04-12-2004, 05:04 PM
பிந்திய செய்தி: கருணா கொழும்புக்குத் தப்பியோட்டம்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 21:28 ஈழம் ஸ
தேனகம் அரசியற் தலைமையகம் உட்பட மட்டக்களப்பின் முழுப்பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், கருணா கொழும்புக்குத் தப்பியோடியுள்ளதை லண்டனிலிருந்து இயங்கும் ஐபிசி வானொலி உறுதி செய்துள்ளது.
சிறீலங்கா அரசிடம் அல்லது இலங்கை கண்காணிப்புக் குழுவிடம் சரணடைவது குறித்து உயர்மட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சிறீலங்கா இராணுவ உளவுப்படை முந்திக்கொண்டு, கருணாவுக்கு பாதுகாப்பளித்து கொழும்புக்குக் கொண்டு சென்றுவிட்டதாகத் தெரியவருகிறது.
கருணா தன்னுடன் நிலாவனி, தீந்தமிழ் ஆகிய இருவரை மட்டுமே அழைத்துச் சென்றுள்ளதாகவும், மீதியான ஒருசில முக்கிய உதவியாளர்களைக் கூட்டிச் செல்ல முயன்றபோதும், அவர்கள் அனைவரும் மறுத்து விட்டதாகவும் தெரியவருகிறது.
இவ்வாறு மறுப்புத் தெரிவித்த ஒரு முக்கிய பெண்போராளி கருத்துக் கூறுகையில், தனது கண்ணுக்கு முன்னே தேசியத் தலைவரின் படத்தைத் தூக்கியெறிந்து உடைத்த போது, தனது நெஞ்சே வெடித்து விட்டது போன்று உணர்ந்ததாகவும், எப்படியும் விரைவில் கருணா, நிலாவனி என்ற இருவரின் படங்களையும் தனது கையாலேயே தூக்கியெறிந்து உடைப்பதற்கு சவாலெடுத்திருந்ததாகவும், இவ்வளவு விரைவில் அந்தக் காலம் கனிந்து வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
சிறீலங்கா அரச பாதுகாப்பில், கொழும்புக்குத் தப்பியோடவுள்ளதையும், அங்கிருந்து வெளிநாடொன்றுக்குத் தப்பிச்செல்ல ஒரு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்ததையும் அப்பெண்போராளி உறுதி செய்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அனைவரும் தேசியத் தலைமையிடம் இணைந்து விட்டதாகவும், அவர்களில் விரும்பியவர்களை அவர்களது பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வு விரைவில் நடைபெறுமென்றும் தெரியவருகிறது.
இதற்கிடையில், கிழக்கிலங்கை மக்களுக்கு தற்போதைய களநிலவரங்களைப் புரியவைப்பதிலும், மீளக்குடியேறும் மக்களின் அவசரத் தேவைகளில் உதவுவதிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
Thanx: Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>