04-12-2004, 11:03 AM
மட்டக்களப்பு நகரின் சுற்றுப்புறங்கள் அனைத்தும் மீட்புப்படையணிகள் வசம்
ஜ தீபன் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 16:39 ஈழம் ஸ
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/02/karuna3_22644_435.jpg' border='0' alt='user posted image'>
படம் - தேனகம்
மட்டக்களப்பு நகரின் சுற்றுப்புறங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் படையணிகளால் இன்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. விடுதலைப் புலிகளின் பல தாக்குதல் அணிகள் பல்வேறு பக்கங்களிலிருந்தும் மேற்கொண்ட நகர்வினாலேயே இப்பிரதேங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொக்கட்டிச்சோலைப் பகுதியானது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு கருணாவின் பிரதான இயங்கு தளங்களாக இருந்த கரடியணாறு தேனகம் மாநாட்டு மண்டபம் மற்றும் தமிழ்அலை அச்சகம், பத்திரிகைக் காரியாலயம் என்பன கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தாக்கு அணிகளுடன் விடுதலைப் புலிகளும் அரசியற் பணியாளர்களும் இப்பிரதேசங்கள் அனைத்திற்கும் வருகை தந்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலையில் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் அமோக வரவேற்புத் தந்துகொண்டிருப்பதைத் காணக்கூடியதாக இருந்ததாக தமிழ்அலை நிழற்பதிப்பின் கொக்கட்டிச்சோலைச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொக்கட்டிச்சோலையும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டதையடுத்து வேறிடங்களில் இருந்து கருணாவின் குழுவில் இருந்து பிரிந்து வெளியேறும் போராளிகள் விடுதலைப் புலிகளின் மீட்பு அணிகளை பெருந்தொகையில் நாடிவந்தவண்ணமுள்ளதாகவும் மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கருணாவின் அணியினர் தற்போது தொப்பிக்கலையில் இருக்கும் மீனகம் முகாம் பகுதியிலிருந்து நு}ற்றுக்கணக்கான ஆண், பெண் போராளிகள் விடுதலைப் புலிகளுடன் வந்து மீள இணைவதைக் காணக்கூடியதாக இருந்ததாக தமிழ்நெற் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கருணாவிடம் இருந்து வந்தவர்களின் தகவலின்படி, தமது அணியின் தலைவர் தங்களை விடுதலைப்புலிகளுடன் சென்று இணையுமாறும் அல்லது வீடுகளிற்குச் செல்லுமாறும் தங்களிற்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கரடியணாறுப் பகுதிக்கு விரைந்த விடுதலைப்புலிகளுடன் கருணாவுடன் உள்ள பல அணித் தலைவர்கள் தொடர்புகளை மீளவும் ஸ்தாபித்துள்ளதாகவும் அவர்களும் அவர்களது அணிப் போராளிகளும் எந்நேரமும் தங்களிடம் வந்து சேரலாம் எனவும் மீட்பு அணியின் உறுப்பினர் ஒருவர் பத்திரிகையாளருக்கு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்த அரசியல் பணிமனைகள் அனைத்துமே சனிக்கிழமை முதல் காலியாக இருந்ததாகவும், கருணா அணியினர் அவற்றை விட்டுப் பின்வாங்கிவிட்டனர் எனவும் தெரியவருகிறது.
இதேவேளை, தங்கள் பிள்ளைகளின் கதி என்னாயிற்று என்ற அங்கலாய்ப்புடன் காணப்பட்ட பெற்றோர் கருணா குழுவில் இருந்து விலகிவரும் போராளிகளிடம் தகவல்களைப் பெற முயற்சித்துக்கொண்டிருப்பதை கொக்கட்டிச்சோலையில் அவதானிக்கக்கூடியதாக இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Thanx: Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>