04-12-2004, 05:06 PM
கருணா தனது எதிர்ப்பை முற்றாக நிறுத்தி விட்டார் - எரிக் சொல்ஹெய்ம்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 22:47 ஈழம் ஸ
தனக்குக் கிடைத்த செய்திகளின் படி, கருணா தரப்பினர் தமது எதிர்ப்பை முற்றாக நிறுத்திக்கொண்டு பின்வாங்கி விட்டதாக எரிக் சொல்ஹெய்ம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கருணாவின் தற்போதைய நிலை என்ன, எங்கே ஒளிந்திருக்கிறார், யார் பாதுகாப்பு வழங்குகிறார்கள் என்ற விபரமெதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்த சொல்ஹெய்ம், கருணாவின் எதிர்ப்பு முற்றாக நிறுத்தப்பட்டு விட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடன் ஓர் அவசர சந்திப்பிற்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளதாகவும், நாளை செவ்வாய்க்கிழமை இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதை கண்காணிப்புக்குழுவின் பிரதித் தலைவர் ஹேக்ரப் ஹோக்லான்ட் உறுதிசெய்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கருணா தரப்பினர் பாதுகாப்பைக் கோரும் பட்சத்தில், உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு, அடிப்படைப் பாதுகாப்பு வழங்க அரசு தயாராகவிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் சிரில் ஹேரத் தெரிவித்துள்ளார். இருப்பினும் தங்களுடன் கருணா தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக வந்த செய்திகளை நிராகரித்துள்ளார்.
மட்டக்களப்பு-அம்பாறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முகாம்கள் முழுமையாக தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளதாகவும், அங்கு எதுவித அசம்பாவிதங்கள், குழப்பங்கள் எதுவுமின்றி, நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் எமது புதினம் நிருபர் தெரிவிக்கிறார்.
Thanx: Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>