04-11-2004, 07:12 AM
ஆள் இல்லாமல் கருணா திண்டாட்டம்: இலங்கை அகதிகள் தகவல்
ராமேஸ்வரம்:
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளுடன் சண்டை போடுவதற்கு ஆட்கள் இல்லாமல் கருணா திண்டாடுவதாக இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தப்பி வந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், கருணா தலைமையிலான படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் வீடுகளைக் காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள். சிலர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.
பாம்பன் பகுதியில் 2 இளைஞர்கள் இலங்கை ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்றபோது போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் பிரதீபன் (வவுனியாவைச் சேர்ந்தவர்), கனகேஸ்வர் (கிளிநொச்சியைச் சேர்ந்தவர்) என்பது தெரியவந்தது.
இருவரும் போலீஸாரிடம் கூறுகையில், இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் பெரும் மோதல் வெடித்துள்ளது.இதனால் அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
கருணா படையினரிடம் போதுமான ஆட்கள் இல்லை. இதனால், தமிழ் இளைஞர்களை கட்டாயப்படுத்தி தங்களது படையில் சேர்க்கிறார்கள். எங்களது பெற்றோர்களை மிரட்டி பிள்ளைகளை உடனடியாக படையில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இதற்குப் பயந்துதான் பல தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு ஓடிக் கொண்டிருக்கின்றன. திரிகோணமலை உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளுக்கு தமிழர் குடும்பங்கள் இடம் மாறிக் கொண்டுள்ளன.
தமிழகத்திற்கு வர பல தமிழ்க் குடும்பங்கள் காத்துக் கொண்டுள்ளன. ஆனால் போதிய பணம் இல்லாததால் அவர்களால் தப்பி வர முடியவில்லை என்றனர். இரு இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
thatstamil.com