04-12-2004, 01:48 PM
தேசிய நெருப்பில் எரிந்திட்ட பிரதேசவாதம்!
12.04.2004
மட்டக்களப்பின் பெரும் பகுதிகள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ் அலை நிழற் பதிப்பினர் இன்று மாலை கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தமிழ் அலை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
தமிழ் அலை அலுவலகத்தை முற்றாகக் கைவிட்டுச் சென்றிருந்த கருணா குழுவினரின் பல்வேறு பொருட்கள், நாட்குறிப்புகள், உலர் உணவுகள், பத்திரிகைகள் என்பன ஆங்காங்கே சிதறிக் காணப்பட்டன. தமிழ் அலை அலுவலகத்தைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் பணியாளர்கள் அதனைச் சுத்தம் செய்வதைக் காணக்கூடியதாகவிருந்தது. தொடர்ந்து பத்திரிகையை வெளியிடுவதற்கான முயற்சிகளில் விடுதலைப் புலிகளின் பணியாளர்கள் பெருமளவு மக்கள் திரளாக வந்து போராளிகளைச் சந்தித்து செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. ஒரு வயது முதிர்ந்த பெரியவர் தலைவரின் பிள்ளைகள் வந்து விட்டார்கள் என்று கூறி போராளிகளைக் கட்டி அணைத்ததுடன் கருணாவின் கட்டுப்பாட்டில் தாங்கள் எதிர் நோக்கிய நெருக்கடிகளையும் அவர் போராளிகளுடன் பகிர்ந்து கொண்டார். அரச இராணுவத்தின் பிடியிலிருந்து மீண்டது போன்ற உணர்வையே அங்கு மக்களின் முகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
பிரதேச வாதத்திற்கு முண்டு கொடுத்த எம் பிரதேசவாதக் கனவான்களே, மீட்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஒரு முறை சென்று பாருங்கள். தேசிய நெருப்பில் எரிந்து அழிந்திட்ட பிரதேசவாத சாம்பலின் மணத்தை நுகர்வீர்;கள்!.
Thanx: Thamil Alai

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>