04-11-2004, 05:07 PM
Eelavan Wrote:இடைக்காலத்தன்னாட்சி சபைக்கான பேச்சுவார்தையே முடிவு எதுவும் எட்டப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கிறது
இருதரப்புக்குமிடையிலேயே இணக்கம் ஏற்படுத்தப்படுவது கடினமாக இருக்கும் போது அப்பேச்சுவார்த்தையானது பன்முகப்படுத்தப்படும் பொழுது வெற்றியைத் தேடித்தரும் என்று நிச்சயமாக நம்பவில்லை
அதிலும் புலிகள் தான் ஏகபிரதிநிகள் என்ற கொள்கையை விடுவோம் அப்படிப் பன்முகப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஒன்று நடாத்தப்படவேண்டுமாயின் அதில் யார் யார் பங்கு பற்றலாம் என நினைக்கிறீர்கள்
வரதாராஜப்பெருமாள்?டக்ளஸ்?சங்கரி?நீங்கள்?நான்?
உங்களுக்காக ஒரு தகவல் இனிவரும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்கு புலிகள் தரப்பு ஆட்களைத் தெரிவு செய்துவிட்டது
வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அதில் அடங்குவர்
சரி தம்பி விடுவம்.
அப்பிடி எண்டால் ஆர் கதைக்க போறது. நல்ல கேள்வி????
கதைக்கக் கூடிய ஆரை விட்டம்..........உசிரோடு
நாங்களே எங்கட விழுதுகளாக இருந்த கன பழசுகளை முன்பின் யோசினையில்லாமல் வெட்டி விழுத்திப்போட்டு .....இப்ப முழிக்கிறம் ஆரை அனுப்புறது பேசுறதுக்கு எண்டு.
என்ரை அப்பு அடிக்கடி சொல்லுறவர் வாய்காலுக்கு கீழ மண்ணை வெட்டி உடைப்பை கட்டாதை எண்டு.
உதைத்தான் அப்பவும் செய்தவை. இப்பவும் செய்யினம்.......கிழக்கில

