04-12-2004, 11:09 AM
'தமிழ் இனத்துக்கே சிறப்பான உட்பகை"
இலங்கையில் விடுதலைப்புலிகள் இடையே ஏற்பட்டுள்ள சகோதர யுத்தம் இதயத்தைத் துளைக்கிறது என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம் வருமாறு:
ஈழத் தமிழர் பிரச்சினையை இந்திய மக்களும் குறிப்பாக தமிழ் மக்களும் அனுதாப உணர்வுடன்தான் அணுகினர்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் படை வீரர்களாக மாறினர். அப்படி மாறியவர்களுக்கு உள்ளேயே, தமிழ் இனத்துக்கே சிறப்பான உட்பகை தோன்றிடத் தவறவில்லை.
அதன் காரணமாகப் போராளிக் குழுக்கள் பல அமைந்தன. இவர்களுக்குள்ளேயே தனித்தனியே ஆயுதப் போர் நடத்தின. அப்போட்டியில் பெருந்தலைகளே பல உருண்டபோது, 'சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள்" என்று தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுத்தேன்.
மதுரையில் 'டெசோ" மகாநாடு நடத்தி, போராளிக் குழுக்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதித்தோம்.
அதற்குப் பிறகும் சகோதர யுத்தம் நிற்கவில்லை. ராஜீவ் காந்தியின் கொடுமையான படுகொலை, ஈழத்தமிழர் உரிமை பெற வேண்டுமென தமிழ் நாட்டு மக்கள் காட்டிய ஆர்வத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது.
எத்தனையோ அரசியல் மாற்றங்களுக்கிடையே நோர்வேயின் முயற்சியால் சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் படிப்படியான முன்னேற்றமும் ஏற்பட்டது.
இருள் விலகாதா என எதிர்பார்த்திருக்கும் போது திடுமென ஒரு மின்னல் கீற்று கண்ணைப் பறித்தது போல புலிப் போராளிகளுக்கிடையே கருணா விவகாரம் வெடித்தது.
பாரதி பாடியது போல தமிழ் சாதியின் விதி என்று தான் இதை வேதனையுடன் நோக்க வேண்டியுள்ளது.
இப்போது போராளிகளுக்குள்ளேயே போர் மூண்டுள்ளது. இந்த வகையான சகோதர யுத்தம் முடிவடையும் வரையில் சமாதானமாகவும், சந்தோர்மாகவும் சஞ்சலம் துளியும் இல்லாமலும் தமிழ் இனத்தவர் வாழ்வதற்கு வழி வகை ஏது? இந்த ஏக்கம் நம் இதயத்தை அல்லவா துளைக்கிறது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>