04-11-2004, 10:07 AM
குடாநாட்டில் இராணுவத்தின் சிறப்பு உளவுப்படை ~சிலந்தி|
இரகசியமாக நகர்ந்து இரையை நெருங்கி அதன் பலம், பலவீனத்தைக் கணிப்பிட்டதும் அதிவேகமாகப் பாய்ந்து வந்து தாக்கி விஷத்தைக் கக்கி எதிரியை அழிக்கும் பாணி சிலந்திக்குரியது.
இதே சிலந்தியின் இயல்புகளைக் கொண்ட படைப்பிரிவு ஒன்றைத் தோற்றுவிக்கும் நடவடிக்கையில் அரச படையினர் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது புதிய செய்தி. 'சிலந்தி" என்ற பெயரில் இராணுவத்தின் உளவுப்பிரிவைச் சேர்ந்தோருக்குப் பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கை தற்போது தீவிரமாக்கப்பட்டிருக்கிறது.
யாழ். குடாநாட்டுக்கான இராணுவக்கட்டளை அதிகாரி மேஐர் nஐனரல் சுசில் சந்திரபாலவின் வழிகாட்டலின்கீழ் இராணுவத்தின் உளவுப்பிரிவினர்களுக்கு சிலந்தி எனப்படும் விசேட புலனாய்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சியை ஏற்கனவே நான்கு குழுவினர் முடித்துள்ளனர். ஆனால் அது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியில் கசியவில்லை. இப்போது ஐந்தாவது குழு பயிற்சியை முடித்து வெளிவந்திருக்கும் சந்தர்ப்பத்திலேயே இது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
பயிற்சியை முடித்த ஐந்தாவது அணியில் 34 படையினர் இருந்தனர். இவர்களின் பயிற்சி நிறைவு வைபவம் கடந்த 31ஆம் திகதி பலாலியிலுள்ள இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மேஐர் nஐனரல் சுசில் சந்திரபால பயிற்சியை முடித்த படையினருக்கு சின்னங்களைச் சூட்டியதுடன் சிறப்பாகப் பயிற்சிகளை முடித்த லான்ஸ் கோப்ரல் ரணசிங்கவுக்கு கேடயத்தையும் வழங்கியிருந்தார்.
~சிலந்த| என்ற இந்தப் பயிற்சியின் நோக்கம் தான் என்ன? விசேட யுத்தப் புலனாய்வுப் பாதுகாப்புத் திட்டம் என்ற இத்திட்டத்திற்கே சிலந்தி என பெயரிடப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நவீன போர் உத்திகளுக்கு ஏற்ப சுயமாகச் செயற்பட்டு எதிரிகளைத் தாக்கி அழித்தல் இதுவே இந்தத்திட்டத்தின் அடிப்படை அம்சமாகும்.
சுயமாக இலக்குகளை கண்டறிந்து மிகக் குறைந்த வளத்துடன் அந்த எதிரி இலக்குகளை அழிப்பதற்கு சாதாரணமான பயிற்சி, நுண்ணறிவு என்பன போதாது.
ஒரு பெரும் படைப்பிரிவு என்றால் மரபு வழி யுத்தத்திலோ, கெரில்லா யுத்தத்திலோ பல பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். ஒரு பற்றாலியனில் உளவுத் தகவல்களைத் திரட்ட, திட்டமிடலை மேற்கொள்ள வழி நடத்த என பல பிரிவுகள் உள்ளடக்கப்படும்.
இவ்வாறு பெரும் படைப் பிரிவுகளை மரபு வழியுத்தத்தங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். யாழ். குடாநாடு போன்ற போர் முனைகளில் புலனாய்வுப் பிரிவு தகவல்களைத் திரட்டி திட்டமிடல் பிரிவுக்கு அதைச் சமர்ப்பித்த பின்னர் தாக்குதல் நடத்துவதென்பது கால தாமதத்தை மட்டு மன்றி நடமாடும் இலக்குகளைத் தவறவிட்டு விட கூடிய சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தும்.
இதனால் யாழ்ப்பாணம் போன்ற சிக்கல் நிறைந்த பகுதிகளில் புத்திக்கூர்மையுடன் செயற்பட்டு முடிவெடுத்து தாக்குதல் நடத்தக்கூடிய வல்லமை பெற்றவர்களை உதிரிகளாக நடமாட விடுவதே பொருத்தமானது எனப் படைத்தரப்பு இனம் கண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இதே பாணியைத்தான் கடந்த பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் கொழும்பிலும் புலிகளின் ~பிஸ்டல்| அணிகளின் செயற்பாடுகள் பற்றி அறியப்பட்டிருக்கின்றன.
தனித்தனி, இலக்குகளைத் தேடி புலனாய்வுத் தகவல்களைத் திரட்டி சந்தர்ப்பம் வாய்க்கும் போது அதைத் தாக்கி அழித்துவிட்டு வேகமாகத் தப்பி விடுவதுதான் புலிகளின் பிஸ்டல் குழுக்களின் தாக்குதல் பணியாகும்.
இதே தாக்குதல் முறைக்கான பயிற்சிகளைத்தான் இராணுவத்தரப்பு இப்போது ஆரம்பித்திருக்கின்றது. புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவது, திட்டமிட்டு அந்த எதிரி இலக்கை அழிப்பது என்பவற்றுக்குத் தேவையான அறிவையும், பயிற்சியையும் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் வட பகுதி இராணுவத்தலைமை இறங்கியிருக்கிறது.
50 நாட்களாக இரவு-பகல் குடாநாட்டில் பல்வேறு இடங்களிலும் இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. புலனாய்வுப் படைப் பிரிவு, கொமாண்டோ படைப்பிரிவு என்பன இந்தப் பயிற்சிகளை அடிப்படை உதவிகளை வழங்கியிருக்கின்றன.
ஏற்கனவே இராணுவத்தின் உளவுப்பிரிவின் ஒரு பற்றாலியன் குடாநாட்டில் நிலை கொண்டிருக்கின்ற போதும் அதற்கு மேலதிகமாக சுமார் 175 படையினரை புலனாய்வு மற்றும் தாக்குதல் நடவடிக்கைக் காக தயார் படுத்தியிருக்கிறது படைத் தரப்பு.
எதிர்காலத்தில் மோதல்கள் ஏற்படுகின்ற போது இந்த அணிகளின் செயற்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்று படைத்தரப்பு எதிர்பார்ப்புடன் இரகசியமாகச் செயற்படும் புலிகளை நசுக்கவும் இது பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நாட்டில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தாலும் குடாநாட்டில் நிலை கொண்டிருக்கும் படையினரை ஒரு முழு அளவிலான போருக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.
இராணுவத்தை எப்போதும் தாக்குதல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனையை தற்போது தொண்டர் படைகளின் தளபதியாக இருக்கும் மேஐர் சரத் பொன்சேகா கொண்டுள்ளார்.
இவர் எந்தவொரு இராணுவ நிலையும் விலக்கப்படக்கூடாதென்பதிலும், இராணுவத்தினருக்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறார்.
மேஐர் nஐனரல் சரத் பொன்சேகா குடாநட்டுக்கான படைத்தளபதியாக இருந்தபோது படையினருக்கான விசேட காலாற்படைப் பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தவர். நான்கு கட்ட பயிற்சிகள் இதுவரை முடிவடைந்திருக்கின்றன.
அதுபோன்றே கவச மீட்பு கவச வாகனங்களைச் செலுத்தும் படைப்பிரிவு ஒன்றும் அண்மையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் சமாதான காலத்தில் இராணுவத்தினர் தம்மைத் தயார்ப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும்.
எதிர்கால நடவடிக்கைகளுக்காக படையினர் மேற்கொண்டுவரும் இத்தகைய தயாரிப்புக்கள் யாவுமே ஒரு போர் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் இராணுவத்தினர் ஒரு முழுமையான போர்த் தயாரிப்பு நிலையில் இருக்கின்றனர். ஆங்காங்கே வீதிச் சோதனைகள், காவலரண் புனரமைப்புக்கள் என்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய அரசின் நிலைப்பாடு, சமாதான முயற்சிகளில் அது காட்டவிருக்கும் அக்கறை என்பன இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. புதிய அரசு புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றபோதும், அதற்கான முன் முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. புதிய அரக Nஐ.வி.பி.யின் துணையுடன் நிறுவப்பட்டிருப்பதால் புலிகளுடனான சமாதானப் பேச்சு உடனடியாக ஆரம்பிப்பதற்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை.
ஆனால் வெளிநாட்டு அழுத்தங்கள் பேச்சை ஆரம்பிக்குமாறு அரசுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன இத்தகைய நிலையில் அரசு எடுக்கும் முடிவுகள் நிரந்தர சமாதானத்துக்காக அமையுமா? சண்டைக்கான வழியா? என்பதைத் தீர்மானிக்கும்.
virakesari + tamilnaatham