04-11-2004, 11:10 AM
<b>கதிர்காமர் ஐயாவுக்கு</b>
முன்னரும் ஒரு தடவை கடிýதம் எழுதியிருந்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதோ என்னவோ தெரியவில்லை
2001 டிýசம்பர் பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி தோற்கடிýக்கப்பட்டு ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, வெளியுறுவு அமைச்சர் பதவியிலிருந்து நீங்கள் விலகிச்சென்றவேளை, உங்களுக்கு அக் கடிýதத்தை எழுதியிருந்தேன்.
வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த அந்த ஏழு வருடங்களில் நீங்கள் இலங்கைத் தமிழ்ச் சகோதரர்களுக்கு செய்தவற்றை எல்லாம் அக்கடிýதத்தில் விபரமாகக் குறிப்பிட்டிýருந்தேன்.
இப்போது மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் நடைபெற்று முடிýந்து, நீங்கள் சார்ந்த சுதந்திர முன்னணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்திருக்கும் தருணத்தில், உங்களுக்கு திரும்பவும் ஒரு கடிýதம் எழுதவேண்டுமென்று என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு உந்துதல்.
எமது இன நெருக்கடிý தொடர்பில் உலக அரங்கில் நீங்கள் செய்த பரப்புரைகளினால் மனம் நெகிழ்ந்துபோன அம்மையாரும் அவரைச் சார்ந்தவர்களும் உங்களுக்கு எவ்வாறு நன்றிக்கடனை செய்துமுடிýக்கலாம் என்று ஏங்கிக் கொண்டிýருக்கிறார்கள்.
நீங்கள் திறமையான ஒரு சட்ட வல்லுநர். காலத்தின் கோலத்தினால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர். விரும்பியோ, தயங்கியோ அரசியலுக்கு வந்த சிலர் ஜமாய்த்திருப்பதைப் போல நீங்களும் அம்மையார் தரப்புக்காக எல்லை கடந்து அபார காரியங்களை செய்து காட்டிýயிருக்கிறீர்கள். நெறிமுறைகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட நேரமில்லாமல், ஒரு சட்ட நிபுணருக்கே உரித்தான பாணியில்தான் அரசியலையும் நீங்கள் செய்திருந்தீர்கள் - தொடர்ந்தும் செய்து கொண்டு வருகிறீர்கள்.
தனது கட்சிக்காரருக்காக வழக்கறிஞர் ஒருவர் திறமையாக வாதாடுவதைப் போன்றே அரசியலையும் நீங்கள் நினைத்ததால், உங்கள் 'கட்சிக்காரர்களுக்காக" நீங்கள் அபாரமாகவே ஆளுமையை வெளிக்காட்டிýயிருக்கிறீர்கள்.
வெளியுறவு அமைச்சராக இருந்து நீங்கள் அவர்களுக்காக செய்த சேவைக்காக என்ன கைம்மாறு செய்வதென்று மூýளையைப் போட்டு குழப்பித் தடுமாறிக் கொண்டிýருக்கும் அம்மையார், உங்களை எங்கெங்கோவெல்லாம் உயர்த்திவைக்க துடிýத்துக் கொண்டிýருக்கிறார்.
அரசியல் அதிகார பீடங்களின் வாசற்படிýகளில் வசதியான மாதிரி செயற்படக்கூýடிýய ஒரு வரப்பிரசாதம் உங்களுக்கு கிடைத்ததால் பெரிய பெரிய பதவிகளுக்கெல்லாம், "நான் மிகவும் பொருத்தமானவன், என்று சற்றும் மனச் சஞ்சலமில்லாமல் நீங்களும் நினைத்து விடுகிறீர்கள்.
கடந்த வருட இறுதியிலே பொதுநலவரசு அமைப்பின் செயலாளர் நாயகம் பதவிக்கு நீங்களும் போட்டிýயிட்டPர்கள். சிம்பாப்வேயின் ஜனாதிபதி றொபேட் முகாபேக்கும், பொதுநலவரசு நாடுகளில் வெள்ளையர்களின் முகாமுக்குமிடையேயான பிரச்சினை காரணமாக ஆபிரிக்க கறுப்பு, நாடுகள் மத்தியில் தோன்றிய "கிளர்ச்சி உணர்வு' காரணமாகவே அந்த அமைப்பின் செயலாளர் நாயகம் பதவிக்கு வேட்பாளராக நீங்கள் நிறுத்தப்படக்கூýடிýய சூýழ்நிலை தோன்றியது. வெள்ளையர்களின் மேலாதிக்கத்திற்கு எதிரான ஆபிரிக்க நாடுகளின், குரலாக நீங்கள் செயற்படுவீர்கள் என்று அவர்கள் நினைத்ததாக, நீங்கள் பெருமைப்பட்டிýருப்பீர்களோ தெரியவில்லை. நல்லவேளை, டொன் மக்கினனே மீண்டும் செயலாளர் நாயகமாக தெரிவுசெய்யப்பட்டு விட்டார்.
பொதுநலவரசின் செயலாளர் நாயகமாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிýருந்தால், வெள்ளையரான மைக்கினனை விட எத்தனையோ மடங்கு அபாரமாக வெள்ளையர்களுக்காக சேவை செய்திருப்பீர்கள் நீங்கள் என்று பேசிய சிலர், நல்லவேளை கறுப்பர்கள் தப்பிக் கொண்டார்கள் என்று நையாண்டிý செய்ததை என் காதால் கேட்டேன் கதிர்காமர் ஐயா!
பொதுநலவரசு விவகாரம் முடிýந்து சில மாதங்கள் கழிந்த நிலையில், மீண்டும் இன்னொரு உயர்ந்த பதவிக்காக உங்களின் பெயர் அடிýபடத் தொடங்கியது - இலங்கையின் பிரதமர் பதவி.
கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி தோற்கடிýக்கப்பட்டு, உங்கள் சுதந்திர முன்னணியும் வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை என்ற விசித்திரமானதொரு நிலையில், பிரதமராக அநேகமாக நீங்கள்தான் வரப்போகின்றீர்கள் என்று ஒரே பேச்சு. பத்திரிகைகளும் விளாசித்தள்ளின.
இலங்கையில் அதிகப் பெரும்பான்மையான தமிழர்களுக்கு கதிர்காமர் ஐயா, உங்களில் ஒரு மட்டுமீறிய ஆத்திரம். அதற்கு மத்தியிலும் கூýட இலங்கையின் பிரதமராக ஒரு தமிழன் வரப்போகின்றானே என்று சில தமிழர்களுக்கு உள்மனதுக்குள் அவர்களை அறியாமலேயே ஒரு அப்பாவித்தனமான புளகாங்கிதம்.
ஆனால், எனக்குத் தெரியும். அவ்வாறு அந்தத் தமிழர்கள் பெருமைப்பட்டால்கூýட உங்களுக்கு அது பெருமையாக இருக்காது. ஒரு விதத்தில் அசௌகரியமாகவே இருக்கும். இன ரீதியான பிணைப்புகள் பற்றி அறவே அக்கறைப்படாத ஒரு சர்வதேச பிரஜை ஐயா நீங்கள். நான் சொல்வது உண்மைதானே?
இறுதியில் பிரதமர் பதவியும் உங்களுக்கு கிடைக்காமல் நழுவிப் போய்விட்டது. உங்களுக்கான தனது கைம்மாறைச் செய்த நிம்மதியைப் பெற அம்மையார் கொண்டிýருந்த வாய்ப்பும் தவறிப்போனது. மஹிந்த ராஜபக்ர் பிரதமராகி விட்டார்.
பிரதமர் பதவியிலெல்லாம் எனக்கு ஆசை கிடையாது என்று முன்கூýட்டிýயே, 'பொய்க்காகவேனும்" ஒரு அறிக்கையை விடுத்திருந்தால், 'கனவான்" என்ற 'கௌரவமாவது" மிஞ்சி நின்றிருக்கும். என்னதான் இருந்தாலும் நீங்களும் உளமார ஆசைப்பட்டு விட்டPர்கள் ஐயா.ஆசை யாரைத்தான் விட்டது போங்கள்!
மஹிந்த ராஜபக்ர் பிரதமராக அம்மையார் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்த வைபவத்தில் எந்த அசௌகரியத்தையும் வெளிக்காட்டாமல் நீங்கள் கலந்துகொண்டு, அவரை கட்டிýத்தழுவி உச்சிமுகர்ந்தீர்கள். இருவரும் உள்மனங்களில் என்னதான் நினைத்திருந்தீர்களோ நாம் அறியோம் கதிர்காமர் ஐயா.
ஆனால், எனக்கு ஒன்று மாத்திரம் நிச்சயமாகத் தெரியும். இந்த வகையான அசௌகரியங்களுக்கு அப்பாற்பட்டவர் நீங்கள்.
'சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் ஆழ்தல் கண்டு சிந்தை கலங்காரடி" என்று பாரதி அடையாளம் காட்டிýய 'மனவுறுதி" கொண்ட மனிதன் ஐயா நீங்கள்.
வணக்கம்
இங்கனம்சத்தியன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>