04-11-2004, 11:08 AM
கருணா குழுவினரின் அழுத்தங்களால் திணறும் மட்டு-அம்பாறை எம்.பி.க்கள்
<b>பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற பரபரப்பான சம்பவங்கள்.
'வன்னியுடன் என்ன தொடர்பு? உடனே ஊர் திரும்புங்கள்; இது கருணாவின் உத்தரவு...."
-எம்.பி.க்களுக்கு வந்த கட்டளை</b>
மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களிலிருந்து இம்முறை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது இருந்த சந்தோர் அலைகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இல்லாது போய்விட்டதாக மனம் திறந்து குமுறுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினருமாக மொத்தமாக ஐவருமே பரிதாப பாராளுமன்ற உறுப்பினர்களாக காட்சி தருகின்றனர்.
வட, கிழக்குப் பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்குழுக் கூ ட்டம் கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டில் இடம்பெற்றது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழுக் கூட்டம் தொடர்பாக செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் வீதியிலேயே நிறுத்தப்பட்டனர்.
இதுபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய பொலிஸார் மற்றும் இரானுவத்தினரும், பாராளுமன்ற உறுப்பினர்களுடைய அந்தரங்கச் செயலாளர்கள் மற்றும் சாரதிகளும் வீதியிலேயே நிறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் கூ ட்டம் காலை 10 மணிக்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளதாக கஜேந்திரகுமாரின் இல்லத்தின் பிரதான வாயிற்காவலர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் வெளியில் நின்ற ஊடகவியலாளர்கள் ஆள்மாறி ஆள் தம்முடன் நெருங்கி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கையடக்கத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு உள்ளே என்ன நடக்கின்றது என்று வினாவும் போதெல்லாம் இன்னும் ஒரு மணித்தியாலத்தில் முடிவடைந்துவிடும் பொறுமையாக இருங்கள் எனத் தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள்.
இவ்வாறு ஒரு மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் என தெரிவித்தே மாலை 6 மணியாகிவிட்ட நிலையில் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வி தங்கேஸ்வரி வெளியே எட்டி ப் பார்த்தார். இந்தநிலையில் ஊடகவியலாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ஆனால், அவர் மிகவும் பதற்றமான நிலையில் ஊடகவியலாளர்களை விலத்திக் கொண்டு அங்கு மிங்கும் பார்த்தவாறு இரு இளைஞர்களுடன் உரையாடினார். இதைத் தொடர்ந்து அவர் தனது வாகனத்தில் ஏறிக் கொண்டார். இதையடுத்து கிங்ஸ்லி இராசநாயகமும் வாகனத்தில் ஏறிக் கொண்டார்.
இவர்கள் இருந்த வாகனத்தை ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையோர் அண்டி விடாத வகையில் பொலிஸாரும், இரானுவத்தினரும் மொய்த்துக் கொண்டனர்.
இவ்வாறான நிலையில் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிஸோர் வாகனத்திலிருந்தவர்களை அனுகி தயவு செய்து கையொப்பமிட்டுச் செல்லுங்கள் என கெஞ்சிக் கொண்டிருந்தார்.
இதுவரையும் எவ்வித செய்திகளும் இன்றி வீதியில் தவம்கிடந்த ஊடகவியலாளர்கள் உர்hராகிவிட்டனர்.
காலை முதல் மாலை வரை இடம்பெற்ற கூ ட்டத்தில் மட்டு. அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒத்துப் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உள்ளே ஏதோ நடக்கின்றது. உள்ளே என்ன நடக்கின்றது என்பதை எவ்வாறாயினும் அறிய வேண்டும் என்றும், உள்ளே எப்படி ச் செல்வது என்றும் துடித்துக் கொண்டி ருந்தனர்.
இறுக்கமான பாதுகாப்புகளின் மத்தியில் எவ்வாறு உள்ளே செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது உள்ளே இருந்து வெளியே வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய மெய்ப்பாதுகாப்பு உத்தியோகத்தர் மூ லம் இதுவரை என்ன நடந்தது என்பதை ஓரளவு அறிய முடிந்தது.
காலை 10 மணிக்குக் கூ ட்டம் ஆரம்பமான போதிலும், மட்டு. அம்பாறை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரையும் எப்படியாவது வன்னிக்கு அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்யுமாறும் விடுதலைப் புலிகளின் வன்னித் தலைமைத்துவம் வேண்டுகோள் விடுத்த போதிலும், கருணா தரப்பினர் உங்களுக்கு'வன்னியுடன்" என்ன தொடர்பு உடனே ஊர் திரும்புங்கள். இது கருணா அம்மானின் உத்தரவு என, தொலைபேசி ஊடாக உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
இதற்கு மேல் எதையும் செய்ய முடி யாத நிலையில் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் பாராளுமன்ற உறுப்பினரும், ஏனைய நால்வரும் திணறிப் போனார்கள்.
ஐவரும் ஆளுக்கு ஆள் தமது நெருக்கமானவர்களுடன் மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் எப்படியும் வன்னிக்குச் செல்வதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களுக்கு கொழும்பில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இவர்களுடன் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்குப் பாதுகாப்பிற்கு வந்த இரானுவத்தினருடைய பாதுகாப்பை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தன் எம்.பி.கேட்டுக் கொண்டார். இவ்வாறான இழுபறி நிலையைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் ஒருவர் இருவராக உள்ளே சென்றார்கள்.
இந்தநிலையில் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட செல்வி தங்கேஸ்வரி, கிங்ஸ்லி இராசநாயகம், கனகசபை, ஜெயானந்தமூர்த்தி மற்றும் அம்பாறையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பத்மநாதன் ஆகியோரை அனுகி இங்கு என்ன நடக்கின்றது எனக் கேட்கத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் எதையும் சொல்ல மறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தம்முடைய உள்ளக் குமுறல்களை எவ்வாறாவது சொல்லி ஆறுதல் அடைய வேண்டும் என்பதற்காக வாய்திறக்க முற்பட்டனர்.
இந்த 'விக்டர்" யார் தம்பி எம்மை கொழும்பை விட்டு உடனே வெளியேறு என்பதற்கு எனக் கேட்டார். அப்போது ஐயா இந்த விக்டர் யார்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. கருணா குழுவில் கல்விக்குப் பொறுப்பானவர். கல்விக்குப் பொறுப்பானவர் ஏன் அரசியலில் தலையிட வேண்டும் எனக் கேட்கப்பட்டது.
மட்டு. அம்பாறை மாவட்டத்தில் யார் தலைவன்? யார் யார் எதற்குப் பொறுப்பு?, யார் யார் கட்டளையிடுவது என்ற ஒரு கட்டுப்பாடும் கிடையாது. 'கொண்டுவா என்றால் கொண்டு வருபவர்கள்தான்" மட்டு.
அம்பாறை மாவட்டங்களில் மிஞ்சியிருப்பவர்கள் என்று அந்த வயது முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இவ்வாறு உரையாடி க் கொண்டிருக்கும்போது செல்வி தங்கேஸ்வரியின் கையடக்கத் தொலைபேசி ஒலிக்கத் தொடங்கியது, வேண்டா வெறுப்பாக அவர் பதிலளித்துக் கொண்டி ருந்தார். அவரின் பதிலின் மூலம், கருணா தரப்பினரால் கடும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது என்பதை புரியக் கூடியதாக இருந்தது.
இதையடுத்து செல்வி தங்கேஸ்வரி அழுகுரலில் ஏனைய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், நான் மட்டக்களப்பிற்குச் செல்லப் போகின்றேன். போய் வருவதற்கு அனுமதியைப் பெறுங்கள் சம்பந்தன் ஐயாவிடம் என கண்கலங்கத் தெரிவித்தார்.
இந்தநிலையில் மட்டக்களப்பிலிருந்து இவர்களை இரானுவக் கவச வாகனம் சகிதம் பாதுகாப்பாக அழைத்து வந்த மேஜர் திலங்க, இவர்களை எப்படி யும் மட்டக்களப்பிற்கு அழைத்து வருமாறு தமது தலைமைப்பீடம் உத்தரவிட்டுள்ளதாக சம்பந்தன் எம்.பி.யிடம் தெரிவித்தார்இதையடுத்து இவர்கள் ஐவரும் மறுநாள் (வியாழக்கிழமை) காலை இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு தேவை. இவர்களை விடுவிக்க முடி யாது என மேஜர் திலங்கவுடன் சம்பந்தன் எம்.பி. வாதிட்டார். இறுதியில் இரானுவத் தளபதி பலகலவுடன் தொடர்புகளை சம்பந்தன் எம்.பி.ஏற்படுத்தி தமது தரப்பு நியாயங்களையும், ஐவரின் முக்கியத்துவத்தையும் தெளிவு படுத்தினார்.
இருந்தபோதிலும் சம்பந்தன் எம்.பி.யின் வேண்டுகோளை இரானுவத் தளபதி நிராகரித்தார். இதையடுத்து இரவு 10 மணியளவில் ஜெயானந்தமூர்த்தி தவிர்ந்த ஏனைய நால்வரையும் பலத்த பாதுகாப்புடன் இரானுவத்தினர் மட்டக்களப்பிற்குக் கூட்டி ச் சென்றனர்.
மேலே குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணிவரை இடம்பெற்ற நிகழ்வுகள் இது ஒருபுறமிருக்க மட்டு.அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டக்களப்பில் உள்ள பெரிய உப்போடை அலுவலகத்தில் வைத்துக் கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை விசு மற்றும் துரை ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இந்தக் கலந்துரையாடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி 'சுகயீனம் காரணமாக பிரசன்னமாகவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டி ருந்தது.
இந்தச் சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கு தடைவிதிக்கப்படாவிட்டாலும், வன்னித் தலைமைத்துவத்துடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு கருணா தரப்பினரால் தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறானதோர் நிலையில் மட்டு.அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்கள் என ஆரம்பத்தில் ஊகங்கள் தெரிவிக்கப்பட்ட போதும், இவர்கள் ஐவரும், ஒட்டுமொத்தமாக இந்தப் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்து விட்டனர்.
கருணா தரப்பினரின் கடும்போக்கு மற்றும் அழுத்தங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக இவர்கள் ஐவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளபோதிலும், எக்காரணம் கொண்டும் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டாம் என வன்னித் தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வாறானதோர் நிலையில் மட்டு. பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்திக்கும், கருணா குழுவினருக்குமிடையில் கருத்து முரண்பாடுகளும், விரிசல்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
இம்முறை மட்டு. அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் அரசியலில் அனுபவம் என்பது அறவே அற்றவர்களாகக் காணப்படுவதால் கருணா குழுவினருடைய அழுத்தங்களுக்குள் அகப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.
ஆனால், ஜெயானந்தமூர்த்தி பத்திரிகையாளர் என்ற முறையில் அரசியல் அனுபவங்களையும், அனுகுமுறைகளையும் நன்கு கற்று அறிந்தவர் என்ற வகையில் கருணா தரப்பினரின் சில நடைமுறைகளுக்கு எதிர்ப்பலை தெரிவித்து வருகின்றார்.
இது இவ்வாறிருக்க கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெயானந்தமூ ர்த்தி தனது ஆதரவாளர்களை வாழைச்சேனையில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவரைக் கடத்துவதற்கு கருணா குழுவைச் சேர்ந்த இருவர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் ஜெயானந்தமூ ர்த்தியின் ஆதரவாளர்களினால் தடுக்கப்பட்டுள்ளது.
5 ஆம் திகதி இடம்பெற்ற மட்டு. அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின்போது தமது முயற்சிகள் தோல்வியடைந்ததை விசு 'பறவை பறந்துவிட்டது" அதாவது ஜெயானந்தமூர்த்தி தப்பித்துக் கொண்டார் என்பதை பட்டும்படாதவாறு தெரிவித்துக் கொண்டார்.
மட்டு.அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தனித்துச் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு கருணா தரப்பினர் ஒருபோதும் இடம் கொடுக்கப் போவதில்லை என்பதை நடந்துமுடி ந்த பல சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.
ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருணா குழுவினருடைய அழுத்தங்களைச் சகித்துக் கொண்டி ருந்தாலும் இதைப்போன்று பெண் பாராளுமன்ற உறுப்பினரால் முடியவில்லை. கண்ணீர் வடி த்துக் கொண்டேயிருந்தார்.
இவர் எதையும் வாய்விட்டுக் கதைக்க முடியாதளவிற்கு கருணா குழுவைச் சேர்ந்த இருவர் செல்வி தங்கேஸ்வரியை சுற்றிக் கொண்டே திரிந்தார்கள். இவர்கள் அடி க்கடி தமது தரப்பினருடன் தொலைபேசியில் தொடர்புகளை ஏற்படுத்தி உரையாடி க் கொண்டேயிருந்தனர்.
கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தி இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டி ருந்தால் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியிருப்பார். ஏனெனில், வன்னித் தலைமைப் பீடத்திற்கும், கருணாவிற்குமிடையில் விரிசல்கள் ஆரம்பமானவுடனேயே சில வர்த்தகப் பிரமுகர்களிடமும், தமது ஆதரவாளர்களிடமும், தான் ஒரு அமைச்சர் ஆகுவேன் என பல தடவைகள் ராஜன் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் தமிழ் வேட்பாளர்களுக்கும், கருணா தரப்பினருக்குமிடையில் சந்திப்புகள் இடம்பெற்றபோது, மட்டு. அம்பாறை மாவட்ட நலன்கள் மற்றும் அபிவிருத்தி மட்டுமே தேர்தல் பிரசாரங்களின்போது கதைக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியம் பற்றிக் கதைக்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டபோது, இதற்கு தமது முழு எதிர்ப்பினையும் தெரிவித்தவர் மட்டு.மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர்கள் ஜோசப் பரராஜசிங்கம். இவருடைய நிலைப்பாட்டை ஆமோதித்தவர் திகாமடுல்ல மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் அரியநாயகம் சந்திரநேரு.
கருணா தரப்பினரால் நடத்தப்பட்ட பல எதிர்ப்புப் பேரணிகள், கூ ட்டங்கள் ஆகியவற்றில் தமது பங்களிப்பினை முற்றாகத் தவிர்த்தவர் ஜோசப் பரராஜசிங்கம். இந்த நிலையில் ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தல் பிரசார நடவடிக்கையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு, ஆரம்பத்தில் கருணா தரப்பினரால் தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, நடந்துமுடி ந்த தேர்தலிலிருந்து ஜோசப் பரராஜசிங்கமும், அரியநாயகம் சந்திரநேருவும் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.
உண்மையில் ஜோசப் பரராஜசிங்கம் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாமைக்குக் இரு காரணங்கள் உண்டு. மட்டக்களப்பிலிருந்து வடபகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு நகர மக்கள் வாக்களிப்பில் ஈடுபடாமை என்பவை பிரதான காரணம்.
இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் 90 சதவீதமானவர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டபோதிலும், நகரில் 20 சதவீதமானவர்களே வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
ஜோசப் பரராஜசிங்கத்தை கருணா தரப்பினர் ஓரம் கட்டினாலும் மட்டு.நகர மக்கள் ஓரம்கட்டவில்லை. இவர்கள் முழுமையான வாக்களிப்பில் ஈடுபட்டி ருந்தால் நிச்சயமாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பார்.
தேர்தல் தினத்தன்று மட்டக்களப்பு நகரில் நிலவிய கடும் பதற்றம் மற்றும் கருணா தரப்பினரால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தம் என்பவற்றாலேயே நகர மக்கள் வாக்களிப்பில் ஈடுபடவில்லை.
திகாமடுல்ல மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், சந்திரநேருவை எப்படி யும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் கருணா தரப்பினர் கடும் போக்குகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறானதோர் நிலையில் மட்டு. அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவும், புறக்கணிப்பும் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களாவது சுயமாகவும், சுதந்திரமாகவும் இயங்குவதற்கு கருணா குழுவினர் இடமளிக்க வேண்டும்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>