04-12-2004, 01:00 PM
கருணாவின் படை கலைந்தது: புலிகள் கையில் மட்டக்களப்பு
கொழும்பு:
மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளை கருணாவின் படைகளிடம் இருந்து விடுதலைப் புலிகள் கைப்பற்றிவிட்டனர். இன்று காலை பல்முனைகளில் தாக்குதல் நடத்திய புலிகள் கொக்கடிச்சோலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையடுத்து கருணா தலைமையிலான படை எதிர் தாக்குதலை கைவிட்டுவிட்டு, கலைய ஆரம்பித்துள்ளது. மேலும் ராணுவத்தைத் தொடர்பு கொண்டுள்ள கருணா தரப்பு, தங்களால் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை என்றும், இதனால் தற்காப்புத் தாக்குதலையும் நிறுத்திவிட்டுக் கலைவதாகக் கூறியுள்ளனர்.
இதனால் போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
கருணா ஆதரவு பத்திரிக்கையான தமிழ் அலை அலுவலகத்தையும் அதன் பதிப்பகத்தையும் புலிகளின் அரசியல் பிரிவு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிட்டது.
அதே போல கருணாவின் முக்கிய படைத் தளமான மீனகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஆண், பெண் படையினரும் வெளியேறி வருகின்றனர். மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளையும் புலிகள் கைப்பற்றி வருவதால், மீனகத்தை விட்டு வெளியேறிவிடுமாறு அந்தத் தளத்தின் கமாண்டர் தங்களை அறிவுறுத்தியதாக தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர்.
புலிகளை எதிர்த்துப் போரிட வேண்டாம் என்று கமாண்டர் கூறியதாகவும், சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுங்கள் அல்லது முன்னேறி வரும் புலிகளுடன் இணைந்துவிடுங்கள் என தங்களை அவர் அறிவுறுத்தியதாக தமிழ்நெட் செய்தியாளரிடம் வீரர்கள் கூறியுள்ளனர்.
அருள்மொழி என்ற பெண் புலி நிருபர்களிடம் பேசுகையில், மீனகம் முகாமில் நாங்கள் இருந்தோம். அங்கிருந்த பல வீரர்களும் தப்பியோடிவிட்ட நிலையில் 400 முதல் 500 பேர் வரை தொடர்ந்து அங்கேயே இருந்தோம். எங்களை வீடுகளுக்குச் செல்லுமாறு கமாண்டர் கூறிவிட்டார் என்றார்.
அதே போல கரடியனாறு பகுதியில் உள்ள தேனகம் மாநாட்டு அரங்கையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த அரங்கம் கருணாவின் அரசியல் தலைமையகமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.
இன்று நிருபர்கள் இந்த அரங்கத்துக்குச் சென்றபோது, அங்கு யாரும் இல்லை. இங்கிருந்த கருணாவின் படையினர் தப்பியோடிவிட்டனர்.
பெரும்பாலான கருணாவின் படைத் தளபதிகளும் மோதலை விரும்பவில்லை என்றும், இணைந்து செயல்பட விரும்புவதாகவும் புலிகளுக்கு செய்தி அனுப்பியபடி உள்ளனர். இதனால் பெரிய அளவிலான சண்டை ஏதும் இன்று நடக்கவில்லை. இவர்கள் விரைவில் தங்களது வீரர்களுடன் வந்து எஙகளுடன் இணைவர் என புலிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே ராணுவத் தரப்பில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
எங்களது உதவி கிடைக்கும் என கருணா எதிர்பார்த்தார். ஆனால், நாங்கள் உதவி செய்யவில்லை. இதனால் புலிகளின் மிகக் கடுமையான தாக்குதலை சமாளிக்க கருணாவின் படைகளால் முடியவில்லை. அவரது படையினர் தங்களிடம் இருந்த மோட்டார் சைக்களிகள் உள்ளிட்ட உடமைகளை விற்றுவிட்டு தப்பியோடி வருகின்றனர் என்றார்.
புலிகளின் தாக்குதலை கடுமையான போர் பயிற்சி பெற்ற ஜெயந்தன் பிரிகேட் படை தலைமை தாங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 1997ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை நடந்த போர்களில் இலங்கை ராணுவத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய படை இது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களும் ஏராளமான அளவில் உள்ளனர்.
thatstamil.com