களிலிருந்து நீக்கியுள்ளமை குறித்து நாம் விசனமடைகிறோம். குறிப்பாக:
1) விவசாய மற்றும் நிலவள அமைச்சிலிருந்து, எம்மைக் கேட்காது திடிரென மகாவலி அபிவிருத்திப் பணியை நீக்கியுள்ளமை.
2) கலாச்சார அமைச்சிலிருந்து சிறீலங்கா திரைப்படத் துறையையும் திரைப்பட சென்சார் துறையையும் நீக்கியுள்ளமை.
3) கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலிருந்து கிராமிய வங்கி உட்பட நிதி நிறுவன முகாமைத்துவத்தை நீக்கியுள்ளமை.
4) தொழில்வள அமைச்சிலிருந்து சில முக்கிய பணிகளை நீக்கியுள்ளமை.
Nஐ.வி.பி.யும் கூட்டணியின் பிரதான அங்கம் என்ற வகையில், இவை குறித்து பேசித் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, எந்தவித முன்னறிவித்தலுமன்றி, தந்திரமாக, இந்த அமைச்சுக்களின் பொறுப்புக்களைப் பிரித்தெடுத்துவிட்டு, வழங்கியிருப்பது மிகவும் பெரிய குற்றம் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு சில நாட்களுக்குள் எழுத்து மூலம் தமது கட்சியின் தலைமைக்கு, ஐனாதிபதி சந்திரிகா பதில் தரவேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>