04-12-2004, 11:07 AM
விடுதலைப் புலிகளுக்கிடையிலான மோதலானது ஆழ்ந்த துயரத்தைத் தருவதாக சிதம்பரம் கூறுகிறார்
விடுதலைப் புலிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலானது ஆழ்ந்த துயரத்தைத் தருவதுடன் சமாதானப் பேச்சுகளுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதென்று முன்னாள் இந்திய மத்திய அமைச்சரும் காங்கிரஸ் ஜனநாயகப்பேரவைத் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இந்த மோதல்கள் பற்றி அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இது எனது வாழ்க்கையில் துயரம் மிக்க நாட்களில் ஒன்றாகும். தற்போதைய சூழ்நிலை குறித்து நான் முற்றுமுழுதாக அதிருப்தி அடைந்துள்ளேன்.
தசாப்தங்கள் நீண்ட இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான திருப்திகரமான சமாதான நடவடிக்கைகள் தீர்வினைப் பெற்றுத்தரும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் விடுதலைப் புலிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர்களது நலன்களின் மீது அக்கறையுள்ள அனைவரும் தற்போதைய மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வந்துள்ளதும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளதும் சமாதானப் பேச்சுக்கு ஏற்பட்டுள்ள இன்னுமொரு பாரிய பின்னடைவாகும் என்றும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>