04-11-2004, 11:03 AM
கருணாவை தனிமைப்படுத்தும் புலிகளின் தாக்குதல் ஆரம்பம்!
அனைவரும் எதிர்பார்த்தது போன்று கருணா குழுவினருக்கு எதிரான தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்துவிட்டனர். திருகோணமலைக்கு அப்பால் கருணாவின் கட்டுப்பாட்டி ல் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் குறிப்பிட்டளவு பகுதியை விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கருணாவின் பகுதிகளைநோக்கித் தொடர்ந்தும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலகி சுமார் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் கருணாவுக்கு எதிராக இந்தத் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். கருணா விலகிய ஓரிரு நாட்களுக்குள்ளேயே கருணாவுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எவ்வேளையிலும் பாரிய தாக்குதல்களை தொடுப்பார்களென பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருந்தபோதிலும், புலிகள் உடனடி யாக எந்தத் தாக்குதலையும் தொடுக்கவில்லை.
கிழக்கில் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தவும், கருணாவுடன் இருக்கும் போராளிகளை அவரிடமிருந்து விடுவிக்கவும் விடுதலைப் புலிகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்ததுடன், தலைமைக்கு எதிரான கருணாவின் புரட்சியின் பின்னர் அவரது பலம் மற்றும் பலவீனத்தை மிகத் துல்லியமாக அறியும் நடவடி க்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
கருணாவுக்கு விசுவாசமாக இருக்கும் பொறுப்பாளர்கள் யார், கருணா குழுவில் இருந்து விலகிச் செல்லவிரும்பும் போராளிகள் யார் என்ற தகவலை எல்லாம் இந்தக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் மிகவும் துல்லியமாகத் திரட்டி யதுடன், கருணாவின் நடமாட்டங்கள் குறித்தும், கருணா குழுவினருக்கு எதிராகத் தாங்கள் தாக்குதல் ஒன்றைத் தொடுக்கும் பட்சத்தில் கருணா குழுவினர் எவ்வாறு பதில் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பது குறித்தும் விடுதலைப் புலிகள் ஆராய்ந்து வந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டி லேயே இருந்து வந்தது. புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேற்றப்பட்ட பின்பும் இதே நிலைமையே அங்கு இருந்தது. திருகோணமலை மாவட்டத்தையும், மட்டக்களப்பு மாவட்டத்தையும் பிரிக்கும் மிகவும் குறுகலான தரைவழிப் பாதை வெருகல் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலும் இரு மாவட்டங்களையும் ஆறு ஒன்று பிரிக்கின்றது.
ஆற்றின் வடபுறக் கரையில் திருகோணமலை மாவட்டத்தின் எல்லையில் விடுதலைப் புலிகளும், ஆற்றின் தென்புறக் கரையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் கருணா குழுவினரும் நிலைகொண்டிருந்தனர். கருணாவுக்கு எதிராக உடனடி யாக புலிகள் தாக்குதல்களை ஆரம்பிக்கலாமென எதிர்பார்த்து கருணா குழுவினர் ஆற்றின் தென்புறக் கரையில் பாரிய பதுங்கு குழிகளை அமைத்து வலுவான காவலரண்களுடன் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி 24 மணிநேரமும் மிகுந்த உர்hர் நிலையில் முன்னரங்க நிலைகளில் போராளிகளை நிறுத்தியிருந்தனர்.
கருணா குழுவினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் உடனடியாகத் தாக்குதலை ஆரம்பிக்காத அதேநேரம், தேர்தலின்போது அல்லது தேர்தல் முடி வடைந்ததும் இந்தத் தாக்குதல் எவ்வேளையிலும் ஆரம்பமாகலாம் என்ற ஊகங்கள் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருந்தது. அதேபோன்று தேர்தல் முடி வடைந்து ஒருவாரத்திற்குள் கருணா குழுவினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தங்கள் நிலைகளை தாக்கி அழித்துக்கொண்டே விடுதலைப் புலிகள் முன்னேற முயல்வார்களென கருணா குழுவினர் எதிர்பார்த்துக் காத்திருந்ததுடன், அவ்வாறானதொரு தாக்குதலை புலிகள் ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடும் பதில் தாக்குதல் தொடுக்கும் வகையில் ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைகளை அமைத்து முழு ஏற்பாட்டுடனும் காத்திருந்தனர்.
கடந்த சில தினங்களாக வெருகல் ஆற்றின் வடபுறத்தே விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், அந்தப் பகுதியிலேயே அவர்கள் தாக்குதல்களை ஆரம்பிக்கலாமென்ற எதிர்பார்ப்பை கருணா குழுவினருக்கு ஏற்படுத்தவே. அதற்கேற்ப கருணா குழுவினரும் தங்கள் எதிர்த் தாக்குதல்களுக்கான விய10கங்களை வகுத்துக் காத்திருந்தனர்.
ஆனாலும், வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வெருகலுக்கு தெற்கே கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள கதிரவெளிக்கும், வாகரைக்கும் இடையே இருக்கும் கடலோரப் பகுதியான பால்ச்சேனைப் பகுதியில் சுமார் 50 படகுகளில் அடுத்தடுத்து வந்து தரையிறங்கிய புலிகள் அப்பகுதியில் பாதுகாப்பாக நிலைகொண்டதுடன், கருணா அணியினருக்கு எதிராக, வடபுறத்தே வெருகல் நோக்கியும், தென்புறத்தே வாகரை நோக்கியும் பாரிய தாக்குதலை ஆரம்பித்தனர்.
வெருகல் ஆற்றின் தென்பகுதியில் நிலைகொண்டி ருந்த கருணா குழுவினரை மையமாக வைத்தே இந்தப் பாரிய தாக்குதல் ஆரம்பமானது. அதேநேரம், கருணா குழுவினருக்கு தரைவழிய10டாக உதவிகள் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் பால்ச்சேனைப் பகுதியில் இருந்து புலிகளின் மற்றொரு பாரிய அணியொன்று கண்டலடிப் பகுதியை மையமாக வைத்து தென்பகுதிநோக்கி முன்னேறத் தொடங்கியது.
தங்களுக்குப் பின்புறமாக புலிகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்ததை உணர்ந்துகொண்ட கருணா குழுவினர் பின்புறத்தால் தங்களை நோக்கி முன்னேறிவரும் புலிகளின் படையணிக்கு எதிராக எவ்வாறு தாக்குதல் தொடுப்பதென்று குழப்பமடைந்துபோயிருந்த வேளையில், ஆற்றின் வடபுறத்தே திருகோணமலையின் எல்லைப் பகுதியில் இருந்தும் புலிகளின் படையணி கருணா குழுவினர் மீது ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதலை சரமாரியாக மேற்கொண்டது.
பால்ச்சேனைப் பகுதியில் தரையிறங்கி, வெருகல் ஆற்றைநோக்கி முன்னேறத் தொடங்கிய புலிகள் நீண்டதூரம் செல்லும் மோட்டார்கள் மூலம் மிகக் கடும் தாக்குதலைத் தொடுக்கவே இருதரப்பிற்கும் இடையே சிலமணிநேரம் கடுமையான பீரங்கிச் சமர் நடைபெற்றது. ஆனாலும், வெருகலாற்றின் தென்புறக் கரையில் இருந்த கருணா குழுவினர் மீது திருகோணமலை எல்லைப் பகுதியில் இருந்தும், பால்ச்சேனைப் பகுதியில் இருந்தும் முன்னேறத் தொடங்கிய புலிகள் கடும் தாக்குதலைத் தொடுக்கவே கருணா குழுவினர் நிலை தடுமாறி அங்கிருந்து தப்பியோடத் தொடங்கினர்.
இதேவேளை, வெருகலாற்றின் தென்புறக் கரையில் நிலைகொண்டி ருந்த கருணா குழுவினருக்கு மேலதிக ஆட்களை வழங்குவதற்காக கதிரவெளிப் பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த பெருமளவு போராளிகள் வெருகலாற்றின் தென்பகுதிநோக்கியும், பால்ச்சேனைப் பகுதியில் இருந்து முன்னேறிக்கொண்டி ருக்கும் புலிகளின் படையணிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுக்கவும் அனுப்பப்பட்டனர்.
ஆனாலும், சண்டை மூண்டு சிலமணிநேரத்திற்குள், தாக்குதலுக்குத் தலைமைவகித்து தங்களைநோக்கி முன்னேறி வந்துகொண்டி ருந்த புலிகளின் பொறுப்பாளர்களை இனங்கண்ட கருணா குழுவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலரும், நூற்றுக்கான போராளிகளும் தமது நிலைமையைத் தெரியப்படுத்தி விடுதலைப் புலிகளுடன் சென்று இணைந்துகொண்டனர்.
முன்னேறிக்கொண்டிருக்கும் புலிகளுக்கு எதிராக எதிர்த் தாக்குதலை நடத்த அனுப்பப்பட்ட போராளிகளில் 400 இற்கும் மேற்பட்டோர் புலிகளுடன் இணைந்து விடவே கருணா குழுவினர் நிலைதடுமாறிப் போய்விட்டனர். பதில் தாக்குதலைத் தொடுக்கச் சென்றவர்களே தங்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதை உணர்ந்துகொண்ட கருணா குழுவினர் காடுகளுக்கூ டாகத் தப்பியோடத் தொடங்கிவிட்டனர்.
வாழைச்சேனைக்கு வடக்கே மாங்கேணி முதல், வெருகல் வரையிலான பகுதிகளுக்கான கட்டளைத் தளபதியாக தனது மூத்த சகோதரரான ரெஜியையே கருணா நியமித்திருந்தார். வெருகலாற்றினூடாக புலிகள் ஊடறுத்து மட்டக்களப்புக்குள் நுழைவதைத் தடுப்பதில்தான் தங்களின் பாதுகாப்பு தங்கியிருப்பதை உணர்ந்துகொண்டே அப்பகுதிக்கான பொறுப்பாளராக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், சகோதரருமான ரெஜியை கருணா நியமித்திருந்தார்.
ஆனாலும், புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகி சிலமணிநேரத்தில் நிலைமைகள் தலைகீழாகிவிடவே, ரெஜி அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்று, வாகரையை அடைந்ததுடன், அங்கிருந்து தொலைத்தொடர்புக் கருவிகள் மூ லம் புலிகளுக்கு எதிரான தாக்குதலுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்தார். ஆனாலும், அவரது கட்டளையை ஏற்றுக்கொள்ளாத பொறுப்பாளர்களும் போராளிகளும் புலிகளுடன் சென்று இணைவதிலும் தப்பிச் செல்வதிலுமே முனைப்புக் காட்டினர்.
அதிகாலை 1 மணிமுதல் மூ ன்றுமணிவரை விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலைத் தொடுத்து முன்னேறிச் சென்று கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், வெருகல் ஆற்றின் தென்பகுதிக் கரையில் நிலைகொண்டிருந்த கருணா குழுவினரையும் அங்கிருந்து விரட்டி யடிக்கவே பால்ச்சேனை முதல், திருகோணமலை எல்லைப்புறம் வரையிலான சுமார் 24 கிலோமீற்றர் தூரம் வரையான பகுதி அதிகாலை நான்கு மணிக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ப10ரண கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதேவேளை கருணா குழுவினரால், போரிடுவதற்காக, வலுக்கட்டாயமாக எல்லைப்புறப் பகுதிகளுக்குக் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டி ருந்த போராளிகளுக்கு இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் விடுதலைப் புலிகள் மிகக் கவனமாகவும் நிதானமாகவும், தாக்குதலை நடத்தி இதேபோன்றே, கருணா குழுவினரால் சண்டைக்காக நிறுத்தப்பட்ட போராளிகளில் பெருமளவானோர் புலிகள் மீது தாக்குதல்களை நடத்துவதைத் தவிர்த்து, புலிகளுடன் சென்று இணைந்துகொண்டனர்.
இந்தச் சமரில் காயமடைந்த கருணா தரப்பினரில் பலருக்கு முழங்காலுக்குக் கீழேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கதிரவெளி கடற்படை முகாமுக்குப் பொறுப்பாக இருந்த கருணா குழுவைச் சேர்ந்த ஜெயம் என்பவரே படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னேறிச் சென்ற புலிகளின் அணிகள் கதிரவெளியில் உள்ள கருணா குழுவினரின் கடற்படை முகாமையும், அதற்குச் சமீபமாக இருந்த ஆட்லறித் தளங்களையும் சுற்றிவளைத்து அங்கிருந்தவர்களைக் கைது செய்ததுடன், அந்தத் தளங்களை உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் களமுனையில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
இதேவேளை, விடுதலைப் புலிகள் கதிரவெளிவரை முன்னேறி அப்பிரதேசங்களைக் கைப்பற்றி வெருகலாற்றுக்கு வடக்கே நிலைகொண்டி ருந்த தங்கள் அணியுடன் இணைந்துகொண்ட அதேவேளை, விடுதலைப் புலிகளின் மற்றைய அணிகள் பால்ச்சேனையில் இருந்து தென்புறமாக வாகரை நோக்கி முன்னேறத் தொடங்கின. வெருகலாற்றின் தென்புறப் பகுதியில் தங்கள் நிலைகளைத் தகர்த்துக்கொண்டு புலிகளால் முன்னேற முடியாதெனக் கருணா குழுவினர் எண்ணியிருந்த போதிலும், நிலைமை தலைகீழாகிவிடவே, வாகரை நோக்கி முன்னேறும் புலிகளைத் தடுத்து நிறுத்த கருணா குழுவினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக வாழைச்சேனை மற்றும் மாங்கேணிப் பகுதிகளில் இருந்து பல நூற்றுக்கணக்கான ஆட்களை கருணா குழுவினர் வாகரைநோக்கி அனுப்பத் தொடங்கினர். மகளிர் படையணித் தளபதியான சாவித்திரியின் தலைமையில், மதனன் படையணியைச் சேர்ந்த 300 பேரும், சம்பந்தன் தலைமையில் விசாலன் 2 ஆவது படையணியைச் சேர்ந்த 100 பேரும், அகிலன் தலைமையில் வினோதன் படையணியைச் சேர்ந்த 100 பேரும் வாகரைப் பகுதிநோக்கி அனுப்பப்பட்டனர்.
இவர்களுக்கு உதவியாக சினைப்பர் படையணியும், மோட்டார் தாக்குதல் அணிகளும் அனுப்பப்பட்டு நண்பகல் அளவில் கடும் எதிர்த் தாக்குதல் தொடுக்கப்பட்ட போதிலும், புலிகளின் உக்கிர தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாது இவர்கள் பின்வாங்கித் தப்பிச் சென்றுவிட்டனர். வெள்ளிக்கிழமை மாலை விடுதலைப் புலிகள் வாகரைப் பகுதியை அண்மித்தபோது அப்பகுதியில் கருணா குழுவைச் சேர்ந்த பெருமளவு சிறுவர்களே நின்றதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் பாரிய தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடி யாத நிலையில் கருணா குழுவினர் தொடர்ந்தும் பின்வாங்கவே வெள்ளிக்கிழமை மாலை விடுதலைப் புலிகள் வாகரைப் பிரதேசத்தையும் தங்கள் ப10ரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், தொடர்ந்தும் அங்கிருந்து முன்னேறத் தொடங்கினர்.
நேற்றுச் சனிக்கிழமை காலை விடுதலைப் புலிகள், ஏற்கனவே தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் தங்கள் நிலைகளை வலுப்படுத்தி வருவதுடன், பனிச்சங்கேணியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையில் கருணா குழுவினர் வாழைச்சேனைக்கு வடக்கே முக்கிய பிரதேசங்கள் எல்லாவற்றிலும் இருந்து வெள்ளிக்கிழமை மாலையே பின்வாங்கிவிட்டதாகவும், வெள்ளிக்கிழமை இரவுக்குப் பின்னர் வாழைச்சேனைக்குத் தெற்கே முக்கிய நிலைகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாகவும் இரானுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் முதல் கட்டத் தாக்குதல் வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிýவடைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இந்தத் தாக்குதல் மூýலம் விடுதலைப் புலிகள் கருணா குழுவினரின் பிடிýயிலிருந்து சுமார் 45 கிலோமீற்றர் வரையிலான பிரதேசத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிýனுள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் கருணா குழுவின் பகுதிகளை நோக்கித் தொடர்ந்தும் முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படும் அதேவேளை, வாழைச்சேனைப் பகுதியை ஊடறுத்து வெலிக்கந்தை ஊடாகச் செல்லும் மட்டக்களப்பு - பொலனறுவை வீதி இரானுவத்தினரின் கட்டுப்பாட்டிýலேயே இருக்கின்றது. தற்போது வீதிக்கு வடக்கே விடுதலைப் புலிகளும், தெற்கே கருணா குழுவினரும் நிலைகொண்டுள்ள அதேநேரம், வீதியில் இரானுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் முன்னேற முயலும் விடுதலைப் புலிகள் மீது கருணா குழுவினர் தாக்குதலை நடத்தும் பட்சத்தில் வீதியில் நிலைகொண்டுள்ள இரானுவத்தினர் இந்தத் தாக்குதலில் சிக்கவேண்டிýய கட்டாய சூýழ்நிலை ஏற்படும். இதேநேரம், இந்த வீதியை ஊடறுத்து விடுதலைப் புலிகள் கருணா குழுவினரின் பகுதிக்குள் செல்வதற்கு தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை எனவும் இரானுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலகிய நாள்முதல் கருணாவின் நடவடிýக்கைகளுக்கு இரானுவப் புலனாய்வுத் துறை ப10ரண ஆதரவை வழங்கிவருவதுடன் இரானுவத் தளபதி லெப்.ஜெனரல் லயனல் பலகலவும் கருணாவுடன் பலதடவைகள் தொடர்புகொண்டிýருந்தார். மோதல் வெடிýக்கும் பட்சத்தில் கருணா குழுவினருக்குப் படையினரின் ப10ரண ஆதரவு கிடைக்குமெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த வீதியைத் தாண்டிýச் செல்ல தாங்கள் விடுதலைப் புலிகளை அனுமதிக்கப் போவதில்லை எனப் படையினர் கூýறியுள்ளனர்.
ஆனாலும் படையினருடன் எவ்வித முரண்பாடுகளையும் ஏற்படுத்தாமல் இந்த வீதியைத் தாண்டும் மார்க்கங்களை விடுதலைப் புலிகள் நன்கு அறிந்துள்ளதைக் கருணா குழுவினரும் நன்கு அறிந்துள்ளனர். இதையடுத்தே இந்த வீதிக்குத் தெற்கே முக்கிய பகுதிகளில் நிலைகொண்டிýருந்த கருணா குழுவினர் அங்கிருந்து விலகி அம்பாறையில் தொப்பிகல மற்றும் கஞ்சிகுடிýச்சாறு காட்டுப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டதாக இரானுவப் புலனாய்வுப் பிரிவினரின் மற்றொரு தகவல் தெரிவித்துள்ளது.
கருணாவை தனிமைப்படுத்தும் அதேவேளை, அவருடன் இருக்கும் போராளிகளைப் பாதுகாப்பாக மீட்பதும் தங்களது முக்கிய குறிக்கோளென விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதால் மோதல்கள் மீண்டும் வெடிýக்கும் பட்சத்தில் தனது தரப்பைச் சேர்ந்த மேலும் நூற்றுக் கணக்கான போராளிகள் விடுதலைப் புலிகளுடன் இணைந்துவிடலாமென்ற அச்சத்தில் மோதலைத் தவிர்த்துத் தங்கள் தரப்பினரை முக்கிய நிலைகளில் இருந்து கருணா திருப்பி அழைத்துள்ளதாகவும் கூýறப்படுகிறது.
கருணா குழுவுடன் இருக்கும் போராளிகள் 50 வீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்போராளிகள் என்பதுடன், ஆண் போராளிகளில் பெருமளவானோர் 13 வயதிற்கும் குறைவானவர்களே என்றும் தெரிவிக்கப்படுகிறது. வாகரைப் பகுதியில் அணி அணியாக வந்த விடுதலைப் புலிகளின் கட்டுமஸ்தான ஆண்போராளிகளை கருணா தரப்பின் 13 வயதிற்கும் குறைவான சிறுவர்களே எதிர்க்கவேண்டிýய நிலை ஏற்பட்டிýருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கருணாவை விடுதலைப் புலிகள் துரத்திச் சென்றாலும் ஏனைய போராளிகளை காப்பாற்றுவதிலும், அவர்களை கருணாவிடம் இருந்து பிரித்தெடுப்பதிலும் புலிகள் ஆர்வம் காட்டிý வருகின்றனர். இதேநேரம், கருணா தரப்பினரைக் காப்பாற்றவேண்டிýய தேவை இரானுவத் தரப்பினருக்கு ஏற்பட்டிýருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மோதல் தொடங்கிய அன்றையதினம் இரானுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் மட்டக்களப்பிற்குச் சென்று நிலைமைகளை அவதானித்ததுடன், மந்திராலோசனைகள் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் கருணாவின் கை ஓங்கியிருந்தால் அவர்களுக்கு இரானுவத்தினரின் உதவிகள் பெருமளவில் கிடைத்திருக்கலாமெனவும், அவ்வாறான நிலைமை ஏற்படாது போனதால் தற்போது கருணா குழுவினரை எவ்விதத்திலாவது பாதுகாக்க வேண்டுமென்ற நிலையில் படையினர் இருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்கள் கூýறுகின்றன.
வெறுமனே கருணாவை மட்டும் தங்கள் வசம் கொண்டுவருவதால் இரானுவத்தினருக்கோ, அல்லது தென்பகுதி அரசியல் தலைமைகளுக்கோ எதுவித பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. கருணா வசம் பெருமளவு போராளிகளும், அவரது கட்டுப்பாட்டிýல் பெருமளவு நிலப்பிரதேசமும் இருந்தால் மட்டுமே கருணாவினால் படையினருக்கோ, அல்லது தென்பகுதி அரசியல் தலைமைகளுக்கோ லாபம் ஏற்படும். கருணாவை ஒரு சக்தியாகக் காட்டிý அதன் மூýலம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசியல் ரீதியிலும், இரானுவ ரீதியிலும் காய்களை நகர்த்த முடிýயுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனாலும், கருணா குழுவினருக்கு எதிரான புலிகளின் முதல்நாள் தாக்குதல் கிழக்கின் உண்மை நிலையை அப்பட்டமாகத் தெளிவுபடுத்திவிட்டது. விடுதலைப் புலிகள் கூýறுவதுபோன்று கருணா ஒரு தனிமனிதன் என்பதையே இந்தத் தாக்குதல் நன்கு தெளிவுபடுத்துகின்றது. புலிகளின் தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடிýயாது தப்பியோடுவதிலேயே கருணா குழுவினர் ஆர்வம் காட்டிýவருகின்றனர். அவர்களுடன் உள்ள நூற்றுக்கணக்கான போராளிகள் புலிகளுடன் இணைந்து விட்டதும், புலிகளின் தாக்குதல் மேலும் தொடர்ந்தால் அவர்களுடன் இணைய மேலும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் தயாராக இருப்பதும் கருணா குழுவினருக்கு மிகப்பெரும் நெருக்கடிýயை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ளாமல் பின்வாங்கிச் சென்று காட்டுப் பகுதிகளுக்குள் மறைந்திருப்பதே தற்போதைய நிலையில் பாதுகாப்பானதெனவும் இதனால் எதிர்காலத்திலாவது தன்னுடன் குறிப்பிட்டளவு போராளிகளை தக்கவைத்துக் கொள்ள, முடிýயுமென கருணா உணர்ந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. இதனால் அவர் புலிகளுக்கு எதிராக பாரிய எதிர்த்தாக்குதலை திடPரென மேற்கொள்ளக்கூýடிýய வாய்ப்புகள் இல்லையென்றே இரானுவப் புலனாய்வுத் தகவல்கள் கூýறுகின்றன.
இந்த நிலையில், கருணாவை நோக்கி காட்டுப் பகுதிகளுக்குள்ளும் கூýட விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் முன்னேற்ற நடவடிýக்கை முடிýவொன்று கிட்டும்வரை முடிýயாதென்பதே உண்மையாகும்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>