04-12-2004, 12:53 PM
மீனகம் முகாமில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து கருணா தப்பியோட்டம்.
ஜ தீபன் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 17:52 ஈழம் ஸ
கருணாவும் அவரது நெருங்கிய சகாக்கள் சிலரும் மீனகம் முகாமிலிருந்து காட்டிற்குத் தப்பியோடியுள்ளதாக கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா மற்றும் அவரது பாதுகாவலர்கள், கருணாவிற்கு நெருக்கமானவர்கள் ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளதாக விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான திரு. கரிகாலன் சுவிஸிலிருந்து தமிழ்நெற் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
கருணாவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த எனது சகோதரர் தற்போது வீடு வந்துள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்த திரு.கரிகாலன், கருணாவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த திரு.கௌசல்யன் தற்போது தாயகம் திரும்பி, மட்டக்களப்பு மாவட்ட அரசியல் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கருணாவின் முகாமிலிருந்த போராளிகள் தலைமைப்பீடத்துடன் பாதுகாப்பாக இணையும் நடவடிக்கைகளை அவர் இப்போது ஒருங்கிணைத்து வருகிறார்.
வெளிநாட்டு ஊடகங்களிற்கான காட்சி பொருளாக மாறியிருந்த விடுதலைப் புலிகளின் மீனகம் முகாம் தற்போது மிகவும் குழப்பான நிலையில் இருப்பதாகவும், அங்கே போராளிகளிற்கிடையே எதிர்ந்த எதிர்ப்பலையாலேயே கருணா இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார் எனவும் தெரியவருகிறது.
இதேவேளை தென்தமிழீழத்தின் குரலாக வெளிவந்து, கருணாவால் பிரதேசவாதத்தைப் பரப்பும் ஊடகமாக மாற்றப்பட்ட தமிழ் அலை பத்திரிகை நாளை முதல் தனது பதிப்பை ஆரம்பிக்கும் எனவும் தெரியவருகிறது.
கருணாவின் சதி நடவடிக்கை எதிர் பார்க்கப்பட்டதிலும் பார்க்க வேகமாக முறியடிக்கப்பட்டதால் கிழக்கு மாகாண மக்கள் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக மக்கள் புதுவருடத்தை மிகவும் சந்தோசமான மனநிலையில் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரிவு என்பது முற்றுப்பெற்றுவிட்டதாகவும், கருணாவுடன் நின்ற போராளிகள் தலைமைப்பீடத்துடன் இணைவதையும், சிலர் வீடுகளிற்கு திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் மீனகம் முகாம் போராளி ஒருவர் தெரிவித்தாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
Thanx: Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>