04-12-2004, 12:36 AM
இலங்கை: கருணா கோஷ்டி மீது புலிகள் தெற்கிலிருந்து தாக்குதல் தொடுத்தனர்
கொழும்பு, ஏப். 12: இலங்கையில் கருணா கோஷ்டி போராளிகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஞாயிறன்று மீண்டும் தாக்குதல் நடத்தினர்.
இரு தினங்களாக கருணா கோஷ்டியினர் மீது புலிகள் வடக்கிலிருந்து தாக்குதல் நடத்தினர். ஞாயிறன்று தென்கிழக்கின் அம்பாறை மாவட்டத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது.
தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைக் கருணா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அவரது கோஷ்டியினர் இரு தினங்களாக புலிகளின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல், வெருகல் ஆற்றை ஒட்டிய, மட்டக்களப்பின் வடக்குப் பகுதியிலிருந்து சனிக்கிழமை விலக்கிக் கொண்டனர்.
இப்போது தென் பகுதியிலிருந்து தாக்குதல் தொடங்கியுள்ளனர் புலிகள். தோப்பிகல காட்டுப் பகுதியில் கருணா பதுங்கியிருக்கக் கூடும் என்ற காரணத்தால், அதை நோக்கி புலிகள் முன்னேறி வருகின்றனர்.
வெருகல் ஆற்றின் கரைப்பகுதிகளிலிருந்து கருணா கோஷ்டியினர் விலகிக் கொண்டபின், அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த பெரும் பகுதியைப் புலிகள் கைப்பற்றிவிட்டனர் என ராணுவம் தெரிவித்தது.
""புலிகளின் படைகள் சனிக்கிழமை காலையில் மட்டக்களப்பின் தென்மேற்குப் பகுதியிலிருந்து முன்னேறி அப்பகுதியில் நிலைகொண்டுள்ளனர்'' என்று புலிகள் ஆதரவு "தமிழ்நெட்' இணையதளம் தெரிவித்தது.
கருணா வசம் இருந்த ஒரு பகுதி சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டதாக புலிகள் கூறினர்.
""அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், அக்கரைப்பட்டு ஆகிய கடலோர நகரங்களிலிருந்து கருணா கோஷ்டியினர் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
மிச்சம் மீதியுள்ள கருணா கோஷ்டியினர் சரணடையவேண்டும் என்று கமாண்டர் ஜனார்த்தன் புலிகள் ஞாயிறு காலையில் உத்தரவிட்டுள்ளனர்'' என்கிறது இணைய தளம்.
உயிர்ச்சேதம் தவிர்ப்போம்-புலிகள்: இதனிடையில், கருணா கோஷ்டி மீது தாக்குதலைத் தொடங்கிய பின் முதல் முறையாக விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
""கருணாவின் செயல்களுக்கும் அவரால் ஏற்பட்ட கிழக்கில் ஏற்பட்ட பதற்றத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
அதே சமயம் உயிர்ச் சேதத்தையும் தேவையின்றி ரத்தம் சிந்துவதையும் தவிர்க்க கவனமாக முயற்சி மேற்கொள்வோம்'' என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால், கருணாவோ, அவரது ஆதரவாளர்களோ இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.
Thanx: Dinamani

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>